அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 07

தேவாலயம் கட்டத் தீர்மானித்தல்.

1. தாவீதரசன் தன் மாளகையிற் குடி ஏறின பிற்பாடு நாலு பக்கத்திலுமுள்ள அவனுடைய எல்லாச் சத்துருக்களும் கர்த்தருடைய அநுக்கிரகத் தினாலே சமாதானமானது கண்டு, 

2. அவன் தீர்க்கத்தரிசியான நாத்தானென்பவரை நோக்கி: பாரும் கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது, தேவ பெட்டகந் தோற் திரைகளின் நடுவில் வைக்கப்பட்டிருக்கின்றதே என்றான்.

3. அப்பொழுது நாத்தான் இராசாவைப் பார்த்து: ஆண்டவர் உம்முடன் இருக்கின்றாரல்லவா? ஆதலால் நீ போய் உமது இருதயத்திலுள்ளபடி எல்லாஞ் செய்யுமென்றான்.

4. அன்று இராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை இதோ நாத்தானுக் குண்டானது; என்னவென்றால்: 

5. நீ போய் நம் ஊழியனான தாவீதை நோக்கி கர்த்தர் சொல்லுகிறதே தெனில்: நாம் வசிக்கத்தக்க ஆலயத்தை நீ நமக்குக் கட்ட மாட்டாயோ?

6. இஸ்றாயேல் புத்திரரை எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்த நாள் முதற் கொண்டு இந்நாள் வரைக்கும் நாம் ஒரு ஆலயத்திலே வசித்திராமல் கூடார முதலியவைகளில்தானே வாசம் பண்ணி யுலாவினோம்.

7. இஸ்றாயேல் புத்திரரெல்லா ரோடு கூட நாம் உலாவித் திரிந்து வந்தோமல்லவா?  நம்முடைய ஜனமா கிய இஸ்றாயேலை நடத்த வேண்டு மென்று நாம் கட்டளையிட்டபொழுது எவ்விடத்திலுமாவது நாம் கோத்திரங் களில் ஒன்றைப் பார்த்து: நீங்கள் நமக்குக் கேதுரு மரங்களால் ஓராலயத்தை ஏன் கட்டவில்லை என்று எப்போதாகிலும் நாம் சொன்னதுண்டோ? (இல்லையே.)

8. இப்போதோவெனில்: நீ போய் நமது தாசனாகிய தாவீதைப் பார்த்து: நீ ஆடுகளின் பிறகாலே நடந்திருக்கையில் நாம் உன்னை அழைத்து நமது ஜனமா கிய இஸ்றாயேலுக்கு அதிபதியாயிருக்கச் செய்தோம்.

9. நீ போன எவ்விடங்களிலும் நாம் உன்னோடுகூட இருந்து உன் சத்துருக் களை எல்லாம் உனக்கு முன்பாக நிர்மூல மாக்கிப் பூமியிலிருக்கிற பெரியோர் களின் பெயருக்கொத்த சிறந்த பேர் உனக்கிருக்கச் செய்தோம்.

10-11.  நமது பிரசையாகிய இஸ்றா யேலை ஓர் இடத்தில் நிலைநிறுத்து வோம்; அவர்களை அவ்விடத்திலே உறுதிப்படுத்துவோம். அவர்கள் அங்கு குடியேறி முன்போல் அலைக்கழிக்கப் பட மாட்டார்கள்; நமது ஜனமாகிய இஸ்றாயேலின்மேல் நியாயாதிபதி களைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோல் நியாயக் கேட்டின் மக்கள் அவர்களை மறுபடியுந் துன்பப் படுத்த மாட்டார்கள்.  உன் சமஸ்த சத்துருக்களும் உன்னைக் சிறுமைப் படுத்தாமல் சமாதானமாயிருக்கப் பண் ணுவோம்; மேலுங் கர்த்தரே உனக்கு ஓர் வீட்டைக் கட்டுவார் என்று உனக்கு அறிவிக்கிறார்.

12. பிறகு உன் சீவிய நாட்கள் நிறை வேறி, நீ உன் பிதாக்களுடன் நித்திரை பண்ணும்போது நாம் உனக்குப் பின்பு உன் கற்பப்பிறப்பாகிய ஓர் குமாரனை எழும்பப் பண்ணி அவன் இராச்சியத்தை நிலைப்படுத்துவோம்.

13. அவனே நமது நாமத்திற்கென்று ஓர் ஆலயத்தைக் கட்டுவான்; நாமோ அவனுடைய இராஜரீக சிம்மாசனத்தை என்றைக்கும் நிலைத்திருக்கப் பண்ணு வோம்.

14. நாம் அவனுக்குப் பிதாவாகவு மிருப்போம்; அவன் நமக்குக் குமாரனா கவுமாயிருப்பான்.  அவன் ஏதாவது அக்கிரமஞ் செய்வானாகில் நாம் அவனை மனுஷருக்கேற்ற மிலாறினால் அடிப் போம்.  மனுப்புத்திரருக்கேற்ற வாதை யால் கண்டிப்போம்.

15. ஆயினும் நமது முகத்தினின்று நாம் சவுலைத் தள்ளிவிட்டு அவனிடத் திலிருந்து நமது கிருபையை விலக்கினது போல அவனை விட்டு விலக்க மாட் டோம்.

16. உன் வீடோ பிரமாணிக்கமா யிருக்கும்.  உன் இராச்சியமோ என்றென் றைக்கும் உன் முன்பாகவிருக்கும்; உன் சிம்மாசனமோ அனவரதகாலமும் நிலை பெற்றிருக்கும் என்கிறார் என்று (நாத்தானின் மூலியமாய்ச்) சொல்லச் சொன்னார்.

17. நாத்தான் இந்த எல்லா வார்த்தை களின்படியும், இந்த எல்லாத் தரிசனை யின்படியும் தாவீதினிடத்தில் பேசினான்.

18. அப்போது தாவீதரசன் உட்பிர வேசித்துக் கர்த்தருடைய சமுகத்தி லிருந்து உட்கார்ந்து: கர்த்தராகிய தேவனே, இவ்வளவு தூரந் தேவரீர் என் னைக் கொண்டு வந்ததற்கு நான் எம் மாத்திரம்?

19. ஆயினும் ஓ! தேவனாகிய கர்த் தாவே, உமது பார்வைக்கு அது கொஞ்ச காரியமாயிருக்கிறதென்றாற்போல வெகுநாளுக்குப் பிறகு நடக்கும் உமது அடியான் வீட்டுக்கடுத்த செய்தியையுந் தேவரீர் சொல்ல விரங்கினீரே, அது ஆதாமின் சந்ததியாருக்குள்ள முறை மையே.

20. இன்னும் தாவீது உம்மிடத்தில் சொல்ல வேண்டியது வேறென்ன இருக்கும்?  கர்த்ராகிய தேவனே நீர் உமதடியானை அறிவீர் அன்றோ?

21. என் தேவனே! உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உமதடி யானுக்கு அறிவிக்கும்படியன்றோ தேவ ரீர் இந்த மகத்தான காரியங்களைச் செய் தருளினீர்.

22. ஆகையால், ஓ, தேவனாகிய கர்த்தாவே நீர் மகத்தானவரென்று எவராலும் பாராட்டப்பட்டிருக்கிறீர்; நாங்கள் காதினாலே கேட்ட சகல வார்த் தைகளின் படியன்றோ தேவரீருக்கு நிகரானவர் ஒருவருமில்லை என்றும், தேவரீரைத் தவிர வேறு தேவனுமில்லை யென்றும் அறிந்திருக்கிறோம்.

23. உம்முடைய ஜனமாகிய இஸ்றா யேலைப் போல் இவ்வுலகத்தில் வேறு ஜனமும் உண்டோ?  பூலோக ஜாதி களுக்குள் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்குச் சொந்த பிரஜையென்று மீட்டிரட்சிப்பதற்கும் தமக்குக் கீர்த்தி விளங்கப் பண்ணுவதற்கும் ஏற்பட்டீர்!  தேவரீர் எஜிப்த்திலிருந்து மீட்டிரட்சித் துக் கொண்ட உம்முடைய ஜனத்திற்கு முன்பாகப் பயங்கரமான மகத்தான அற்புதங்களை அவர்கள் நடுவிலே நடத்தி அந்த எஜிப்தியரையும், அவர்களுடைய தேவர்களையும் உபாதித் தீரன்றோ?

24. உள்ளபடி உம்முடைய பிரஜை யாகிய இஸ்றாயேலை என்றைக்கும் உமக்குச் சொந்த ஜனமாயிருக்கும்படி தெரிந்து கொண்டீரே;  தேவரீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர்.

25. இப்பொழுதும் தேவனாகிய கர்த்தாவே உம் ஊழியனையும் அவன் வீட்டையுங் குறித்துத் தேவரீர் அருளிச் செய்த வாக்கியத்தை என்றென்றைக்கும் நிறைவேற்றி, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.

26. அப்படி செய்தால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் இஸ்றாயேலின் தேவனானாரென்று சொல்லி உலகத்தார் உம்முடைய நாமம் அனவரதகாலமாய்ப் போற்றி ஸ்துதித்துப் பாராட்டுவார்கள்; மேலும் உமதடியானாகிய தாவீதின் வீடுங் கர்த்தருக்கு முன்பாக நிலை நிற்கும்.

27. உள்ளபடி சேனைகளின் தேவ னாகிய கர்த்தரே, நாம் உனக்கு வீடு கட்டுவோமென்று தேவரீர் சொன்ன வாக்கியம் உமதடியான் செவியில் ஏறின படியாலன்றோ உமதடியான் உமக்கு இந்த விண்ணப்பத்தைச் செய்யத் துணிந் தான்.

28. இப்பொழுது தேவனாகிய கர்த் தாவே நீரே தேவன்; உமது வாக்கியமே சத்தியம்; நீர் உமதடியானுக்கு மேற்படி சுவிசேஷங்களை அருளிச் செய்ததினால், 

29. தேவரீர் அந்த வார்த்தைகளின் படி செய்ய ஆரம்பித்து அடியானுடைய வீடு உமது சந்நிதியிலே அநவரதகாலமா யிருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; ஏனெனில் தேவனாகிய கர்த்தரான தேவரீரே பேசினீர்; உம்முடைய ஆசீர் வாதத்தினாலேதானே உமதடியா னுடைய வீடு என்றென்றைக்கும் ஆசீர் வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.