நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 09

அபிமெலேக்கு அநியாயமாய்ச் சிம்மாசனத்தில் ஏறினதும், --ஜோவாத்தான் உவமையைச் சொல்லி ஜனங்களுக்கு வருங்கேட்டை அறிவித்ததும், சிக்கிமித்தார் அபிமெலேக்குக்கு விரோதமாகக் கலகம் பண்ணினதும், --அவர்கள் தோற்றுப் போனதும், --அபிமெலேக்கு கொல்லப்பட்டதும்.

1. அப்போது ஜெரோபாவால் குமாரன் அபிமெலேக் சிக்கேமிலிருந்த தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய் அவர்களையுந் தன் தாயினுடைய தந்தை வீட்டாரையும் பார்த்துச் சொன்னதாவது: 

2. நீங்கள் சிக்கேம் பட்டணத்தார் எல்லா ரையும் அழைத்து: ஜெரோபாவால் குமாரரா கிய எழுபது பேரும் உங்களை ஆள்வது நல மோ, அல்லது ஒருவன் மாத்திரம் ஆள்வது நலமோ என்று அவர்களைக் கேளுங்கள். நான் உங்கள் எலும்பும் மாம்சமுமானவனென்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.

3. அதே பிரகாரம் அவன் தாயின் சகோதரர் சிக்கேமிலிருக்கிற சகல மனுஷருக்கும் அந்த வார்த்தைகளை எல்லாஞ் சொல்லவே, அவர்க ளெல்லாரும்: அவன் நம்முடைய சகோதர னென்று சொல்லித் தங்கள் இருதயம் அபிமெ லேக்கைப் பின் செல்ல இஷ்டமானார்கள். 

4. ஆகையால் அவர்கள் பாவாலின் பெரித் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எ டுத்து அவனுக்குக் கொடுத்தார்கள். அவைக ளால் அபிமெலேக் தரித்திரரையும் நாடோடி களையுஞ் சேவகத்துக்கு அமர்த்திக்கொண் டான். அவர்களும் அவனைப் பின் பற்றினார் கள்.

5. அவன் எப்பிராவில் தன் தகப்பன் வீட்டுக்குப் போய்த் தன் சகோதரரான ஜெரோபாவால் மக்கள் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொன்றான். சகலரிலும் இளையவனான ஜெரோபாவால் குமாரனாகி ய ஜோவாத்தாம் மாத்திரந் தப்பித்து ஒளிந்து கொண்டான்.

6. சிக்கேமிலிருந்த சகல மனிதர்களும் மெல்லோ பட்டணத்தின் சகல குடும்பங் களும் ஒன்றுகூடிப் போய்ச் சிக்கேமிலிருந்த கர்வாலி மரத்தடியில் அபிமெலேக்கைத் தங் கள் இராஜாவாக ஸதாபித்துக் கொண்டார் கள்.

7. அது சங்கதி ஜோவாத்தாமுக்குத் தெரி விக்கப்பட்டபோது அவன் போய் கரிசிம் மலையுச்சியினின்று உரத்த சத்தமாய்க் கூப் பிட்டு: சிக்கேம் வாசிகளே, சர்வேசுரன் உங்க ளுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று விரும்புவீர்களாகில் நீங்களும் எனக்குச் செவி கொடுங்கள்.

8. விருட்சங்கள் தங்களுக்கு ஒர் இராஜா வை அபிஷேகம் பண்ணும்படி போய் ஒலிவ மரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு இராஜாவா யிருவென்றான்.

9. அதற்கு ஒலீவ் மரம்: தேவர்களும் மனித ரும் உபயோகம் பண்ணுகிற என் கொழுமை யை நான் விட்டு மரங்களை அரசாளப் போ வேனோவென்றது.

10. அப்பொழுது மரங்கள்: சீமைஅத்தி மரத்தை நோக்கி: நீ வந்து எங்கள் இராஜாவாயிருக்கச் சம்மதி என்றபோது, 

11. அத்திமரம்: நான் என் மதுரத்தையும் நற்கனிகளையும் விட்டுவிட்டு மற்ற மரங்க ளுக்குள்ளே தலைவனாயிருக்கப் போவே னோ என்றது.

12. அப்பொழுது விருட்சங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து எங்கள் எஜமா னாயிருவென்றன.

13. அதற்கு திராட்சச் செடி தேவனையும் மனஷரையும் மகிழப்பண்ணும் என் இரசத் தை விட்டு மரங்களை அரசாள நான் எண்ணு வேனோவென்றது.

14. அப்போது மரங்களெல்லாம் முட்செ டியைப் பார்த்து: நீ வந்து எங்களை ஆளக்கட வாய் என்றன.

15. அதற்கு முட்செடி : நீங்கள் மெய்யாக வே என்னை உங்கள் அரசனாக ஸ்தாபித் தால் எல்லோரும் என் நிழலில் வந்து இளைப் பாறுங்கள். வந்து இளைப்பாற மனமில்லை யோ, முட்செடியினின்று அக்கினிப் புறப் பட்டு லீபானின் கேதுரு மரங்களைச் சுட்டெ ரிக்கக்கடவது என்றது.

16. ஆனதால் (சிக்கேம் வாசிகளே) நீங்கள் இப்போது நல்ல கருத்தோடு துஷ்டத்தனமில் லாமல் அபிமெலேக்கை உங்கள் இராஜாவா கத் தெரிந்துகொண்டு, ஜெரோபாவாலிடமா யும் அவன் வீட்டாரிடமாயுஞ் சரிவர நடந்து உங்களுக்காகச் சண்டை செய்த அவனுடைய உபகாரங்களுக்குப் பிரதி உபகாரஞ் செய்து,

17. மதியானித்தர் கையினின்று உங்களை மீட்கத் தன் பிராணனை ஒரு பொருளாக எண்ணாமலிருந்தாரல்லோ?

18. நீங்களோ இன்று என் தகப்பன் வீட்டுக்கு விரோதமாய் எழும்பி அவருடைய எழுபது குமாரரையும் ஒரு கல்லின்மேல் கொன்ற அவருடைய வேலைக்காரியின் மக னும் உங்கள் சகோதரனமாயிருக்கிற அபிமெ லேக்கைச் சிக்கேம் வாசிகளுக்கு இராஜாவாக எற்படுத்தினீர்கள்.

19. ஆகையால் நீங்கள் ஜெரோபாவாலை யும், அவன் குடும்பத்தாரையும் நல்ல மனது டன் குற்றமற்ற விதமாய் நடத்தினீர்களாகில் இன்று அபிமெலேக்கின்மேல் நீங்கள் சந்தோ ஷப்படுங்கள். அவனும் உங்கள்மேல் சந்தோஷ மாயிருக்கட்டும்.

20. நீங்கள் கெட்ட கருத்தோடு அதைச் செய்திருந்தால் அவனினின்று அக்கினிப் புறப் பட்டு சிக்கேம் வாசிகளையும், மெல்லோ பட் டணத்தையுஞ் சுட்டெரிக்கக்கடவது. சிக்கேமூ ராரிலிருந்தும் அக்கினிப் புறப்பட்டு அபிமெ லேக்கைச் சுட்டெரித்துப் பட்சிக்கக்கடவது என்றான்.

21. இவையயல்லாஞ் சொன்ன பிறகு, தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து பேராவுக்கு ஓடிப்போய் அவ்விடத்திலே வசித் தான்.

22. ஆனபடியால் அபிமெலேக் இஸ்ரா யேலை மூன்று வருஷம் அரசாண்டான்.

23. பிறகு ஆண்டவர் அபிமெலேக்குக்கும் சிக்கேமூராருக்குங் கொடும் பகையை வரப் பண்ணினார். இவர்கள் அவனை பகைக்க ஆரம்பித்தார்கள்.

24. ஜெரோபாலின் எழுபது குமாரரு டைய கொலை செய்து இரத்தஞ் சிந்தின பழியைத் தங்கள் சகோதரனாகிய அபிமெ லேக்கின் மேலும், அவனுக்கு உதவிபுரிந்த மற்ற சிக்கேம் பிரபுக்களின் மேலுஞ் சாட்டி,

25. அவனுக்கு விரோதமாய் மலைச் சிக ரத்தில் பதிவிடைக்காரரை வைத்தார்கள். அவன் வராமுன்னே அவர்கள் அவ்வழிபோக்கு வரத்தாயிருந்த யாவரையுங்கொள்ளையிட்டார்கள். அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

26. அதற்குள்ளே ஓபேத் குமாரனான காவால் தன் சகோதரதோடு சிக்கேமுக்கு வந்தான். அவன் வந்ததைப் பார்த்து, சிக்கே மூரார் அவனை நம்பி,

27. வெளியே புறப்பட்டுத் திராட்சத் தோட்டங்களைப் பாழாக்கிப் பழங்களை மிதித்து ஆடிப் பாடி தங்கள் தேவனின் ஆலயத்திற் குட் பிரவேசித்துப் புசித்துக் குடித்து அபிமெலேக்கைச் சபித்தார்கள்.

28. அப்போது ஓபேத் குமாரன் காவால்: அபிமெலேக் யார்? சிக்கேம் எங்கே? நாங்கள் அவனை சேவிக்க வேண்டியதென்ன? அவன் ஜெரோபாவால் குமாரானல்லவா? அவன் தன் உழியனான சேபூலைச் சிக்கேம் தகப்ப னாகிய ஏமோர் மனுஷருக்குத் தலைவனாக ஏற்படுத்தவில்லையா? அவனை நாங்கள் சே விக்கவேண்டியதென்ன?

29. ஆ! இந்த ஜனங்கள் மாத்தரம் என் கைக்குள் இருந்தாலே தாவிளை நான் அபிமெ லேக்கைக் கொன்றுபோடுவேன் என்றான். அச்சமயத்தில் யாரோ அபிமெலேக்கை நோக் கி: உன் படைகளின் சேனைகளை நீ சேர்த் துப் புறப்பட்டுவா என்று சொன்னான்.

30. உள்ளபடி பட்டணத்துக்கு அதிபதி யான சேபூல் ஓபேதின் குமாரன் காவாலுடை ய வசனங்களைக் கேட்டு மிகவுங் கோபமாகி,

31. இரகசியமாய் அபிமெலேக்குக்கு ஆளை அனுப்பி: ஓபேதின் குமாரன் காவால் தன் சகோதரரோடு சிக்கேமுக்கு வந்து உனக்கு விரோதமாய்ப் பட்டணத்தைப் பிடிக்கப் பார்க்கிறான்.

32. ஆனதால் நீ இரவில் எழுந்து உன்னுட னிருக்கிற ஜனங்களோடுகூட வயலிலே பதிவி டையாயிரு;

33. காலமே சூரியோதத்தில் பட்டணத் தின்மேல் விழு; அவன் தன் ஜனங்களோடு உனக்கு எதிரே புறப்படும்போது உன்னால் கூடுமானதை அவனுக்கு செய்யயன்று சொல் லி அனுப்பினான்.

34. அப்படியே அபிமெலேக் தன் சகல சேனைகளோடு இரவிலெழுந்து சிக்கேமைச் சுற்றி நான்கு இடங்களில் பதிவிருந்தான்.

35. ஓபேதின் குமாரன் பாவால் புறப் பட்டுப் பட்டணத்தின் ஒலிமுக வாசலில் நின்றான். அப்போது அபிமெலேக்கும் அவன் சேனைகளும் பதுங்கியிருந்த இடங்களில் நின்று எழுந்தார்கள்.

36. காவால் அந்த ஜனங்களைப் பார்த்த போது சேபூலை நோக்கி: இதோ மலைகளி னின்று திரளான ஜனங்கள் இறங்கி வருகிறார் களென்றான். அதற்கு அவன்: (இல்லை) நீ மலைகளின் நிழலைக் கண்டு அவைகளை மனுஷரென்று ஏமாந்திருக்கிறாய்; இது உன் கண்மயக்கமே என்றான்.

37. மறுபடியுங் காவால்: தேசத்தின் மேட்டிலிருந்து ஜனங்கள் புறப்பட்டு இறங்கி வருகிறார்கள். இதோ ஒரு படை கர்வாலி மரத்தைப் பார்க்கும் வழியாய் வருகிறது என் றான்.

38. அதற்குச் சேபூல்: நாங்கள் அபிமெ லேக்கைச் சேவிக்கவே காரணமென்னவென்று நீ முன்னே சொல்லியிருந்தாயே அப்படியே பேசின உன் வாயயங்கே? நீ நிந்தித்த ஜனங் கள் அவர்கள் அல்லவா? இப்போது நீ வெளிப் பட்டு அவர்களோடு யுத்தம் பண்ணு என்றான்.

39. சிக்கேம் ஜனங்கள் பார்த்துக்கொண் டிருக்க காவால் போய் அபிமெலேக்கை எதிர்த்து யுத்தம் பண்ணினான்.

40. அபிமெலேக் அவனைப் பின்றொ டர்ந்து பட்டணத்துக்குள் துரத்தினான். அவ னுடைய மனிதரில் அநேகர் சிக்கேம் தலைவா சல் வரைக்கும் மடிந்து விழுந்து கிடந்தார்கள்.

41. அபிமெலேக் ரூமாவில் இருந்துவிட் டான். சேபூலோ காவாலையும், அபனைச் சேர்ந்தவர்களையும் பட்டணத்திலே நின்று துரத்திவிட்டான். அவர்கள் அங்கே தங்கும்படிச் சகித்தவனல்ல.

42. மறுநாள் ஜனங்கள் வெளியே வய லுக்கு வரப் புறப்பட்டார்கள். அது சங்கதி அபிமெலேக்குக்குத் தெரிவிக்கப்பட்டபோது,

43. அவன் தன் படையைக் கூட்டிக் கொண்டு, அதை மூன்று பங்காகப் பிரித்து வயல்களில் பதுங்கியிருந்தான் ஜனங்கள் பட் டணத்துக்கு வெளியில் வந்தபோது அபிமெ லேக் எழுந்து அவர்கள்மேல் விழுந்தான்.

44. தன் படையோடு பட்டணத்தைப் பிடிக்க முற்றிக்கைப் போட்டான். வேறிரண் டு படைகளும் அங்குமிங்கும் ஓடின சத்துராதி களைப் பின்றொடர்ந்தன.

45. அபிமெலேக்கோ அன்று முழுதும் பட் டணத்தின்மேல் யுத்தம் பண்ணி அதைப் பிடித்து ஜனங்களையுங் கொன்று போட்ட பின்பு பாழாக்கப்பட்ட நகரத்தில் உப்பை விதைத்தான்.

46. சிக்கேம் கோட்டையில் வசித்தவர்கள் இதைக் கேள்விப்பட்டபோது பெரித்தென் னுந் தங்கள் தேவனோடு தங்கள் உடன்படிக் கைச் செய்துகொண்டதனால் பெரித்தென்று அழைக்கப்பட்ட கோவிலுக்குள் பிரவேசித் தார்கள். அது மிகவும் பலமான இடமாயி ருந்தது.

47. சிக்கேம் துர்க்கத்து மனிதர் எல்லோருங் கூடியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அபிமெலேக்

48. தன் சேனைகளோடு செல்மோன் ம லையின்மேல்ஏறி, தன் கையில் ஒரு கோடரியைப் பிடித்து ஒரு மரத்தின் கொம்பை வெட்டித் தன் தன் தோளின்மேல் வைத்துக்கொண்டு, தன் தோழரை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து நீங்களும் உடனே அதேபிரகாரஞ் செய்யுங்களென்றான்.

49. அப்படியே அவர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தின் கிளைகளை வெட்டித் தங்கள் தலைவனை பின்சென்று கோட்டைக் குச் சுற்றிலும் மரங்களை அடுக்கித் தீப் போட்டார்கள். அக்கினியாலும், புகையினா லுங் கோட்டையிலிருந்த ஆண்பிள்ளைகளி லும், பெண்பிள்ளைகளிலும் ஆயிரம்பேர் மடிந்தார்கள்.

50. அப்புறம் அபிமெலேக் அவ்விடத் திலிருந்து புறப்பட்டுத் தேபேசுக்குப் போய்த் தன் சேனைகளோடு பட்டணத்தை வளைந் து முற்றிக்கைப் போட்டான். 

51. பட்டணத்தின் நடுவே உயர்ந்தகோபுர மிருந்தது. அதற்குள் ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும், பட்டணத்தின் பிரபுக்க ளும் ஓடிக் கதவுகளைப் பலமாய் அடைத்து விட்டு மதில்களின்மேல் ஏறி எதிர்த்து நின் றார்கள்.

52. அபிமெலேக் கோபுரத்தின் அருகில் வந்து கொடூர யுத்தஞ் செய்தான். கதவின் கிட்ட நெருங்கி அதைச் சுட்டெரித்துப் போட முயன்றான்.

53. அந்நேரத்திலே ஒரு ஸ்திரீ ஒரு எந்திரக் கல்லின் துண்டை அபிமெலேக்கின் மேல் போட்டு அவன் மண்டையை உடைத்துப் போட்டாள்.

54. அவன் உடனே தன் ஆயுத தாரியைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீயினால் கொலையுண்டேனென்று ஜனங்கள் சொல்லாதபடிக்கு நீ உன் வாளையுருவி, என்னை வெட்டிப்போடு என்றான்.அவன் அப்படியே வாளையுருவி அவனை வெட்டிப்போட்டான்.

55. அபிமெலேக் மரித்த பிறகு அவனுடனிருந்த சகல இஸ்ராயேலருந் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய்விட்டார்கள்.

56. அபிமெலேக் தன் எழுபது சகோதரரைக் கொலை செய்து தன் தகப்பனுக்குப் பண்ணின துரோகத்தைப் பற்றிக் கடவுள் பழிக்குப்பழி வாங்கினார்.

57. சிக்கேமித்தார் செய்த எல்லாப் பொல்லாப்புகளையுந் தேவன் அவர்கள் தலையின் மேல் திரும்பும்படி செய்தார். ஜெரோபாவா லின் குமாரனான ஜோவாத்தாம் போட்ட சாபம் அவர்கள்மேல் வந்து லபித்தது.