அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 08

இஸ்றாயேலியர் தங்களுக்கு ஓர் அரசன் வேண்டுமென்று கேட்டது.

1. பின்னும் நடந்தது யாதெனில்: சமுவேல் விருத்தாப்பியனானபோது தன் குமாரர்களை இஸ்றாயேலுக்கு நியாயாதிபதிகளாக ஸ்தாபித்தான்.

2. பெற்சாபேயில் நியாயாதிபதிகளான அவனுடைய மூத்த குமாரனுக்குப் பேர் ழோயேல், இரண்டாங் குமாரனுக்குப் பேர் அபியா.

3. அவன் வழியிலே அவன் குமாரர்கள் நடந்தவர்களல்ல, உலோபித்தனத் தில் நழுவி வெகுமானங்களைப் பெற்றுக் கொண்டு நீதி நியாயத்தைப் புரட்டினார் கள்.

4. அப்போது இஸ்றாயேலின் வய தில் முதிர்நதோர்களெல்லாங் கூட்டம் கூடி ராமத்தாவில் சமுவேல் கிட்ட வந்தார்கள்.

5, அவனை நோக்கி: இதோ நீர் விருத்தாப்பியரானீர். உமது குமாரர்கள் உம்முடைய வழியில் நடக்கிறதில்லை; எங்களுக்கு நியாயந் தீர்க்க மற்றச் சனங் களுக்கெல்லாம் இருப்பது போல எங்க ளுக்கு ஓர் இராசாவை ஏற்படுத்துமென்று அவனுக்குச் சொன்னார்கள்.

6. எங்களுக்கு நியாயந் தீர்க்க இராசாவை எங்களுக்குக் கொடுமென்று அவர்கள் சொன்ன வார்த்தை சமுவேல் கண்களுக்குப் பிரியப்படவில்லை, சமு வேல் ஆண்டவரை மன்றாடினான்.

7. ஆண்டவர் சமுவேலை நோக்கி: சனங்கள் உன்னிடத்தில் பேசினவை களிலெல்லாம் அவர்கள் சொல்லைக் கேள். உன்னை அவர்கள் தள்ளவில்லை; நாம் அவர்களை ஆளாதபடிக்கு நம்மைத் தான் தள்ளினார்கள்.

8. அவர்களை நாம் எஜிப்த்து தேசத் தினின்று மீட்ட நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் அவர்கள் செய்த வேலைகளெல்லாம் இப்படித்தான். நம்மை விட்டு அந்நிய தேவர்களுக்கு ஊழியஞ் செய்ததுபோல் உனக்குஞ் செய்கிறார்கள்.

9. இப்போது அவர்கள் வாக்குக்குச் செவிகொடு; ஆயினும் அவர்களுடன் தர்க்கித்து அவர்கள் பேரில் ஆளப் போகிற அரசனின் சுதந்தரத்தை அவர் களுக்கு முன்னதாகத் தெரிவியென் றார்.

10. ஆனதால் ஆண்டவருடைய வார்த்தைகளையெல்லாஞ் சமுவேல் தங் களுக்கு இராசா வேண்டுமென்று கேட்ட சனங்களுக்குச் சொன்னான்.

11. மறுபடியுஞ் சொல்லுகிறான், உங்களை ஆளப்போகிற அரசனின் சுதந் தரம் இதோ. உங்கள் பிள்ளைகளை எடுத்துத் தன் இரதங்களை ஓட்ட வைத்துக் கொள்வான்; (அவர்களைத்) தனக்குக் குதிரைக்காரர்களாகவும், தன் நாலு குதிரை இரதத்திற்கு முன் ஓடுகிறவ னாகவுஞ் செய்வான்.

12. அவன் அவர்களை ஆயிரம் பேருக்கும் நூறு பேருக்குந் தலைவர் களாகவும், தன் நிலங்களை உழுகிறவர் களாகவும், தன் விளைச்சலை அறுக்கிற வர்களாகவும், ஆயுதங்கள் இரதங்கள் செய்கிறவர்களாகவுந் தனக்கு ஏற்படுத்து வான்.

13. உங்கள் குமாரத்திகளையோ தனக்குப் பரிமளக்காரிகளாகவும், சமையற்காரிகளாகவும், உரொட்டி செய் கிறவர்களாகவும் வைத்துக் கொள்வான்.

14. மேலும் உங்கள் வயல்களையும், கொடிமுந்திரிகளையும், ஒலீவ் மரங் களிலே நல்லவைகளையும் எடுத்துக் கொண்டு தன் ஊழியர்களுக்குக் கொடுப் பான். 

15. தன் அரண்மனை வேலைக்கார ருக்கும் பிரதானிகளுக்குங் கொடுக்கும் பொருட்டு உங்கள் விளைச்சல்களிலும், திராட்சத் தோட்டங்களிலும் பத்தில் ஒரு பங்கு கேட்பான்.

16. உங்கள் வேலைக்காரர் வேலைக் காரிகளையும், நல்ல வாலர்களையும், கழுதைகளையும் எடுத்துத் தன் வேலைக்கு வைத்துக் கொள்வான்;

17. உங்கள் மந்தைகளிலே பத்தில் ஒரு பங்கு எடுப்பான்; நீங்கள் அவனுக்கு ஊழியர்களாயிருப்பீர்கள்.

18. நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் இராசாவின் சமுகத்துக்கு விரோதமாய் இந்நாளிலே முறையிடுவீர்கள், ஆனால் நீங்கள் இராசாவைக் கேட்டதைப் பற்றி தேவன் அந்நாளில் உங்களுக்குச் செவி கொடுக்கமாட்டார்.

19. சனங்கள் சமுவேலின் சொல் லைக் கேட்க மனதில்லாமல்: அப்படி யல்ல, எங்களுக்கு ஓர் இராசா இருக்கத் தான் வேண்டும் என்றார்கள்.

20. மற்றச் சனங்களைப்போல் நாங் களும் இருப்போம்; எங்கள் இராசா எங்களுக்கு நியாயந் தீர்ப்பான்; எங்கள் முன் எழுந்து எங்கள் யுத்தங்களை எங்களுக்காக நடத்துவானென்றார்கள்.

21. சமுவேல் சனத்தின் வாக்குகளை யெல்லாங் கேட்டு அவைகளை ஆண்டவ ரிடத்தில் தெரியப்படுத்தினான்.

22. ஆண்டவர் சமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லக் கேட்டு அவர்களுக்கு ஓர் இராசாவை ஏற்படுத்து என்றார். அப்போது சமுவேல் சனங்களைப் பார்த்து: அவனவன் தன் ஊருக்குப் போகலாமென்று சொன்னான்.