அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 09

சவுலும் சமுவேலும்.

1. பெஞ்சமீன் கோத்திரத்தில் சீயஸன்னும் பேருள்ள பராக்கிரமசாலியான ஒரு மனிதனிருந்தான். இவன் அமியேல் குமாரன்; இவன் சாரோர் குமாரன்; இவன் பெக்கோராத் குமாரன்; இவன் அபியா குமாரன்; இவன் பெஞ்சமீன் கோத்திரத்தானான ஒரு மனிதனின் குமாரன்.

2. அவனுக்குச் சவுலென்று பேர் கொண்ட மிகவுஞ் சிறந்த ஒரு நல்ல குமாரனிருந்தான். இஸ்றாயேல் குமாரர்களில் அவனிலும் சவுந்தரியவான் இல்லை; மற்றச் சனங்கள் எல்லாம் அவன் தோள்பட்டை மட்டும் வர அவன் அதற்கு மேல் உயர்ந்திருந்தான்.

3. சவுலின் தகப்பனாகிய சீஸ் என்பவனுடைய கழுதைகள் காணாமற் போயின; சீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: வேலைக்காரரில் ஒருவனை இட்டுக்கொண்டு எழுந்து போய்க் கழுதைகளைத் தேடு என்றான்.

4. அவர்கள் இருவரும் எப்பிராயீம் மலையையும், சலிசா பூமியையுங் கடந்து தேடி அவைகளை அங்கு காணாதபடி யால் சலிம் பூமியைக் கடந்தார்கள், அங்கேயுங் காணவில்லை. ஜெமினி நாட்டில் முதலாய்த் தேடியும் அகப்பட வில்லை;

5. அவர்கள் சூப் என்னும் நாட்டில் வந்தபோது, சவுல் தன்னுடனிருந்த ஊழி யனை நோக்கி: என் தகப்பன் சிலவிசை கழுதைகளின்மேலுள்ள கவலையை விட்டு நமது பேரில் தானே ஏக்கமா யிருக்கலாமாதலால் வா, திரும்பிப் போவோம் என்றான்.

6. அதற்கு அவன்: இந்த ஊரிலே தேவனுடைய மனிதனொருவர் இருக் கிறார்; அவர் மகா பெரியவர். அவர் சொல்லுவதெல்லாந் தப்பாமல் நடக்கும். இப்போது அங்கு போவோம். நாம் எதற் காக வந்தோமோ அந்த வழியைச் சிலவிசை நமக்குக் காட்டுவார் என்றான்.

7. அப்போது சவுல் தன் வேலைக் காரனைப் பார்த்து: இதோ போவோம்; ஆனால் தேவனுடைய மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்? நமது சாக்குகளில் உரொட்டியில்லை. தேவ னுடைய மனிதனுக்குக் கொடுக்கிற தற்குப் பணமும் வேறு யாதொன்றும் இல்லையென்று சொன்னான்.

8. மறுபடியும் ஊழியன் சவுலுக்கு மறுமொழியாக: ஸ்தாதேரென்னும் வெள்ளி நாணயத்தில் கால் பங்கு என் கையிலிருக்கின்றது. நமக்கு வழிகாட் டும்படி தேவனுடைய மனிதனுக்க அதைக் கொடுப்போமென்றான்.

9. முற்காலத்தில் இஸ்றாயேலில் தேவனிடத்தில் ஆலோசனை கேட்கப் போகிறவனெவனும்: ஞான திருஷ்டி களிடத்தில் போவோம் வாருங்கள் என் பான்; ஏனெனில், இன்று தீர்க்கதரிசி யென்று சொல்லப்படுகிறவன் அக்காலத் திலே ஞான திருஷ்டிக்காரனென்று அழைக்கப்படுவான்.

10. சவுல் வேலைக்காரனை நோக்கி: உன் வார்த்தை மெத்த நல்லது; வா போவோமென்று சொன்னான். அப்ப டியே தேவனின் மனிதனிருந்த பட்டணத்துக்குப் போனார்கள்.

11. அவர்கள் பட்டணத்து மேட்டில் ஏறினபோது பெண்டுகள் தண்ணீர் மொள்ள வரக் கண்டு: இங்கு ஞான திருஷ்டிகர் இருக்கிறாரொவென்று அவர் களைக் கேட்டார்கள்.

12. அவர்கள் அவர்களுக்கு மறு மொழியாக: ஆம் இருக்கிறார். இதோ உங்களுக்கு எதிரே முன் இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்று சனங்கள் உயர்ந்த மேட்டிலே பலியிடுகிறதைப் பற்றி அவர் இன்றைக்குத் தான் பட்டணத்திற்கு வந்திருக்கிறார்.

13. நீங்கள் பட்டணத்தில் நுழைந்த மாத்திரத்தில் அவர் உயர்ந்த மேட்டிலே சாப்பிட ஏறுகிறதற்கு முன் அவரைக் காண்பீர்கள்; அவர் வரும் பரியந்தஞ் சனங்கள் போசனம் பண்ணமாட்டார் கள்; ஏனெனில், அவர் பலியை ஆசீர் வதிக்கிறார்; பின்பு அழைக்கப்பட்டவர் கள் போசனம் பண்ணுவார்கள்; இப் போது ஏறுங்கள்; அவரை இந்நேரத்தில் காணலாம் என்றார்கள்.

14. அவர்கள் பட்டணத்துக்குப் போய்ப் பட்டணத்தின் நடுவே சேர்ந்த போது சமுவேல் உயர்ந்த மேட்டில் ஏறுகிறதற்குப் புறப்பட்டு வருகையில் அவர்களுக்குத் தென்பட்டார்.

15. மேலுஞ் சவுல் வர ஒருநாளைக்கு முந்தி ஆண்டவர் சமுவேல் காதுகேட்க வெளிப்படுத்தினதாவது: 

16. நாளை இப்போதிருக்கிற இந்த நேரத்திலேயே பெஞ்சமீன் நாட்டானா கிய ஒரு மனிதனை உன்னிடம் அனுப்பு வோம்; நம் பிரசையாகிய இஸ்றாயே லுக்கு அதிபதியாக அவனை அபிஷேகம் பண்ணுவாய். அவன் பிலிஸ்தியர் கையி னின்று நமது பிரசையை மீட்பான். ஏனெனில், நம் பிரசையைக் கடாக்ஷித் தோம், அவர்கள் குரல் சப்தம் நமது மட்டும் வந்தது.

17. சமுவேல் சவுலைக் கண்டபோது, இதோ நாம் உனக்குச் சொன்ன மனிதன்; அவன்தான் நமது பிரசையை ஆளுவா னென்று ஆண்டவர் அவனுக்குச் சொன்னார்.

18. சவுல் வாசல் நடுவிலே சமுவே லிடத்தில் அணுகி வந்து: ஞானதிருஷ்டி கருடைய வீடு எங்கே எனக்குக் காண்பியும்; உம்மை மன்றாடுகிறே னென்றான்.

19. சமுவேல் சவுலுக்கு மறுமொழி யாக ஞானதிருஷ்டிகன் நானே, என்னுடன் இன்று சாப்பிடும்படி எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன்; உன் உள்ளத்திலிருக்கிறவைகளை எல் லாம் உனக்குச் சொல்லுவேன்.

20. மூன்று நாளைக்கு முன் இழந்த கழுதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவைகள் கண்டடையப் பட்டன; இஸ்றாயேலில் உந்நதமான வைகள் ஆருக்கிருக்கும்; உனக்கும் உனது தகப்பன் வீட்டுக்குமல்லோ என்றார்.

21. சவுல் மறுமொழியாகச் சொன் னது: நான் இஸ்றாயேலின் அதிக சின்ன கோத்திரத்தின் ஜெமினி குமாரனாய் இருக்கிறேனல்லவா? என் சந்ததி பெஞ்ச மீன் கோத்திரத்து வம்சங்களிலெல்லாம் மிகவும் அற்பமானதல்லவா? நீர் இப்ப டிப்பட்ட வார்த்தையை என்னிடம் பேசுவானேன் என்றான்.

22. சமுவேல் சவுலையும், அவன் வேலைக்காரனையும் இட்டுக் கொண்டு அவர்களைப் போசன சாலைக்குள் கூட்டிக் கொண்டுபோய் அழைக்கப்பட் டவர்களுக்குள்ளே முதல் இடத்தை அவர்களுக்குக் கொடுத்தான். ஏறக் குறைய முப்பது மனிதர்கள் அவ்விடத் தில் இருந்தார்கள்.

23. சமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பாகத்தைக் கொடுத்து உன்னிடத்தில் பத்திரமாய் வைக்கச் சொல்லியிருந் தேனே அதைக் கொண்டு வந்து வை யென்றான்.

24. அப்போது சமையற்காரன் ஒரு முன்னந் தொடையை எடுத்து சவுல் முன் வைத்தான்; அப்பொழுது சமுவேல்: இதோ, அது உனக்கென்று வைக்கப் பட்டது; அதை உன் முன்பாக வைத்துச் சாப்பிடு. நான் சனங்களை அழைத்த போது அது உனக்காகவே காப்பாற்றப் பட்டது என்று சொன்னான். அன்று சவுல் சமுவேலோடு சாப்பிட்டான்.

25. பிறகு அவர்கள் உயர்ந்த மேடை யிலிருந்து பட்டணத்திற்கு இறங்கி வந் தார்கள். சமுவேல் உப்பரிகையில் சவுலோடு பேசினான். சவுல் மேல் வீட்டிலே படுக்கை முஸ்திப்பு செய்து தூங்கினான்.

26. இருவருங் காலமே எழுந்திருந் தார்கள். வெளிச்சமானபோது சமுவேல் மேல் வீட்டிலிருந்த சவுலைக் கூப்பிட்டு: உன்னை அனுப்பி விட வேண்டும். எழுந் திருந்து வாவென்றான்; சவுல் அப்படியே எழுந்து வந்தான். இவனுஞ் சமுவேலு மாக இருவரும் புறப்பட்டார்கள்.

27. அவர்கள் பட்டணத்துக் கடைசி மட்டும் இறங்கி வந்தபோது சமுவேல் சவுலைப் பார்த்து: உன் வேலைக்காரனை நமககு முன்னே நடந்து போகச் சொல்லு, நீ சற்றே தரித்து நில்லு; நான் ஆண்டவ ருடைய வாக்கை உனக்குத் தெரிவிப் பேனென்றான்.