இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 07

கானானியரைச் சங்கரிக்க வேண்டுமென்று தேவன் இஸ்றாயேலியருக்குக் கட்டளை கொடுத்ததும் -- இவர்களுக்கு வெற்றி தருவதாக வார்த்தைப்பாடு கொடுத்ததும்.

1. பின்னும் நீ சுதந்தரித்துக் கொள்ளப் போகிற தேசத்திலே உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப் பண்ணி உன்னைப் பார்க்கிலும் அதிகப் பெருத்ததும், பலத்ததுமான சாதிகளாகிய ஏட்டையரட, ஜெற்கேசையர், அமோறையர், கானானியர், பெலேசையர், ஏவையர், ஜெபுசையர் என்னப் பட்ட ஏழு சாதிகளை அவர் உனக்கு முன்பாக அழித்து,

2. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கைவசப்படுத்திய பின்பு நீ அவர்களை முறிய அடித்துச் சர்வ சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு நீ உடன்படிக்கையும் பண்ண வேண்டாம். அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.

3. அவர்களோடு விவாக சம்பந்தஞ் செய்யாதே. உன் குமாரத்தயை அவன் குமதரனுக்குக் கொடுக்காமலும், உன் குமாரனுக்கு அவன் குமாரத்தியைக் கொள்ளாமலும் இருப்பாயாக.

4. ஏனெனில் நம்மைப் பின்பற்றாமல் நீ அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அந்தப் பெண்கள் உன் குமாரர்களைத் துர்ப்புத்தியால் கெடுத்துப் போடுவார்கள். அதினாலே கர்த்தருக்குக் கோபம் உண்டாகி உன்னைச் சீக்கிரத்தில் அழித்துப் போடுவார்.

5. ஆனபடியால் நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியதேதெனில்: அவர்களுடைய பலிபீடங்களையும் இடித்து, அவர்களுடைய சிலையையும் உடைத்து, அவர்களுடைய திருவனங்களையும் வெட்டி, கொத்துவேலையாகிய அவர்களுடைய விக்கிரகங்களையும் சுட்டெரித்துப் போடக் கடவீர்கள்.

6. உள்ளபடி நீ உன்தேவனாகிய கர்த்தருக்கு வசீகரமான சனமாயிருக்கிறாய். பூமியிலுள்ள எல்லாச் சனங்களிலும் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்த சனமாகத் தெரிந்து கொண்டார்.

7. சகல சனங்களிலும் நீங்கள் திரளான சனமென்று கர்த்தர் உங்களோடு சேர்மானம் பண்ணி உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை. உள்ளபடி நீங்கள் மற்றுமுள்ள சகல பிரசைகளிலும் கொஞ்சமாயிருக்கிறீர்களே ;

8. அவர் உங்கள்மேல் அன்புகூர்ந்து உங்கள் பிதாக்களுக்கு அவர் இட்ட ஆணையைக் காக்க வேண்டுமென்கிற முகாந்தரத்தினாலே அவர் பலத்த கரத்தினால் உங்களைப் புறப்படப் பண்ணி அடிமைத்தன வீட்டில் நின்றும் எஜிப்த்து அரசனாகிய பரவோனுடைய கையில் நின்றும் உங்களை மீட்டுக் கொண்டார்.

9.  ஆனதினால் உன் தேவனாகிய கர்த்தர் வல்லபத்தையும், உண்மையையும் பொருந்திய தேவனென்றும், அவர் தம்மை நேசித்துத் தம்முடைய கற்பனைகளை அநுசரிக்கிறவர்களுக்கு ஆயிரந் தலைமுறைகள் மட்டும் உடன்படிக்கையையும் கிருபாகடாட்சத்தையும் காக்கிறவர் என்றும்,

10. தம்மைப் பகைக்கிறவர்களின் மேல் அவர் உடனே பழிவாங்கி, அவர்களுடைய தகுதிக்கேற்றபடி அவர்களுக்குப் பதிலான தண்டனை செய்யச் சற்றும் தாமதியாமல் க்ஷணமே அவர்களை அழிக்கிற தேவனுமாயிருக்கிறார் என்று அறியக்கடவாய்.

11. ஆகையால் நீ அநுசரிக்கும் பொருட்டு நான் இன்று உனக்குக் கருத்தாய்க் கற்பிக்கின்ற கட்டப் பிரமாணங்களையும், இரீதி ஆசாரங்களையும், நீதி முறைமைகளையும் கைக்கொண்டு பாதுகாக்கக் கடவாய்.

12. இந்த நீதி நியாயங்களை நீ கேட்டு அவற்றைக் காத்து அனுசரிப்பாயாகில், உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்çகையையுங் காப்பார். கிருபாகடாட்சத்தையும் உன் மட்டிலே வைப்பார்.

13. அவர் உன்னை நேசித்து உனக்கு அளிக்கப் படுமென்று அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே உன்னைப் பெருகப் பண்ணி உன் பிள்ளைகளையும் உன் நிலத்தின் கனியாகிய உன் தானியங்களையும், உன் திராட்ச இரசத்தையும், உன் எண்ணெயையும், உன் ஆட்டு மந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

14. மறறுமுள்ள சகல சனங்களை விட நீ ஆசீர்வதிக்கப் பட்டவனாயிரு;பாய். உங்களுக்குள்ளேயும் உங்கள் மிருக சீவன்களுக்குள்ளேயும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடு இருக்காது.

15. கர்த்தர் நோயயல்லம் உன்னை விட்டு நீங்கப் பண்ணுவார். உனக்குத் தெரிந்திருக்கிற எஜிப்த்தியரின் கொடிய ரோகங்கள் உன் சத்துருக்களுக்கு வருமேயன்றி உனக்கு வராது.

16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கைவசப்படுத்த இருக்கும் எல்லாச் சனங்களையும் அதம் பண்ணக் கடவாய். உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக. அவர்கள் கும்பிடுகிற தேவர்களை நீ சேவியாமலிருப்பாயாக. சேவித்தால் கெட்டுப் போவாய்.

17. அந்தச் சாதியார்கள் என்னைப் பார்க்கிலும் அநேகராயிருக்கிறார்க¼ள் அவர்களை அழிக்க என்னால் கூடுவதெப்படி என்று நீ மனதில் சொல்லிக் கொண்டாயானால்,

18. உன்னுடைய கர்த்தர் பரவோனுக்கும், சமஸ்த எஜிப்த்தியருக்கும் செய்ததையும்,

19. உன் கண்கள் கண்ட கொடிய வாதைகளையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப் பண்ணிக் காண்பித்த அடையாளங்களையும், அற்புதங்களையும், பலத்த கரத்தையும், ஓங்கிய புயத்தையும் நினைத்துக் கொள். நீ பார்த்துப் பயப்படுகிற எல்லாச் சனங்களுக்கும் அவர் அவ்வண்ணமே செய்வார். பயப்படாதே.

20. மீளவும் அவர்களில் எவர் உனக்குத் தப்பி ஒளிந்து கொண்டிருப்பார்களோ அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் வேரோடு அழித்துப் போடும் நாள் பரியந்தம் அவர் செங்குளவிகளையும் அனுப்பி அவர்களை வாதித்துத் துன்புறுத்துவார்.

21. அவர்களுக்குப் பயப்பட வேண்டாம். ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவிலே வீற்றிருக்கிறார். அவரோ மகத்துவமும் பயங்கரமுமுள்ள தேசன்.

22.  அவரே உன் முன்னிலையில் அந்தச் சனங்களை மெதுவாகவும் கொஞ்சங் கொஞ்சமாகவும் அழிந்து போகச் செய்வார். உள்ளபடி அந்தச் சாதியாரை ஒருமிக்க நிர்மூலம் பண்ணுகிறதாயிருந்தால் காட்டு மிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகுமே.

23. உன் தேவனாகிய கர்த்தரோ அவர்களை உன் முன்னிலையில் வைத்து விட்டு அவர்கள் முற்றும் அழிவாகுமட்டும் அவர்களைச் சாகடிப்பார்.

24. அவர்களுடைய அரசர்களையும் உன் கைவசப்படுத்துவார். நீ அவர்களுடைய பெயர் முதலாய் வானத்தின் கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக் கடவாய். நீ அவர்களை அழித்துத் தீரும் வரைக்கும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்க மாட்டார்கள்.

25. அவர்களுடைய சித்திரித்த விக்கிரகங்களை நெருப்பால் சுட்டெரிக்கக் கடவாய். அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகளாகையால், நீ படுகுழியில் விழாதபடிக்கு அவைகளிலிருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அவற்றில் கொஞ்சமேனும் எடுத்துக் கொள்ளாமலும் இருப்பாயாக.

26. அந்த விக்கிரகங்களைப் போல நீ சாபத்துக்குள்ளாகாத படிக்கு அதுகளில் யாதொன்றையும் உன் வீட்டில் கொண்டு போகத் துணியாதே. அது சாபத்துக்கேற்ற பொருளானதால் நீ விக்கிரகத்தை அசுசியமென்றும், தீட்டு ஊத்தையயன்றும் வெறுத்துச் சீயயன்று அரோசித்து அருவருக்கக் கடவாய்.