அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 09

சலொமோனுக்கு கர்த்தரின் இரண்டாங் காட்சி.

1.  சலொ மோன் கர்த்தருடைய ஆலயத்தையும், இராச அரண்மனையை யுந் தான் செய்யவேண்டுமென்று விரும் பின எல்லாவற்றையுங் கட்டிமுடித்த பின்பு, சம்பவித்ததென்னவெனில்: 

2. கர்த்தர் காபாவோனிலே சலொ மோனுக்குத் தரிசனமானது போல் இன்னொருமுறையும் அவனுக்குத் தரிசனமாகி,

3. அவனுக்குச் சொன்னதாவது: நமது சமுகத்தில் நீ செய்த உன் விண்ணப் பத்தையும், உன் வேண்டுதலையுங் கேட்டோம்; நீ கட்டின இந்த ஆலயத்தில் நமது நாமம் என்றென்றைக்கும் விளங்கத் தக்கதாக அதைப் பரிசுத்தமாக்கினோம்; நமது இருதயமும், நமது கண்ணோக்க மும் எந்நாளும் அங்கேயேயிருக்கும்.

4. நாம் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, நமது கட் டளைகளையும் நமது நியாயங்களையும் அனுசரித்து வரும்படிக்கு நமது சமுக்தில் கபடற்றவிதமும் உத்தம விதமுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல் நீ நடப்பாயானால்,

5. இஸ்றாயேலின் சிம்மாசனத்தின் மேல் வீற்றிருக்குஞ் சுதந்தரவாதி உனக் கில்லாமல் போவதில்லையென்று உன் தகப்பனாகிய தாவீதோடு நாம் சொன்ன படியே இஸ்றாயேலின் மேலுள்ள உன் இராச்சியபாரத்தின் சிம்மாசனத்தை என் றென்றைக்கும் நிலைக்கப் பண்ணுவோம்.

6. நீங்களும் உங்கள் பிள்ளை களுமோ நம்மை விட்டுப் பின்வாங்கி நாம் உங்களுக்கு விதித்த நமது கற்பனை களையும், நமது கட்டளைகளையும் அநுசரியாமல் போய் வேறு தேவர்களைச் சேவித்து அவர்களைப் பணிந்து கொள் வீர்களாகில்,

7. நாம் இஸ்றாயேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்கள் நிற்காதபடி செய்வோம்;  நமது நாமம் விளங்க நாம் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை நமது சமுகம் நில்லாது தகர்த்தெறிவோம்; அப் பொழுது இஸ்றாயேலர் சகல ஜனங்களும் பழமொழியாகவும், இழிவுச் சொல்லாவு மிருப்பார்கள்.

8. அப்போது இவ்வாலயமே திருஷ் டாந்தமாயிருக்கும்.  இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து நிந்தையாய்ப் பேசி: கர்த்தர் இந்தத் தேசத்திற்கும், இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்ததென்ன என்று கேழ்ப் பான்.

9. அதற்கு மற்றவர்கள்: இந்தச் சாதி யார் தங்கள் பிதாக்களை எஜிப்த்து தேசத் திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டு வேறு தேவர்களைப் பின்பற்றி அவர் களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால் கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர் கள்மேல் வரப்பண்ணினார் என்று மறு மொழி சொல்லுவார்கள் என்றருளினார்.

10. சலொமோன் கர்த்தருடைய ஆலயம் இராச அரண்மனையாகிய இவ் விரண்டு மாளிகைகளையுங் கட்டி முடித்த இருபதாம் வருஷம் முடிந்தபின் னர்,

11. அவனுடைய விருப்பத்தின்படி யெல்லாம் அவனுக்குக் கேதுரு மரங் களையும், சப்பீன் மரங்களையும், பொன் னையும் கொடுத்துவந்த தீரின் இராசா வாகிய ஈராமுக்கு இராசாவாகிய சலொ மோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

12. தீரிலிருந்து ஈராம் தனக்குச் சலொ மோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கப் புறப்பட்டு வந்தான்; ஆனால் அவைகள் அவனுக்குப் பிரியப்பட வில்லை.

13. அதினாலே அவன்: என் சகோ தரனே, நீ எனக்குக் கொடுத்த  பட்டணங்கள் இவைகள்தானோ? என்று அவைகளுக்கு இந்நாள் மட்டும் வழங்கி வருகிறபடி காபுல் என்று பெயரிட்டான்.

14. மீண்டுங் சலொமோன் இராசா வுக்கு நூற்றிருபது தலேந்து பொன்னும் அனுப்பினான்.

15. சலொமோன் இராசா தான் கடவு ளுடைய ஆலயத்தையும், தனது அரண் மனையையும், மெல்லோவையும், எருச லேமின் மதிலையும், எசேரையும், மகத் தோவையும், காசேரையுங் கட்டுவதற்குச் செய்த மொத்தச் செலவு அவ்வளவாம்.

16. எஜிப்த்தின் இராசாவாகிய பரா வோன் புறப்பட்டுவந்து காசேரைப் பிடித்து அதை அக்கினிக்கிரையாக்கி, அதில் குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு அப்பட்டணத்தைச் சலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந் தான்.

17. இன்னமுஞ் சலொமோன் அந்தக் காசேர் பட்டணத்தையும், கீழ் பெத்தோ ரோனாவையுங் கட்டினான்.

18. பாகாலாத்தையும், வனாந்தர வெளியிலுள்ள பல்மீராவையம், 

19. தனக்கிருக்கும் அரணில்லாத கிரா மங்ளையம் அரணித்து இரதங்களிருக் கும் பட்டணங்களையும், குதிரை வீர ரிருக்கும் பட்டணங்களையும் எருசலே மிலும் லீபானிலுந் தான் அரசாண்ட தேச மெங்குந் தனக்கிஷ்டமானதையெல்லாங் கட்டினான்.

20. இஸ்றாயேல் புத்திரரல்லாது வேறாயிருந்த அமோறையர், ஏத்தையர், பெரேசையர், ஏவையர், எபுசேயர் ஆன சகல ஜனங்களையும்,

21. இஸ்றாயேல் புத்திரர் சங்காரம் பண்ண விடாமல் தேசத்தில் மீதியா யிருந்த அவர்கள் பிள்ளைகளையுஞ் சலொமோன் தனக்குக் கப்பங் கட்டச் செய்தான். இந்நாள் வரையிலும் அவர்கள் பகுதி கொடுத்து வருகிறார்கள்.

22. இஸ்றாயேல் புத்திரரில் ஒருவரை யுஞ் சலொமோன் பணிவிடை செய்ய விடவில்லை;  அவர்கள் யுத்தவீரரும் அவ னுக்கு உத்தியோகஸ்தர்களும், பிரபுக் களும், தலைவர்களும், இரத வீரரும், குதிரை ராவுத்தருமாயிருந்தார்கள். 

23. சலொமோனின் வேலைகள் எல் லாவற்றையும் விசாரித்து நடப்பித்து வேலையாட்களைக் கண்காணிக்கிற தற்கு ஐந்நூற்றைம்பது பேர் தலைமை யான காரியஸ்தர்களாயிருந்தார்கள்.

24. பராவோனின் குமாரத்தி தாவீ தின் நகரத்திலிருந்து புறப்பட்டுச் சலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையில் குடியிருக்க வந்தாள்; அப்போதுதான் (இராசா) மேலோவைக் கட்டினான்.

25. சலொமோன் கர்த்தருக்குக் க்டின பலி பீடத்தின்மேல் வருஷத்தில் மூன்று முறை சர்வாங்கத் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளையும் இட்டுக் கர்த்தரின் சந்நதியிலிருக்கிற பலிபீடத் தின் மேல் தூபங் காட்டி வந்தான்.  தேவாலயமும் முழுதுஞ் சோடித்தாகி விட்டது.

26. இராசாவாகிய சலொமோன் இதுமே தேசத்தில் செங்கடல் ஓரத்திலே ஜலாத்துக்குச் சமீபத்திலுள்ள அசியோங் கபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.

27. அந்தக் கப்பல்களிலே ஈராம் சமுத் திர யாத்திரையில் பழகின கெட்டிக்கார ரான தன்னுடைய கலாசுக்காரரை அனுப் பினான்.  இவர்கள் சலொமோனுடைய ஆட்களோடேகூட வேலை செய்வார் கள்.

28. அவர்கள் ஒப்பீருக்குப் போய் அவ்விடத்திலிருந்து நானூற்றிருபது தலேந்து பொன்னை இராசாவாகிய சலொமோனிடத்தில் கொண்டுவந் தார்கள்.