இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 08

தேவன் செய்த நன்மைகளை எண்ணி அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதைக் குறித்து.

1. நீங்கள் பிழைத்துப் பெருகிக் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளத் தக்கதாக நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடுகிற கற்பனையயல்லாம் அநுசரிக்கச் சாக்கிரதையாயிருப்பீர்களாக.

2. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிருஷ்டித்து உன்னைப் பரிசோதித்துத் தம்முடைய கட்டளைகளை நீ அநுசரிப்பாயோ அநுசரிக்க மாட்டாயோ என்று உன் இருதயத்திலுள்ளதை நீயே அறியும்படியாக அவர் நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே உன்னை நடத்தி வந்த எல்லா வழிகளையும் நினைப்பாயாக்.

3. (உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் பிதாக்களும் அறிந்திராத உணவாகிய மானூவை உனக்கு அளித்தார். அதினால் மனிதனானவன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயினின்று புறப்படுகிற ஒவ்வொரு வாக்கியத்தினாலும் பிழைப்பானென்று உனக்குக் காண்பித்தருளினார்.

4. இந்த நாற்பது வருஷமும் நீ உடுத்தியிருந்த வஸ்திரம் பழையதாகிக் கிழியவுமில்லை. உன் காலடி காயம் பட்டதுமில்லை.

5. ஆதலால் ஒருவன் தன் மகனைப் படிப்பிக்குந் தன்மை போல் தேவனாகிய கர்த்தர் உன்னைப் படிப்பித்தருளினார் என்று நீ உன் இருதயத்திலே உணர்ந்து அறிந்து கொள்ளுவாயாக.

6. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைக் காத்து, அவருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படியல்லோ (அவர் அப்படி உன்னைச் சிருஷ்டித்தார்.)

7. ஏனென்றால் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல பூமியிலே பிரவேசிக்கப் பண்ணுவார். அது ஆறு, ஏரி, ஊற்றுகள் மிகுந்த தேசம். அதிலிருக்கிற பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பல நதிகள் உற்பவமாகிறது.

8. கோதுமை, வாற்கோதுமை, திராட்சக் கொடிகளும், அத்திமரம், ஒலீவ் மரம், மாதளஞ்செடிகளும் அதிலே விளையும். அவ்விடத்திலே எண்ணெயும் தேனும் மிகுதியாம்.

9. அது எக்காலமும் திருப்தியாய் அப்பத்தைப் புசிக்கத் தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம். அதில் கல்லுகள் இரும்பாயிருக்கிறது. அதன் மலைகளில் செம்பு வெட்டியயடுக்கப் படுகிறது.

10. ஆகையால் நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்த போது உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிக் கொடுத்த உத்தமமான பூமியினிமித்தம் அவரைத் தோத்தரிக்கக் கடவாய். 

11. நீ எந்நாளிலும் உன் தேவனாகிய கர்த்தரை மறவாதே. நான் இன்று உனக்கு விதிக்கின்ற அவருடைய கற்பனைகளையும் இரீதி ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் அசட்டையாய் விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்பாயாக.

12. இல்லாவிட்டால் நீ புசித்துத் திருப்தியடைந்து அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியாயிருக்கும் போதும்,,

13. ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளçயும் சம்பாதித்துப் பொன்னையும் வெள்ளியையும் மிகுதியாய்க் கைக்கொண்டிருக்கும் போதும்,

14. ஒருவேளை நீ கர்வித்துக் கொண்டு உன்னை எஜிப்த்திலும் அடிமைத்தன வீட்டிலும் புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை மறந்தாலும் மறக்கலாம். 

15. (அவரை மறவாதே.) அவர் அன்றோ கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், திப்சாயஸன்னும் விஷப்பாம்புகளும், தேள் களும், தண்ணீரின்மையு முள்ள பயங்கரமான பெரிய வனாந்தரம் வழியாய் உன்னை நடத்தி அழைத்து வருகையில் மகா கடினமான கல்மலையிலிருந்து நீர் அருவிகள் புறப்படப் பண்ணி,

16. உன் பிதாக்கள் அறிந்திராத மானூவைக் கொண்டு உன்னைப் போ´த்து, உன்னைத் தாழ்த்திப் பரிட்சித்தானபின்பு கடைசியாய் உன்பேரில் தயாபரராயிருந்தாரே!

17. (அவர் இப்படியயல்லாஞ் செய்ததற்கு முகாந்தரமேதெனில்) என் சாமர்த்தியத்தினாலேயும், என் புஜ பலத்தினாலேயும் நான் அந்த ஆஸ்தியயல்லாம் சம்பாதித்தேனென்று நீ உன் இருதயத்திலே சொல்லாமல்,

18. உன் தேவனாகிய கர்த்தரை நினைத்து அவரே ஐசுவரியத்தைச் சம்பாதிப்பதற்கான பலனை உனக்குக் கொடுத்திருக்கிறார் என்று நீ அறியும்படியாகத்தானே! அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று அப்படிச் செய்தார். இந்நாளிலே (நடக்கிறது) அதற்கு அத்தாட்சியே.

19. ஆனால் நீ உன் தேவனாகிய கர்த்தரை மறந்தவனாய் அந்நிய தேவர்களைப் பின்பற்றி அதுகளைச்சேவித்துத் தொழுது வருவாயாகில், நீ முற்றும் நிர்மூலமாவாயென்று இக்கணமே உனக்கு அறிவிக்கிறேன்!

20. உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சப்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற் போனால் உங்களுக்கு முன்பாகக் கர்த்தர் அழித்த சாதிகளைப் போல நீங்களும் அழிந்து போவீர்கள்.