சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 07

தின்மையை அகற்றவேண்டுமென்பது.

1. தீமைகள் எதுவும் செய்யாதே; தீமைகளின் பிடியில் சிக்க மாட்டாய்.

2. அநீதனை விட்டு அகன்றுபோ; தீமையும் உன்னைவிட்டு அகன்று போகும்.

3. என் மகனே! அநீதியின் குழி களில் தீமையை விதைக்காதே; அப்போது அவற்றை ஏழு மடங்காக அறுக்க மாட்டாய்.

4. ஆண்டவரிடம் உயர் அந்தஸ் தையும், அரசனிடம் மகிமையின் ஆசனத்தையும் தேடாதே.

5. ஆண்டவர் முன் உன்னை நீதிமானாக்கிக் கொள்ளாதே, ஏனெ னில் அவர் இருதயத்தை அறிகிறார்; அரசனுக்கு முன் ஞானியைப் போலத் தோன்ற ஆசிக்காதே.

6. வலிமையுள்ளவனின் ஆளுமைக்கு நீ அஞ்சாதபடியும் உன் நேர்மைக்கு ஓர் இட்றுகல்லை நீ இட்டு வைக்காதபடியும், அக்கிரமங்களை உன் பலத்தால் ஒழிக்க வல்லவ னாய் இருந்தால் தவிர மற்றபடி நீதிபதியாகத் தேடாதே; 

7. ஊரார் எல்லாரையும் பகைக் காதே; மக்கள்மீது உன்னையே ஆயுதமாக வீசியெறியாதே.

8. பாவத்திற்கு மேல் பாவம் கட்டிக்கொள்ளாதே. ஏனெனில் ஒரே ஒரு பாவத்திலும் கூட, நீ தண்டிக் கப்படாமல் போக மாட்டாய்.

9. உன் மனதில் கோழையா யிராதே.

10. செபிப்பதையும் தர்மம் செய் வதையும் அசட்டை செய்யாதே.

11. என் ஏராளமான கொடை களைச் சர்வேசுரன் மதிப்பார்; நான் உன்னத கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அவர் என் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வார் என்று சொல்லாதே.

12. தனது ஆத்துமத்தின் கசப்பில் இருக்கிற எந்த மனிதனையும் பரிகசித்து நகைக்காதே; ஏனெனில் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும், சகலத்தையும் காண்கிறவருமான கடவுள் ஒருவர் இருக்கிறார்.

13. உன் சகோதரனுக்கு விரோத மாய் பொய்யான காரியங்களைத் திட்டமிடாதே; அதையே உன் சிநேகித னுக்கு விரோதமாகவும் செய்யாதே.

14. எந்த வகையான பொய்யையும் சொல்ல மனதாயிராதே; ஏனெனில் பொய் சொல்லும் வழக்கம் நல்லது அல்ல.

15. முதியோருடைய சபையில் அதிகமாய்ப் பேசாதே; உன் செபத்தில் வார்த்தைகளை இரட் டித்துச் சொல்லாதே.

16. கடினமான வேலைகளை வெறுக் காதே; கடவுளால் ஏற்பட்ட பயிர்த் தொழிலையும் வெறுக்காதே.

17. ஒழுங்கீனமுள்ளவர்களின் கும்பலில் நீயும் ஒருவனாயிராதே.

18. தேவ கோபத்தை நினைத்துக் கொள்; ஏனெனில் அது நீண்ட நாள் தாமதிக்காது.

19. உன் ஆத்துமத்தை மிகவுந் தாழ்த்து; ஏனெனில் அவபக்தியுள்ள மனிதர்களின் மாம்சத்தைப் பழி வாங்குவது நெருப்பும், புழுக்களுமே.

20. பணங்கொடுக்கத் தாமதிப் பதனால் உன் சிநேகிதன்மட்டில் பிரமாணிக்கம் தவறாதே; பொன் னின் நிமித்தம் உன் பிரிய சகோ தரனை நிந்தியாதே.

21. தேவ பயத்தோடு நீ ஏற்றுக் கொண்ட புத்தியுள்ள நல்ல ஸ்திரீயை விட்டு விலகாதே; ஏனெனில் அவளுடைய அடக்கவொடுக்கத்தின் அழகு பொன்னுக்கு மேலானது.

22. பிரமாணிக்கமாய் வேலை செய்யும் ஊழியனையும், கூலிக்கு அமர்த்தப்பட்டு, உனக்காகத் தன் உயிரையும் தரத் தயாராயிருக்கும் மனிதனையும் காயப்படுத்தாதே.

23. புத்திசாலியான ஊழியன் உன் சொந்த ஆத்துமத்தைப் போல் உனக்குப் பிரியமாயிருப்பானாக; அவனது சுதந்தரத்தை அநியாயமாய்ப் பறிக் காதே; அவனை வறுமையில் விட்டு விடாதே.

24. உனக்கு மந்தைகளுண்டோ? அவற்றின்மேல் கருத்தாயிரு; அவை உனக்கு ஆதாயமாயிருந்தால், உன் னோடு அவற்றை வைத்துக்கொள்.

25. உனக்குப் பிள்ளைகள் உண்டா? அவர்களுக்குக் கற்பித்துக்கொடுத்து இளமையிலேயே பணிவதில் அவர்களைப் பழக்கு.

26. உனக்குப் புதல்வியர் உண்டோ? அவர்கள் கற்பைக் காப்பாற்று; அவர்களுக்குச் சந்தோஷ முகங் காண்பியாதே.

27. உன் மகளை நல்லபடியாக விவாகஞ் செய்து கொடு; அப்போது பெரிய காரியத்தை முடித்தவனாக இருப்பாய்; புத்திசாலியான மனித னுக்கு அவளைக் கொடு.

28. உன் ஆத்துமத்திற்கு இசைந்த மனைவியைக் கொண்டிருப்பாயாகில் அவளைத் தள்ளிவிடாதே; வெறுப்புக் குரியவளிடமோ உன்னை கையளிக் காதே.

29. உன் முழு இருதயத்தோடு உன் தந்தைக்குச் சங்கைசெய்; உன் தாயின் புலம்பல்களை மறவாதே.

30. அவர்கள் வழியாக அன்றி நீ பிறந்திருக்க மாட்டாயென்று நினைத் துக்கொள்; அவர்கள் உனக்குச் செய்தது போலவே அவர்களுக்கு நீயும் பதில் நன்றி செய்.

31. உன் முழு ஆத்துமத்தோடு ஆண்டவருக்குப் பயந்து நட; அவரு டைய குருக்களுக்கு சங்கை செய்.

32. உன்னை சிருஷ்டித்தவரை உன் முழு பலத்தோடு நேசிக்கக்கடவாய்; அவருடைய ஊழியர்களைக் கைவிடாதே.

33. உன் முழு ஆத்துமத்தோடும் சர்வேசுரனை கனப்படுத்து; குருக்களுக்குச் சங்கை செய்து உன் சொந்த தர்மங்களைக் கொண்டு உன்னையே சுத்திகரித்துக்கொள்.

34. உன் முதற்பலன்களிலும் சுத்தி கரக் காணிக்கைகளிலும் அவர்களுக் குரிய பங்கை உனக்குக் கட்டளை யிடப்பட்டபடி அவர்களுக்குக் கொடு; அவற்றில் ஒரு சிலவற்றைக் கொண்டு உன் அசட்டைத்தனங்களிலிருந்து உன்னைச் சுத்திகரித்துக்கொள்.

35. உன் தோள்களின் காணிக்கை யையும், அர்ச்சிப்பின் பலியையும், பரிசுத்தமானவைகளின் முதற்பலன் களையும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடு.

36. உன் பாவப் பரிகாரமும் உன் ஆசீர்வாதமும் உத்தமமாகும்படி, தரித்திரருக்கு உன் கரத்தை நீட்டு.

37. ஒரு காணிக்கை சகல சீவியர் களுடையவும் பார்வையில் வரப்பிர சாதத்தைக் கொண்டுள்ளது. அதிலிருந்து மரித்தோர் பெறும் வரப் பிரசாதத்தைத் தடை செய்யாதே.

38. அழுபவர்களுக்கு ஆறுதல் சொல்லத் தவறாதே; துக்கம் கொண் டாடுபவர்களோடு சேர்ந்து நட.

39. வியாதிஸ்தனைச் சந்திப்பதில் மந்தமாயிராதே; ஏனெனில் இந்தக் காரியங்களால்தான் நீ சிநேகத்தில் உறுதிப்படுத்தப்படுவாய்.

40. உன் சகல செயல்களிலும் உன் கடைசி முடிவை நினைத்துக்கொள்; அப்போது, ஒருபோதும் பாவஞ் செய்யமாட்டாய்.