அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 07

இஸ்றாயேலியர் பிலிஸ்தியரை முறியடித்தது.

1. அப்படியே கரியாத்தியாரிம் மனிதர்கள் வந்து ஆண்டவருடைய பெட்டகத்தைக் கொண்டு வந்து காபா வில் அமினதாப் வீட்டில் அதை ஸ்தாபித் தார்கள். மேலும் அவனுடைய குமார னாகிய எலேயசாரை ஆண்டவருடைய பெட்டகத்தைக் காத்துக்கொண்டிருக் கும்படி பரிசுத்த அபிஷேகம் பண்ணி னார்கள்.

2. ஆண்டவருடைய பெட்டகம் காரியாத்தியாரிமில் எழுந்தருளி வந்த நாள் முதல் வெகு காலம் (அதாவது: இருபது வருஷம்) கடந்து போயின. அப்பொழுது இஸ்றாயேல் வீடு முழுதும் ஆண்டவருடன் இளைப்பாறத் துவக் கினது.

3. அக்காலத்தில் சமுவேல் சமஸ்த இஸ்றாயேர்களையும் பார்த்துச் சொன்ன தாவது: நீங்கள் முழு இருதயத்துடன் ஆண்டவரிடத்திற்குத் திரும்பி வருவீர் களாகில் உங்கள் நடுவில் நின்று பாவால் அஸ்தாரோத் என்னும் அந்நிய தேவர் களை எடுத்து விடுங்ள். சுவாமிக்கு உங்கள் இருதயத்தை முஸ்திப்பு பண்ணி அவருக்கு மாத்திரம் ஊழியம் பண்ணுங் கள். பிலிஸ்தியர் கையினின்று அவர் உங்களை மீட்பார்.

4. ஆகையால் இஸ்றாயேல் குமாரர் கள் பாவாலையும், அஸ்தாரோத்தையுந் தள்ளி விட்டு ஆண்டவருக்கு மாத்திரம் ஊழியஞ் செய்தார்கள்.

5. பிறகு: நான் உங்களுக்காக ஆண்டவரை மன்றாடும்படிக்கு மாஸ் பாவிலே இஸ்றாயேலரை எல்லாஞ் சேரும்படி அழையுங்களென்று சமுவேல் சொன்னான்.

6. அப்படியே அவர்கள் மாஸ்பா விலே கூடி சலத்தை மொண்டு சுவாமி சமுகமுன் ஊற்றினார்கள். அந்நாளிலே ஒரு பொழுதிருந்து ஆண்டவருக்குத் துரோகிகளானோமென்று அங்கு சொன் னார்கள். சமுவேல் மாஸ்பாவிலே இஸ்றாயேல் புத்திரர்களுக்கு நீதி செலுத் தினான்.

7. அப்பொழுது இஸ்றாயேல் புத்திரர் மாஸ்பாவிலே சேர்ந்திருக்கிறார் களென்று பிலிஸ்தியர் கேள்விப்பட்டு பிலிஸ்தியரில் அதிபதிகள் இஸ்றாயேல் பேரில் எழும்பினார்கள். இஸ்றாயேல் குமாரர் அதைக் கேள்விப்பட்டு பிலிஸ்தியர் சமுகத்துக்குப் பயந்தார்கள்.

8. மேலுஞ் சமுவேலை நோக்கி: பிலிஸ்தியர் கையினின்று எங்களை மீட்கும்படிக்கு நமது தேவனாகிய ஆண் டவரிடத்தில் நீர் எங்களுக்காக மன்றாடு வதை விடாதேயுமென்று சொன்னார்கள்.

9. அப்போது சமுவேல் பால் குடிக்கிற ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதை முழுதும் ஆண்டவருக்குத் தகனப் பலியாக ஒப்புக்கொடுத்தான். சமுவேல் இஸ்றாயேலுக்காக ஆண்டவரை நோக்கிக் கூவினான். ஆண்டவர் அவனைக் கேட்டருளினார்.

10. சமுவேல் பலி ஒப்புக்கொடுக்கை யில் பிலிஸ்தியர் இஸ்றாயேலருடன் சண்டை தொடுக்கும்படிச் சம்பவித்தது; அந்நாளிலே ஆண்டவர் பிலிஸ்தியர்மேல் பெலத்த சப்தமாய் இடியிடிக்கச் செய்து அவர்களைப் பயமுறுத்தினார். அவர்கள் இஸ்றாயேலர் முன் மாண்டார்கள்.

11. இஸ்றாயேல் புத்திரர் மாஸ்பா வினின்று புறப்பட்டுப் பிலிஸ்தியரைப் பின்றொடர்ந்து பெட்கார் கீழ்ப்புறத் திலிருந்த இடமட்டுக்கும் அவர்களை வெட்டினார்கள்.

12. சமுவேல் ஒரு கல்லை எடுத்து மாஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக அதை நிறுத்தி வைத்து அந்த இடத் திற்குச் சனுகுப் பாறையென்று பேரிட் டான். இதுவரைக்கும் ஆண்டவர் நமக்கு உதவியாயிருந்தாரென்று சொன்னான்.

13. பிலிஸ்தியர் தாழ்த்தப்பட்டுப் போனார்கள். அதற்குமேல் இஸ்றாயேலின் எல்லைகளில் வரத் துணிந்ததில்லை; சமுவேலின் நாட்களெல்லாம் ஆண்டவ ருடைய கை பிலிஸ்தியர் பேரில் சுமந் திருந்தது.

14. பிலிஸ்தியர் இஸ்றாயேல் கையிலி ருந்து கேட் துவகக அக்காரோன் வரைக் கும் எடுத்துக்கொண்ட பட்டணங்களும் அதின் எல்லைகளும் இஸ்றாயேலுக்குக் கொடுக்கப்பட்டன. பிலிஸ்தியர் கையி னின்று சமுவேல் இஸ்றாயேலை மீட் டான். அமோறையருக்கும் இஸ்றாயே லுக்கும் சமாதானமிருந்தது.

15. சமுவேல் தன் சீவிய நாட்கள் எல்லாம் இஸ்றாயேலுக்கு நீதி செலுத்திக் கொண்டு வந்தான்.

16. வருஷா வருஷம் அவன் பேட்டேல் கல்கலா மாஸ்பாவைச் சுற்றித் திரிந்து போய் மேற்சொன்ன இடங்களில் இஸ்றாயேலுக்கு ஞாயந் தீர்ப்பான்.

17. அப்புறம் அவன் ராமாத்தாவுக் குத் திரும்பி வருவான். அங்கு அவனுடைய வீடிருந்தது. அங்கு இஸ் றாயேலுக்கு ஞாயந் தீர்ப்பான். அங்கு ஆண்டவருக்கு ஒரு பீடங் கட்டினான்.