ஓசே ஆகமம் - அதிகாரம் - 07

துர்க்குணங்கள் அக்கினியாகக் கிளம்புகின்றது -- எஜிப்த்தியர் உதவிக்கு வரமாட்டார்கள்.

1. இஸ்றாயேலைக் குணப்படுத்த நாம் சித்தங் கொள்ளுகையில், எப்பிராயீம் அக்கிரமமும், சமாரியாவின் துஷ் கிருத்தியமும் அநுத்தமானவைகளை நடத்தி வெளிப்படலாயின; ஆதலான் அவர்கள் (உட்புறம்) கள்வரும், வெளிப்புறம் உற்பாதகருமாய்க் கொள்ளையாடப்பட்டனருமாம்.

* 1-ம் வசனம். ழேயு காலத்தைக் குறித்துப் பேசப்படுகிறது; ழேயு முதலில் விக்கிரக ஆராதனையை முழுதும் அழித்து, கடைசியில் துர்ப்போதனையால், மறுபடி விக்கிரக ஆராதனையை ஸ்தாபித்தனன். (இராசாக்கள் IV. 9-7).

2. அவர்கள் தம் பூர்வீக துஷ்கருமங்களை யாம் நினைவுகூர்ந்துளதாக இருதயத்தில் எண்ண வேண்டியதில்லை; நமது முகதாவில் அவர்கள் கட்டிக் கொள்ளுந்தின நித பாவங்களே அவர்களைச் சூழ்ந்து கொண்டன; நம்மையும் பழி கேட்கினறன.

3. அவர்கள் தங்கள் துஷ்கருமத்தினால் அரசனையும், அசத்தியங்களால் பிரபுக்களையும் பூரிக்கச் செய்தனர்கள்.

* 3-ம் வசனம். தப்பு ஸ்தோத்திரஞ் செய்வதினாலே.

4. எல்லோருந் தீமுகம் பெற்ற அப்ப அடுப்பைப் போன்று (விரகதாப) வியபசாரிகளாயிருக்கின்றனர்; மாவிலிட்ட புரையானது எல்லாவற்றிற்கும் புளிப் பேற்றுந்தனையும் பட்டணங்களை யாறினதில்லை.

* 4-ம் வசனம். சனங்கள் எல்லாம் முழுதுங் கெட்டுப் போகுந்தனையும் நித்திரையின்றி அவ்வளவு மன ஊக்கத்தோடு வேலை செய்தனராம்.

5. (அவர்கள் எண்ணங் கைகூடவே,) இஃது நமது அரசரின் (வைபவ) நாள் என நிர்த்தனஞ் செய்தனர்கள்; பிரபுக்கள் அபரிமித இரசபானஞ் செய்தனர்கள்; அரசனும் பகடிக்காரருக்குக் கரம் நீட்டினள்.

6. அவன் அவர்களுக்கு (விக்கிரக ஆராதனைக்) கண்ணி வைக்கையில், இவர்கள் தங்கள் இருதயத்தை அப்ப அடுப்பைப் போல் காட்டினார்கள்; அதில் அவர்கள் அபேட்சையால் அப்பம் போல் வேகுகையில் அவன் இரவு முழுதும் (அசோதையாய்க்) கண்வளர்ந் தனன். ஆயினுங் காலையில் அதே சுவாலையால் பற்றியெரியக் காணப் பட்டனன்.

* 6-ம் வசனம். விக்கிரக ஆராதனை மீது அவர்கள் வைத்த ஆசை தீ மூட்டப்பட்ட அப்ப அடுப்புச் சுவாலை போலிருந்ததாம்.

7. இங்ஙனம் யாவருஞ் சூளைபோல் சுவாலைவிட்டெறிய, (அச்சுவாலை) நியாயாதிபதிகளை விழுங்கலாயினது; அவர்கள் அரசர் யாவரும் அதில் வீழ்ந்தனர்; அவர்களில் நம்மை நோக்கி அபயமிடுவான் ஒருவனுமே இல்லை.

8. எப்பிராயீம் பிறசாதி சனங்களோடு கலப்புற்றது; எப்பிராயீம் சாம்பற்குட் சுடப்படுந் திருப்பிப்போடா அப்பம் போலானது.

* 8-ம் வசனம். யூத சாதி பிறசாதியாரோடு கலப்பது ஆண்டவர் கட்டளைக்கு விரோதம் ஆதலின்.

9. அதினுடைய சத்தை (எல்லாம் அந்நியர் உறிந்துபோட்டனர்; ஆயினும் அது அறிந்ததில்லை; தலைமயிர் நரை தட்டினதாயினுந் தெரிந்துகொண்டதில்லை.

* 9-ம் வசனம். எப்பிராயீம் கோத்திரத்தாருடைய சொத்து சுதந்தரங்களை அந்நிய நாட்டார் கொண்டுபோவதற்குக் காரணம் இன்னதென்று அறிந்துகொள்ளவில்லை.

10. இஸ்றாயேலின் அகங்காரம் அதின் கண்முன்னரே பங்கமாகுமென்றாலும் தங்கள் தேவனாகிய ஆண்டவரிடந் திரும்பியும் வரார்கள், இவைகளிலெல்லாம் அவரைத் தேடவுமாட்டார்கள்.

11. எப்பிராயீம் பிடிபட எளிதாகிய கபடற்ற புறாவைப் போலாயினது; எஜிப்த்தைத் துணைக்கழைத்தது, அசீரியரிடமும் போனது.

12. அவர்கள் (வியர்த்தமாய்ப்) புறப்பட்டானதும், நமது வலையை அவர்கள் மேல்விரித்து, ஆகாயப் பறவைகளைப் போல் பிடித்து, அவர்கள் கூட்டத்தில் அறிவித்த வண்ணந் துன்புறுப்பாம்.

13. நம்மை விட்டு அகன்றதால் அவர் கட்கு ஐயோ கேடாம்; நமக்கு இரண்டகஞ் செய்ததால் அவர்கள் சங்கரிக்கப் படுவார்கள்; நாம் அவர்களை மீட்டிருக்க நமக்கு விருத்துவமாய் அபத்தம் பேசினார்கள்.

14. ஆனால் அவர்கள் தம் (துன்பப்) படுக்கையதனில் தம் விக்கிரகங்களை நோக்கி கழறினர்களே அல்லாது நம்மை நோக்கி இருதயகதமாய் அபயமிட்டார்களில்லை; அவர்கள் கோதும்பை மீதும், இரசத்தின்மீதும் (முழு) சிந்தனை கொண்டு நம்மை விட்டு அகன்றார்கள்.

15. நாம் அவர்கட்கு (வேதம்) உணர்த்தியும், அவர்கள் புயங்களை வலுப்படுத்தியும், அவர்கள் நமக்கு விருத்துவமாய்த் துஷ்கிருத்தியத்தையே செய்யலாயினர்கள்.

16. அவர்கள் மறுபடியும் நமது நுகம் நீங்கியிருக்க எத்தனித்து, கபடமுள்ள வில்லாயுதமானார்கள்; (ஆதலின்) அவர்களின் அதிபதிகள் தம் உக்கிர நாவின் நிமித்தம் (சத்துராதிகளின்) வாளால் மடிவார்கள்; இங்ஙனம் எஜிப்த்திய இராச்சியத்தில் (இவர்கள் கதி) பகடிக்கு இடமாகுமாமே.

* 16-ம் வசனம். கபடமுள்ள வில்லாயுதமானார்கள்; ஆண்டவரிடத்தில் திரும்பாமல் விக்கிரக ஆராதனையே நோக்கியதாலே.