சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 08

எருசலேம் நகருக்கு ஆண்டவரின் வாக்குத்தத்தம்.

1. பின்னுஞ் சேனைகளின் தேவனார் அருளிய வாக்கிய விஷயமாவது:

2. சேனைகளின் நாயகர் திருவாய் மலர்ந்து செப்புகின்றார்; சீயோனை யாம் மிகுதியாம் ஆர்வமுற்று நேசித்தனம்; அதின் (சத்துராதிகண்மீது) அதி சின வைராக்கியம் பூண்டனம்.

3. சேனைகளின் ஆண்டவர் புகல்வதேதெனில்: யாம் சீயோனிடத்து திரும்பி வந்தோம்; எருசலேமின் நடுவில் வாசங் கொள்வோம்; எருசலேம் நகர் சத்தியத்தின் பட்டணமெனவும், சேனைகளின் தேவனது பர்வதஞ் சுத்த கிரியெனவும் அழைக்கப்படுவன.

4. சேனைகளின் தேவனார் சாற்றுவதேதெனில்: இன்னம் எருசலேமின் இடங்களின் வயோதிபரும், விருத்தை களும், பெருந்தொகைய நாட்கள் கொண்ட (வயதை முனனிட்டு) கைக் கோல் (ஊன்றிய) பேர்களும் (தீர்க்காயுள ராய்ச் சுகமே) வாழ்வர்.

5. பொது ஸ்தானங்களில் விளையாடும் ஆண் குழந்தைகளாலும், சிறுமிகளாலும் நகரவீதிகள் நிறைந்துபோவன.

6. சேனைகளின் ஆண்டவர் அருள் வதேதெனில்: யாம் அக்காலத்தைக் குறித்து (அறிவிப்பதெல்லாம்) அசம்பா விதமாய் சனத்தின் மீதியாகிய உங்கள் கண்களுக்குக் காணப்படினும், நமது கண்களுக்கும் அசாத்தியமாமோ என்கி றார் சேனைகளின் தேவனார்.

* 1-6-ம் வசனங்கள். எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டதைக் குறித்து யூதர்கள் உபவாசம் இருந்து வந்தார்கள். தேவாலயத்தை மீண்டும் கட்டின பின்னும் இவ் உபவாசம் தேவையோ என ஐயம் பிறந்தது.

7. சேனைகளின் அதிபர் சாற்றுவதே தெனில்: கீழ்த்திசைய நாட்டினின்றும், கதிரவன் அஸ்தமிக்குந் தேசத்தினின்றும் நமது பிரசைதனை யாம் (எருசலேமுக்குத் தருவித்து) இரட்சிப்போம்.

8. அவர்களை யாம் தருவிக்க அவர்களும் எருசலேம் நடுவில் வாழ்வார் கள்; அவர்கள் என் பிரசையாயிருக்க, யாம் நீதியிலுஞ் சத்தியத்திலும் அவர்கள் தேவனாயிருப்போம்.

9. பின்னுஞ் சேனைகளின் தேவ னார் இயம்புவதேதெனில், தீர்க்கவசனர் நாவால் இப்போது இவ்வாக்கியங்களைக் கேட்கும் நீங்கள் உங்கள் கரங்களுக்குத் (தளரா) பலமூட்டுங்கள்; தேவாலயஞ் சமைக்கவேண்டி, சேனைகளின் ஆண்ட வர் வீட்டு அஸ்திவாரம் போட்ட (இந்) நாளில் தைரியங் கொள்ளக் கடவீர்கள்.

10. அந்நாட்களுக்கு முன் மனிதரின் (வேலை) பயன்படாதிருந்தது; மிருக சாதிகளாலும் ஆதாயமிருந்ததில்லை; உங்கள் இடிக்கடையில் உங்களிடம் வருவார் போவார்கட்குச் சமாதானமே யிருந்ததில்லை, ஒவ்வொருவனுந் தன் சுற்றத்தான்மீது (கடுங்கோபாவேசங் கொள்ள) சகல மாந்தரையும் யாம் விட்டுவிட்டோம்.

11. நாம் முந்திய நாட்களில் (நடத்தி யதுபோல்) பிரசையில் மீதியான பேர்களை இப்போது நடத்தவறியோம் என்கிறர் சேனைகளின கர்த்தர்.

12. (மாறாக) அவர்கள நடுவில் சமாதான வித்துண்டாகும், முநதிரிகைக் கனி தரும், பூமி பலனைத் தரும். வானம் பனி வருஷஞ் செய்யும்; இந்நன்மை களெல்லாம் இப்பிரசையில் மீதியான பேர்கள் அடையச் செய்வோம்.

13. யூதா வீடே! இஸ்றாயேல் வீடே! நீங்கள் (தொண்டுபுரிந்திருந்த) சனங்கள் நடுவில் சாபனை (வயத்தராய்) இருந்தது போல, உங்களை யாம் இரட்சிக்க, நீங்கள் (பூதலமெங்ஙணும்) ஆசீர்வாத (ஸ்தானமென) விருப்பீர்கள், நீங்கள் ஐய முறவேண்டாம்; உங்கள் கரங்கட்குப் பலமேற்றுங்கள்.

14. ஏனெனில், இதோ ஆண்டவர் கூறுவது: உங்கள் பிதாக்கள் நமக்குச் சினங் கொளுத்தியபோது, உங்களுக்குத் துன்புறுத்த நினைவுள்ளவனாயினோம்.

15. (கிஞ்சித்தும்) அநுதாபங் கொண் டோமில்லை என்கிறார் ஆண்டவர்; அதேபோல் மாறாக யாம் இந்நாளில் யூதர் எருசலேம் வீட்டிற்கு நலனைச் செய்யக் கருதினோம்; நீங்கள் அஞ்ச வேண்டாம்.

16. ஆதலில் நீங்கள் அனுஷ்டானஞ் செய்யவிருக்கும் (நமது) கட்டளை களேதெனில்: உங்கள் ஒவ்வொருவனுந் தன் புறத்தியானிடம் உண்மைப் பேசுவா னாக! உங்கள் நியாயாசனத்தில் நீதி யையும், சத்தியத்தையும் (ஒட்டியே) தீர்ப்புச் செய்யுங்கள்.

* 16-ம் வசனம். எபே. 4:25.

17. ஒவ்வொருவனுந் தன் நேசனுக்கு விருத்துவமாய்த் தன் இருதயத்தில் தீங்கு எண்ணாதிருக்கக்கடவன்; அபத்த நிண்ணயஞ் செய்ய ஆசியாதீர்கள்; இவைகளெல்லாம் யாம் பகைப்பன வாகும் என்கிறார் ஆண்டவர்.

18. சேனைகளின் தேவன் பின்னும் எனக்குத் திருவாய் மலர்ந்தருளியதே தெனில்: 

19. சேனைகளின் தேவனார் கூறுவ தாவது: நான்காம் (மாதத்திய) ஒருசந்தி யும், ஐந்தாம் (மாதத்திய) உபவாசமும், ஏழாம் (மதிய) நோன்பும், பத்தாம் (மதிய) போஜன ஒறுத்தலும், யூதா வீட் டில் சந்தோஷமும், அக்களிப்பும் ஆடம்பர உற்சவங்களுமாயாவன: நீங்கள் மாத்திரஞ் சத்தியத்தையும், சமா தான்தையும் நேசியுங்கள்.

* 19-ம் வசனம். நான்காம் மாதம்--எருசலேம் கல்தேயரால் தகர்க்கப்பட்டது. எரே. 52:6. ஐந்தாம் மாதம்--தேவாலயம் எரிக்கப்பட்டது, எரே. 52:12. ஏழாம் மாதம்--கொதோலியாஸ் கொல்லப்பட்டது--எரே.41:2. பத்தாம் மாதம்--எருசலேம் முற்றுகையிடப்பட்டது, 4 அரசர் 25:1.

20. சேனைகளின் தேவன் அருள் வதேதெனில்: (அந்நியப்) பிரசைகள் வந்து உங்களது அநேகப் பட்டணங் களில் வாசஞ் செய்யும் ஓர் காலம் வரும்.

21. ஒரு பட்டணத்து வாசிகள் மறுபட்டணத்தவரை நோக்கி: போவோம் (வாரீர்;) ஆண்டவர் சந்நிதா னத்தில் பிரார்த்தனைகள் ஒப்புக்கொடுப் போம்; சேனைகளின் அரசைத் தேடு வோம் (வாரீர்) என, யாங்களும் (உங்க ளோடு) வருகின்றோம் (என்பதாய் மாறுத்தரமாகும்). 

22. இங்ஙனஞ் சேனைகளின் அதி பரை எருசலேமில் தேடவும், ஆண்டவர் சந்நிதானத்தில் பிரார்த்திக்கவும் அநந்த பிரசைகளும் வல்லுனரான சனங்களும் வருவார்கள்.

23. பின்னுஞ் சேனைகளின் அதிபர் அறைவதேதெனில்: பல பாஷைய சனங்களில் பத்து மனிதர் ஒரு யூதனின் (நெடும் உத்தரீகத்து) ஓரத்தைப் பற்றிக் கொண்டு: ஆண்டவர் உங்களோடு இருப்பதாய் நாங்கள் செவியுற்றோ மாதலின், உங்களோடு யாங்களும் வருவோம் என்பாரே அந்நாட்களில் (இவைகளெல்லாம் சம்பவிப்பனவாம்.)