ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 09

இஸ்றாயேல் முழுவதும் பாழ்க்கடிக்கப் பட்டும், கடைசியிலே மெசியாஸ் வருவார்.

1. பீடத்தின்மீது (மகிமைப் பிரதாப ராய்) ஆண்டவர் நிற்கக்கண்டேன்; அவர் செப்பலுற்றதாவது: (ஆலயத்து) கீல் முளைகளை உடை; கதவு நிலை களைப் பெயரு; எல்லாருடைய சிரசில் பொருளாசையே குடியிருத்தலான் அவர்களில் கடைத்தரமானவனையும் விடாது வாளாலே கொல்லுவோம்; ஒருவனுந் தப்பிப்போகான்; அவர்கள் ஒடினுந் தப்பிப் பிழைப்பான் அவர்களில் ஒருவனுமிரான்.

* 1-ம் வசனம். ஆண்டவர் பேட்டேல் ஆலயத்தைக் குறித்து, அவர்களுடைய உத்தரவுக்கு எப்போதும் எதிர்பார்த்திருக்குஞ் சம்மனசுகளைப் பார்த்துப் பேசுகின்றார்.

2. அவர்கள் பாதாளமட்டும் இறங்கி னும், நமது கரம் அவர்களைத் தூக்கி விடும்; அவர்கள் வான மண்டலம் ஏறினும் அவர்களைக் கீழே இழுத்துவிடு வோம்.

3. அவர்கள் கர்மேல் கொடுமுடியில் தங்களை ஒளித்தாலும்; அவர்களைத் தேடிக் கொண்டுவந்து விடுவோம்; கார்வ லய கறபத்தில் நமது கண்களுக்கு ஒளிந்து கொள்ளினும், அங்கு சற்பம் அவர் களைத் தீண்டும்படி கட்டளையிடு வோம்.

4. தங்கள் சத்துராதிகள் முன் அடிமைகளாய்க் கூட்டிப் போகப்படினும் வாளானது அவர்களைக் கொல்லும்படி ஆக்கியாபிப்போம்; நமது கண்களை அவர்கள்பேரில் நன்மை செய்வதற்கல்ல, தீமை விளைவிக்கவே நிறுத்துவோம் என்பதே.

5. (ஆம்) சேனைகளின் தேவனான ஆண்டவர் பூமியைத் தொடவே, அது பயப்பிராந்தியால் குழைந்துபோம்; அதின் குடிகளெல்லாங் கண்ணீர் சிந்துவார்கள்; துலைதூரத்துக்கு அவர் கள் கைதிகளாகக் கரைபுரண்டதோர் நதியெனக் கூட்டிப்போகப்படுவர்கள்; எஜிப்த்து (நீல்) நதிச் சலம்போல் சிதறுண்டு போவார்கள்.

6. வானமண்டலத்தில் தமது ஆச னத்தை அமர்த்தியவரும், பூத பெளதீ காதிகளைப் பூமிமீது நிலைப்பித்தவரும், சமுத்திர சலங்களை உயர அழைப்பவ ரும், அவைகளைப் புவனத்தின்மீது இறைப்பவருமாகிய ஆண்டவரெனும் நாமரான தேவன் இங்ஙனஞ் செய்வர்; இது திண்ணம்.

7. இஸ்றாயேல் மக்கள்காள்! நீங்கள் எப்படி நமக்குச் சொந்தமாயிருக்கின்றீர் களோ, அதுபோல் எத்தியோப்பியா புத்திரரும் இருக்கின்றார்களன்றோ? இஸ்றாயேலை எஜிப்த்து தேசத்தினின் றும், சீரியரை சிரேனினின்றும், பிலிஸ் தியரை கப்பாதோசினின்றும் மீட்டோ மன்றோ?

8. தேவனாகிய ஆண்டவருடைய கண்கள் பாபஞ் செய்யும் இராச்சியங் கண் மீது திறக்கப்பட்டே இருக்கின்றன; பூமி மீது அவர்களை நாசஞ் செய்வோம்; ஆயினும் யாக்கோபு வீட்டை நொறுக்கியும் முழுதுமே நொறுக்கி விடமாட்டோம் என்கிறார் ஆண்டவர்.

9. இதோ நாம் கட்டளைப் பிறப்பிக்கப் போகிறோம்; இஸ்றாயேல் வீட்டவரை சகல சாதி சனங்கள் நடுவில் சல்லடை கொண்டு கோதும்பை சலிப்பது போல் சலித்து விடுவோம் என்றாலும் ஒரு நற்கோதும்பை மணியும் கீழே விழாது. 

* 9-ம் வசனம். இஸ்றாயேல் சனத்தைச் சகல சாதி சனங்கள் நடு சிதறடித்து விடுவதாயும், நல்லவர்களை எப்போதுந் தாம் காப்பதாயும் ஆண்டவர் கூறுகின்றார்.

10. “தின்மை நம்மையணுகாது, நமது மீது (ஒருபோதும்) வந்து விழாது” என நமது பிரசையில் எப்பாவிகள் கூறுகிறார்களோ அவர்கள் யாவரும் வாளால் மடிவர்.

11. அந்நாளில் வீழ்ந்துபோன தாவீதனின் இராச்சியத்தை நிமிர்த்திவிடுவோம்; அதின் மதில்களின் திறப்புகளை அடைத்து இடிந்துபோனவைகளைப் பழுதுபார்த்து, அந்தப் பண்டய காலத்தில் இருந்ததுபோல் புதுப்பித்துவிடுவோம். 

* 11-ம் வசனம். தாவீதரசனுடைய அநித்திய இராசரீகத்தைக் கிறீஸ்துவானவருடைய நித்திய ஞான இராசாங்கமாய் ஆக்கப்படுமென்றும், அஞ்ஞானிகளில் மீதிபட்ட பேர்களெல்லாங் கிறீஸ்துவானவருக்கும், சுவிசேஷ போதகருக்குஞ் சொந்தமாவர் எனவும் ஆண்டவர் கூறுகின்றார்.

12. நமது நாமகரணத்தைக் கொண் டாடியதால், இதுமேயாவில் மீதியானவர் களையும், ஏனைய சகல சாதி சனங்களை யும் நமது பிரசைக்கு ஸ்வாதீனப்படுத்து வோம் என்றருளினார் ஆண்டவர்; ஆம், அவரே இவைகளைச் செய்வர்.

13. ஒரு காலம் வரும். அப்போது ஏருழுபவன் அறுப்பறுப்பானையும், திராட்சைக் குலைகளை மிதிப்பான் பயிர் செய்வானையுஞ் சந்திக்கும் படியாகும்; மலைகளில் தேன் வடியும், குன்றுகளெல்லாம் பயிரேறியிருக்கும் என்கிறார் ஆண்டவர்.

* 13-ம் வசனம். அந்நாளில் கால விகர்ப்பமின்றி உழுவதும், நடுவதும், அறுப்பதுமாய் க்ஷேமகதி அடைவர் என்பது கருத்து.

14. நமது இஸ்றாயேல் சனத்து அடிமைத்தனத்தைத் திருப்பிவிட அவர் கள் பாழான பட்டணங்களைக் கட்டி வாசஞ் செய்து திராட்சைக் கொடி களை நட்டு அவைகளின் இரசத்தைப் பானஞ் செய்வார்கள்; தோட்டங்களை ஏற்படுத்தி அதின் கனிகளைப் புசிப் பார்கள்.

15. அவர்கள் நாட்டில் அவர்களை ஸ்தாபிப்போம்; அவர்களுக்கு யாம் தந்த அவர்களுடைய நாட்டினின்று அவர்கள் இனி புறப்படுவதேயில்லை என உங்கள் தேவனான ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்.


ஆமோஸ் ஆகமம் முற்றிற்று.