ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 07

தேவ தண்டனையை மறிக்க ஆமோஸ் தீர்க்கத்தரிசி செபம் பண்ணுகிறதும், - இஸ்றாயேலர் சிறைப்பட்டுப் போவார்களென்று ஆமோஸ் உவமையாகச் சொல்லியதும், - அமாசியா தீர்க்கதரிசியைக் குறித்து முறையிடுகிறதும், - அமாசியாவுக்கு வந்த தண்டனையும்.

1. எம்பிரானான ஆண்டவர் எனக்குத் தந்த காட்சியாவது: வசந்தகால மழையால் புற்கள் முளை கிளம்ப ஆரம்பிக்கையில், (ஆண்டவர்) வெட்டுக்கிளிகளை உருவாக்குவதாய்த் தோற்றமானது; அரசனின் புல்லறுப்பானதும், அவைகளை வசந்த பருவ மழையானது மறுபடியுங் கிளம்பச் செய்வதையுங் கண்டேன்.

* 1-ம் வசனம். இங்கு வெட்டுக்கிளி என்பது அசீரியரைக் குறிக்கின்றது; தீர்க்கத் தரிசியானவர் முதலாவது. - புற்கள் பசுமையாய்க் கிளம்பக் கண்டது; செழுமையாயிருந்த இஸ்றாயேலரைக் குறிப்பிடுகின்றது; 2-வது - அரசனால் புற்கள் அசுவங்களுக்காக அறுக்கப்பட்ட தானது, சீரியா அரசனாகிய பெனாதாத் என்போனால் இஸ்றாயேல் நாசமடைந்ததைக் குறிப்பிடுகின்றது; 3-வது - அறுபட்ட புற்கள் மறுபடியும் வசந்தகால மழை வருஷத்தால் கிளம் பினதானது, இஸ்றாயேல் அரசனாகிய யோவாஸ் குமாரன் எரோபோவாம் காலத்தைக் குறிக்கிறது. 4-வது.--வெட்டுக்கிளி கூட்டம் மறுபடி கிளம்பிப் புற்கள்மீது பாய்ந்ததானது, மனா யேன் அரசன் காலத்தில் இஸ்றாயேலை நாசஞ்செய்யக் கிளம்பிய அசீரியர் அரையனாகிய பூல் என்பானைக் குறிக்கிறது என அறியவும். குறுகிப் போன யாக்கோபு: பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலியவற்றால் சனம் குறைந்துபோன யாக்கோபு எனப் பொருள்படும்.

2. அவைகள்மீது வெட்டுக்கிளி கூட் டம் வீழ்ந்து தின்று நாசமாக்குகையில், எம்பிரானான ஆண்டவரே, அவர்களுக்குக் கிருபை பாலிக்க மன்றாடுகிறேன்; ஏனெனில் குறுகிப்போன யாக்கோபை எழுப்பி விடப் பின்னை யாரால் முடியும் என்றேன்.

3. ஆனதைப்பற்றி ஆண்டவருக்கு மனக் கசிவு உண்டாக அங்ஙனம் இராது என்றருளினர்.

* 3-ம் வசனம். அங்ஙனம் இராது என்றால் முழுதும் நாசஞ் செய்யமாட்டோம் என வியாக்கியானங் கொள்ளும்.

4. தேவனாகிய ஆண்டவர் பின்னும் எனக்குக் காட்சி தந்ததாவது: தேவனா கிய ஆண்டவர் பழிவாங்குவதற்காகக் கொடிய நெருப்பைத் தருவிக்கக் கண் டேன்; (அந்நெருப்பானது) பெரும் பாதாள சலத்தை வரள வடித்து, வெளித் தோட்டத்திய ஓர் பாகத்தையுஞ் சேர்த்துப் பட்சணஞ் செய்தது.

* 4-ம் வசனம். இங்கு நெருப்பு என்பது: அசீரியர் அரசனாகிய தெகிளாத் பலாசாரைக் குறிக்கிறது; பெரும்பாதாளமென்பது: பெரும் பாதாளமாகிய அசீரியாவில் திரண்ட சனமாகிய இஸ்றாயேலை வாட்டினது என வியாக்கியானங் கொள்ளும்; வெளித் தோட்டத்தியதோர் பாகத்தையும் என்பது: நெப்தாலி, அசூர், சபுலோன் எனுங் கோத்திரங்கள் அசீரியரால் கைதிகளாகக் கூட்டிப் போகப்பட்டதைக் குறிக்கிறது.

5. அப்போது யான்: எம்பிரானான ஆண்டவரே! பொறுமை பாராட்டும்படி உம்மை மன்றாடுகிறேன்; சிறுத்துப் போயினன் யாக்கோபு, அவனைத் தூக்கி விடப் பின்னை யாரால் கூடும் என்றேன்.

6. அதின் நிமித்தமாய் ஆண்டவர் மனங்கசிந்து, இஃதும் அங்ஙனமாகா வெனத் தேவனாகிய ஆண்டவர் திரு வாய் மலர்ந்தருளினர்.

7. ஆண்டவர் பின்னும் எனக்குத் தந்த காட்சியாவது: ஆண்டவர் கொத்த னின் கொல்லறு கரத்தராய்ப் பூச்சு தீர்ந்த மதிளின்கண் நிற்கக் கண்டேன்.

8. அவர் என்னை நோக்கி: ஆமோசே! (நம் கரத்தில்) நீ காண்பதென்னை என வினவினார்; நான்: அஃது கொத்தனின் கொல்லறு என விடைதந்தேன்; ஆண்ட வர் அதற்கு: இனி நமது பிரசையாகிய இஸ்றாயேலின் நடுவில் நாம் கொல்லறைத் தொடவே மாட்டோம்; இனிமேற்பட மதிளைப் பூச்சு பூசுகிறதேயில்லை.

* 8-ம் வசனம். சுண்ணாம்பு பூசாத சுவர் நிற்காது இடிந்துவிழும் என்பது கருதது; அன்றியும் இஸ்றாயேல் பாபங்களை ஆண்டவர் இதுவரையில் மெழுகிவந்தார்; இனி அப்படியிராதெனவுங் கருத்துகொள்ளும்.

9. ஆதலின் விக்கிரகத்து உயர் ஸ்தா னங்கள் தகர்க்கப்படுவன; இஸ்றாயேலின் பரிசுத்த ஸ்தலங்கள் வீழ்த்தப்படுவன; எரோபோவாம் வீட்டை வாள் கொண்டு தாக்குவோம் என்றார்.

10. அப்போது பேட்டேலின் ஆசாரியனாகிய அமாசியாஸ் என்போன் இஸ்றாயேல் அரசனாகிய எரோபோவாமுக்குச் சொல்லி அனுப்பியதாவது: உமது இராச்சியபாரத்தின் நடுவில் ஆமோஸ் உமக்கு விரோதமாய்க் கலகம் விளைவிக்கின்றனன்; அவனுடைய பிரபோதங்களைத் தேசஞ் சகிக்கக்கூடாதிருக் கின்றது.

11. ஏனெனில், ஆமோஸ் என்போன்: எரோபோவாம் வாளால் மடிவன்; இஸ் றாயேல் தன் தேசம் விட்டுக் கைதியாய்க் கூட்டிப் போகப்படும் என்கிறான் என்பதே.

12. பின்பு அமாசியாஸ் ஆமோசைப் பார்த்து: காட்சிகாரனே புறப்படு; யூதா நாட்டிற்கு ஓடிப்போ; அங்கு நீ நல்ல அப்பம் சாப்பிடுவாய்; அங்கு உன் (மனோ அபீஷ்டம் போல்) தீர்க்கவசனங் கூறு.

13. இனி பேட்டேலில் காட்சி கூறாதே; ஏனெனில், இது அரசருடைய பூசிக்கப்பெற்ற ஸ்தானம்; இங்கு அவருடைய இராச மாளிகையும் இருக்கின்றது என்றான்.

14. அதற்கு மறுமொழியாக ஆமோஸ் என்போர் அமாசியாசைப் பார்த்து: நான் தீர்க்கவசனனுமல்லேன், தீர்க்கத்தரிசி யின் புத்திரனுமல்லேன்; மாடாடு மேய்ப்பவன்; யான் காட்டு அத்திக் கனிகளை அருந்துபவன்.

15. யான் மந்தை ஓட்டிப் போகை யில் ஆண்டவர் என்னைப் பிடித்தனர்; பின்னும் ஆண்டவர் என்னைப் பார்த்து: நமது சனமாகிய இஸ்றாயேலிடந் தீர்க்கவசனனாகப் போவென்றார்.

16. இப்போது ஆண்டவரின் வாக்கி யத்தைக் கேள்: “இஸ்றாயேலைக் குறித்துக் காட்சி கூறாதே; விக்கிரக வீட்டின்மீது (நிற்பாக்கிய) தீர்க்கவசனம் புகலாதே” என நீ சொல்லுகின்றனை.

17. ஆனதை முன்னிட்டு ஆண்டவர் சொல்வதேதெனில்: உன் பத்தினி பட்டணத்து நடுவில் வேசையாவள்: உன் புத்திரர் வாளுக்கு இரையாவார்கள்; உன் பூஸ்திதி பங்கு போட்டுக்கொள்ளப் படும்; நீயோ தீட்டான நாட்டிலே மாண்டுபோவாய். இஸ்றாயேல் தன் தேசத்துக்குத் துலை தூரத்துக்குச் சிறை யாகக் கூட்டிப் போகப்படும் என்றார்.