அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 08

சூனாமித்த ஸ்திரீ திரும்ப வந்தது.

1.  (இதற்கு முன்) எலிசே ஒரு ஸ்திரீயின் பிள்ளையை உயிர்க்கச் செய்திருந் தானே, அவன் அந்தப் பிள்ளையின் தாயைப் பார்த்து: நீயும் உன் குடும்பமும் எழுந்து புறப்பட்டு உங்களுக்கு எங் கெங்கு வசதியாயிருக்குமோ அங்கு பர தேசியாய்ப் போகக்கடவீர்கள். ஏனெ னில், ஆண்டவர் பஞ்சத்தை அழைத்தார்; அது (இஸ்றாயேல் நாட்டில்) ஏழு வருஷம் வரையிலிருக்குமென்று சொல் லியிருந்தான்.

2. அவளோ தேவனின் மனிதன் சொல்லிய வார்த்தைப் பிரகாரஞ் செய் திருந்தாள்; தன் வீட்டாரோடு சென்று பிலிஸ்தியர் நாட்டில் வெகு நாளாக வாசஞ் செய்தாள்.

3. குறிக்கப்பட்ட ஏழு வருஷங் கடந்த பின்ர் அந்த ஸ்திரீ பிலிஸ்திய் நாட்டினின்று புறப்பட்டுத் தன் வீடும் நிலங்களும் தனக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் மனுச்செய்ய வந்தாள்.

4. (ஒரு நாள்) அரசன் தேவனுடைய மனிதனுக்கு ஊழியஞ் செய்துவரும் ஜியேசியோடு பேசி: எலிசே என்பவர் செய்த புகழ் பெற்ற கிரியைகளையெல் லாம் எனக்கு; விவரித்துச் சொல் எனக் கேட்டான்.

5. அதற்கு ஜியேசி: மரித்த ஒரு வனை எலிசே உயிர்ப்பித்த சரித்திரத் தைச் சொல்லி வருகையில், உயிர்ப்பிக்கப் பட்ட பிள்ளையாண்டானுடைய தாய் அரசன் முன் வந்து தன் வீடும், தன் நிலங் களும் தனக்குத் திரும்பி வரவேணு மென்று அரசனை மன்றாடினள். அப்போது ஜியேசி: ஆண்டவனான என் அரசனே, இதோ அந்த ஸ்திரீ; இவ ளுடைய குமாரனைத்தானே எலிசே எழுப்பினாரென்றான். 

6. அரசன் அவளை நேராய்க் கேட்க, அவள் நடந்தவையெல்லாஞ் சொன்னாள். அப்பொழுது அரசன் ஒரு அண்ணகனைக் கூப்பிட்டு நீ அவளோடு கூடப் போய் அவளுக்குச் சொந்தமா னவை எல்லாம் அவளுக்குத் திரும்பக் கொடுக்கும்படியாகவும், அவள் தேசத் தை விட்டப் புறப்பட்ட நாள் துடங்கி இந்நாள் பரியந்தம் அவள் நிலங்களின் வரவுகளையும் அவளுக்கு உத்தரிக்கும் படியாகவும் போய்ப் பார்க்கக்கடவா யென்று ஆக்கியாபித்தான்.

7. எலிசே என்பவன் தாமாஸ் பட்டணத்திற்கு வந்தான்; அப்போது சீரியா அரசனான பெனாதாத் என்போன் வியாதியாயிருந்தனன்; ஆதலால் தேவ னுடைய மனிதன் இங்கு வந்திருக்கிறார் என யாரோ அவனுக்கு அறிவித்தார்கள்.

8. அரசன் அசாயேலைப் பார்த்து: நீ காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஆண்டவரை விசாரித்துக் கேட்பாயாக என்றான். 

9. ஆகையால் அசாயேல் என்பவன் தமாஸ்குப் பட்டணத்திலுள்ள விலை யுயர்ந்த எல்லாவித வெகுமதிகளையும் நாற்பது ஒட்டகச் சுமையாக எடுத்துக் கொண்டு, (எலிசேயென்பவனை) எதிர் கொள்ளப் போனான். அவன் சமுகத்தில் வந்து அவனைப் பார்த்து: “என்னுடைய வியாதியினின்று நான் விடுபடக் கூடுமோ?” என்று உம்மிடங் கேட்டுவரச் சீரியா அரசனும் உமது அடியானுமாகிய பெனாதாத் உம்மிடத்திற்கு என்னை அனுப்பினர் என்றான்.

10. எலிசே மறுமொழியாக: நீ போய், “செளக்கியமடைவீர்” என அவருக்குச் சொல். ஆயினும் அகத்தியம் அவர் சாகவே சாவார் என்று ஆண்டவர் எனக்குக் காட்டியிருக்கிறார் என்றனன்.

11. அன்றியும் தேவனின் மனிதன் அவனோடு (சற்று நேரம் மெளனமாய்) இருந்து, முகம் வேறுபடத் துக்காக்கிரந் தனாகி கண்ணீர் விட்டான்.

12. அசாயேல் அவனைப் பார்த்து: என் ஆண்டவன் இங்ஙனம் அழுவ தென்னை? என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்றாயேல் மக்களுக்குச் செய்யவிருக்கிற தின்மைகளை நானறி வேன். அவர்களின் சிறந்த பட்டணங் களைத் தீக்கிரையாக்குவை, வாலிபரைக் கத்திக்கிரையாக்குவை, சிறு குழந்தை களைத் தரையில் அறைந்து கொல் லுவை, கர்ப்பஸ்திரீகளின் வயிற்றைப் பீறுவையென்று எனக்குத் தெரியும் என் றான்.

13. அசாயேல் அவனை நோக்கி: இவ்வளவு பெருங் காரியத்தைச் செய்ய உமது அடியானாகிய நாயேன் எம்மாத் திரம் எனக் கேட்டான். அதற்கு எலிசே: நீ சீரியா அரசனாகவிருப்பாய் என ஆண்டவர் எனக்கு அறிவித்திருக்கின்றார் என (விடை தந்தான்.)

14. (அசாயேல்) எலிசேயை விட்டுத் தன் எசமானைக் காணவந்தான். (அரசன்) அவனைப் பார்த்து: எலிசே உன்னிடம் என்ன சொன்னார் எனக் கேட்டான். அதற்கு அசாயேல்: நீர் சொஸ்தமாவீர் என எனக்குச் சொன்னார் என்றான்.

15. மற்றொருநாள் உதயமாகவே, (அசாயேல்) பெரும்படியான ஒரு வஸ்திரத்தை எடுத்துச் சலத்தில் தோய்த்து அரசனுடைய முகத்தில் போட் டான். அவன் (மூச்சு வாங்கக்கூடாமல்) இறந்துபோக அசாயேல் அவனுக்குப் பதிலாக இராஜரீகம் பண்ணினான்.

16. இஸ்றாயேல் அரசனான அக்கா பின் புத்திரன் ழோராமுடைய இராசாங்கத்தின் ஐந்தாம் வருஷமும், யூதாவின் அரசன் யோசபாத்தின் இருபத் திரண்டாம் வருஷமுமான போது, யோசபாத்தின் குமாரன் ழோராம் என்போன் யூதா நாட்டில் அரசாண் டான்.

17. இவன் முப்பத்திரண்டு வயதில் இராச்சியபாரஞ் செய்யத் துடங்கி எட்டு வருஷம் எருசலேமில் அரசு புரிந்தான்.

18. அவன் ஆக்காபுடைய வீட்டா ரைப் போல் இஸ்றாயேலரசர்களைப் பின் பற்றியே நடந்தனன். அதேதெனில், இவனுடைய மனைவி ஆக்காபின் புத்தி ரியே. ஆண்டவருடைய சமுகத்தில் அவன் பொல்லாப்பைச் செய்தனன். 

19. ஆண்டவர் தமது தாசனான தாவீ தென்போனை முன்னிட்டு, யூதா சனத்தை அழிக்கவில்லை. ஏனென்றால் அவர் தாவீதுக்கும் அவன் புத்திர பெளத்திராதிகட்கும் தீபம் (ஆகிய புண் ணியவானான சந்ததியாரைக்) கொடுப் பதாக வாக்களித்திருந்தார்.

20. (அந்த ழோராம் அரசன்) காலத்தில் இதுமியர் யூதா அரசருக்கு அடங்கமாட்டாமல் விலகித் தங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்திக் கொண்டனர்.

21. ஆனால் ழோராம் அரசன் செயீர் ஊருக்குத் தன் எல்லா இரதங்களோடு வந்தான்; இரவில் கிளம்பித் தன்னைச் சூழ்ந்திருந்த இதுமியர் சேனைகளையும் அவர்களுடைய இரதங்களையோட்டு பவர்களையும் வெட்டி நொறுங்கவடித் தான். தப்பிப்போன சனமோ தங்கள் கூடாரங்களுக்கு ஓட்டம் பிடித்தார்கள்.

22. அந்நாள் துடங்கி இந்நாள் வரைக்கும் இதுமியர் யூதா அதிகாரத் திற்கு உட்படாது விலகியே நின்றனர். அதே காலத்தில் லோப்னா நகரத்தாரும் யூதாவை விட்டு விலகிப் போனார்கள்.

23. ழோராம் அரசன் சொன்னவை களுஞ் செய்தவைகளுமான மற்ற வர்த்த மானங்களெல்லாம் யூதா அரசரின் சம்பவசங்கிரகமென்னும் புத்தகத்தில் எழுதியிருக்கின்றன.

24. ழோராம் அரசன் தன் பிதாக்க ளோடு நித்திரை போனான்; தாவீது பட்டணத்தில் அவர்களோடு சேமிக்கப் பட்டனன். அவனுக்குப் பதிலாக அவன் குமாரனான ஒக்கோசியாஸ் அரசாண் டான்.

25. யூதா அரசனான ஆக்காபு குமாரன் ழோராம் என்போனின் இராச ரீகத்திய பன்னிரண்டாம் வருடத்தில், யூதா அரசனான ழோராம் குமாரனான ஒக்கோசியாஸ் அரசாளத் துடங்கினான்.

26. ஒக்கோசியாஸ் சிம்மாசனம் ஏறினபோது, இருபத்திரண்டு வயதுடை யவனாய் எருசலேமிலே ஒரு வருஷம் அரசாண்டான். அவனுடைய மாதாவின் பெயர் அத்தாலி. இவள் யூதா அரசனான அம்ரியுடைய மகளாம்.

27. அவன் ஆக்காபின் குடும்பத்தா ரைப் பின்சென்று கர்த்தருடைய சமுகத்தில் தின்மையைப் பண்ணினான். அவன் ஆக்காபின் குடும்பத்தானாகிய ஒருவனுடைய மருமகனாதலால் அவர் களைப் போலவே துஷ்ட வழியே நடந் தான்.

28. அல்லாமலுஞ் சீரியா அரசனான அசாயேலுக்கு விரோதமாய்ச் சண்டை செய்ய ஆக்காபின் குமாரனான ழோரா மோடு ராமோத் கலாத்துக்குப் போனான்; அங்கு ழோராம் என்போன் சீரியரால் காயப்படுத்தப்பட்டனன். 

29. இவன் சீரியா அரசனான அசாயேலோடு இராமோத்திலே சண்டை செய்கையில், சீரியரால் காயப்படுத்தப் பட்டமையால், தனக்குச் சிகிச்சை செய்துகொள்ள ழெஸ்ராயேலுக்கு வந்தான். யூதா அரசனான ழோராம் குமாரனாகிய ஒக்கோசியாஸ் ஆக்கா புடைய புத்திரனான ழோரமைப் பார்க்க ழெஸ்ராயேலுக்கு வந்தான். அங்கு தானே ழோராம் வியாதியாயிருந்தான்.