ஓசே ஆகமம் - அதிகாரம் - 06

இஸ்றாயேலின் அபத்தமான மனந்திரும்புதல், - அதன் நம்பிக்கை வியர்த்தமாம்.

1. இஸ்றாயேல் மக்கள் தம் உபத்திரவத்தில் (நல்லுணர்வடைந்து) காலையிற்றானே நம்மைச் சரணடையக் கிளம்பி: வாருங்கள், ஆண்டவரிடந் திரும்புவோம்.

* 1-ம் வசனம். இஸ்றாயேல் மக்கள் துன்பத்தினால் நல்லுணர்வடைந்து, ஆண்டவருடைய திருவடிகளைச் சரணடையத் தீவரிப்பார்களெனறும், அவர்களுடைய கல்நெஞ்சைப் பற்றியும், விக்கிரக ஆராதனையைப் பற்றியும் முறையிட்டு, பூசை ஆராதனையை விடத் தயவு தாட்சண்ணியத்தைத் தாம் அதிகம் மதிப்பதாக ஆண்டவர் கூறுகின்றனர்.

2. ஏனெனில், நம்மைக் கைது செய்தவர்தாமே, நம்மை விடுதலை செய்வர்; நம்மைக் காயப்படுத்தியவர்தாமே, நம்மைக் குணப்படுத்துவர்.

3. நமக்கு இரு தினத்தில் சீவனை ஊட்டி, மூன்றாம் ஞான்றில் நம்மை உயிர்ப்பிக்க, நாம் ஆண்டவர் சமுகத் தில் (நன்கு) வாழ்வோம்; நாம் (தெய்வ) அறிவடைந்து, ஆண்டவரை (மேன் மேலும்) சிந்தை கொள்ள, அவரைப் பின்தொடர்வோமாக; அவருடைய வருகை நமக்கு அருணோதயமாகச் சித்தஞ் செய்யப்பட்டிருக்கின்றது; அவர் பூமி மீது இழியும் முன் பருவப் பின்பருவ மழை போலிறங்குவர் என்பார்கள்.

* 3-ம் வசனம். மெசியாஸ் வருகையைக் குறித்துப் பேசப்படுகிறதைக் கவனிக்கவும்.

4. எப்பிராயீமே! (இன்னம்) உனக்கு எதைச் செய்வோம்; யூதா உனக்குப் (பிறிது) என்ன செய்வோம்; பிறர்மீது பாராட்டப்பட்ட உங்கள் இரக்கம் அதிகாலைய மேகம்போலும், இளம் பொழுதே மறைவாகும் பனிபோலும் இருந்ததன்றோ.

5. அதை முன்னிட்டே தீர்க்கவசன ரைக் கொண்டு அறிக்கையிட் டனம்; நமது நாவின் வாக்கியங் களால் அவர்களை வதைத்து வந்தனம்; ஆதலின் உங்கள் தண்டனை (நீதியான தென) வெட்டவெளிச்சமாகின்றது அன்றோ?

6. ஏனெனில், பூசைப் பலியை விடத் தயாளத்தையும், தகன பலியைவிடத் தெய்வ கியானத்தையும் உங்களிடத்தில் ஆசித்தோம்.

7. அவர்களோ ஆதாமைப்போல் நம் உடன்படிக்கையை மீறி, இவ்வாறு நமக்குத் துரோகஞ் செய்தனர்.

* 7-ம் வசனம். ஆதாம் என்போர் தம் கட்டளைக்குக் கீழ்ப்படியாததுபோல், இவர்களும் உடன்பாட்டுக்குக் கீழ்ப்படியாது போயினர் என்பது கருத்து.

8. (மெய்யாகவே) கலாஹாத் ஆனது விக்கிரக ஆசாரிகள் பட்டணமாயும், (முழுதும்) இரத்தஞ் சொரியப்பெற்ற இட மாகவும் இருக்கின்றது.

9. வழிப்போக்கரைக் கொலை செய்யச் சிக்கேம் தடத்தில் கள்வர் படுகுழி பாச்சி வைப்பதுபோல், அது (பொய்த் தேவ) குருக்களோடு (ஒருமித்துத் தின்மை செய்ய) சதி யோசனை செய்கின்றது; ஏனெனில், அங்கு சகல பாதகங்களையுங் கட்டிக் கொள்ளுகின்றனர்.

10. இஸ்றாயேல் வீட்டில் யாம் பயங்கரமாகிய காரியமொன்று கண் டோம்; அங்கு எப்பிராயீம் (விக்கிரகங்களோடு) சோரம் போகப் பார்த்தோம்; அங்ஙனம் இஸ்றாயேல் தீட்டுப் பட்டது.

* 10-ம் வசனம். எப்பிராயீம் கோத்திரத்தினின்று கிளம்பவேண்டிய எரோபோவாம் அரசன் இஸ்றாயேலுககுள் விக்கிரகங்களையும், பொன்னால் சமைக்கப்பட்ட கன்றுகுட்டிகளையும் நுழைப்பித்ததால் இஸ்றாயேலுங் கெட்டுப் போயிற்று.

11. (அதோடு தீட்டுபட்ட) யூதா நீயும் நமது பிரசையின் அடிமைத்தனத்தை நாம் நிவர்த்தித்து வருந்தனையும் தண்டனையாகிய அறுப்புக்கு எதிர்பார்த்திருக்கக் கடவை.