அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 06

எலிசேயின் வேறு புதுமைகள்.

1. ஒருநாள் தீர்க்கவசனரின் சீஷர்கள் எலிசேயை நோக்கி: அடியோர்கள் உம்மோடு வசித்துவரும் இந்த இட மானது வெகு நெருக்கமாகவிருக்கின்றது உமக்குத் தெரியுமே.

2. தேவரீர் உத்தரவு கொடுத்தால் யோர்தான் கரைக்குப் போய் ஒவ்வொரு வருங் காட்டினின்று மரங்களை வெட்டிக் கொணர்ந்து வந்து வீடு கட்டி அவ் விடத்தே குடியேறுவோமென்றார்கள். அதற்கு அவன்: போகலாம் என விடை தந்தான்.

3. அவர்களில் ஒருவன்: அடியோர் களோடு தேவரீரும் எழுந்தருளிவாரும் என, அவன்: நானும் வருகிறேனென் றான்.

4. அப்படியே அவன் அவர்களோடு போனான். அவர்கள் யோர்தான் கரைக்கு வந்து மரங்களை வெட்டத் (துவக்கினார்கள்.)

5. அப்போது சம்பவித்தது என்ன வென்றால், அவர்களில் ஒருவன் ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருக்கையில் அவனுடைய கோடாலி காம்பைவிட்டு சலத்தில் விழுந்ததாம். அவன் அப்போது எலிசேயை நோக்கி: ஐயோ என் ஆண்ட வனே! ஐயையோ, இதனை இரவலா யன்றோ வாங்கி வந்தேனெனக் கூக்குர லிட்டான்.

6. அப்போது ஆண்டவரின் மனிதன்: அஃது எங்கு வீழ்ந்தது என்று அவனைக் கேட்க, அவன் அங்கேதானென்று அவ ருக்கு இடத்தைக் காட்டினான். உடனே எலிசே ஒரு சிறு கட்டைத் துண்டை வெட்டி அவ்விடம் எறிந்து விடவே கோடாலியும் மிதக்கத் துடங்கிற்று. 

7. (பின்னும் எலிசே சீஷனை நோக்கி:) எடுத்துக் கொள் என்றான். அவன் கையை நீட்டி எடுத்துக் கொண் டான்.

8. அது நிற்க, சீரியா அரசன் இஸ்றா லுக்கு விரோதமாகச் சமர்செய்திருந்த நாளில் ஒருநாள் அவன் தன் உத்தியோ கஸ்தரோடு ஆலோசனை பண்ணி இன்னின்னவிடத்தில் சேவகர்களைப் பதிவிருக்கச் செய்வோம் என்று சொன் னான்.

9. ஆதலால் கர்த்தருடைய மனித னானவன் இஸ்றாயேல் அரசனிடம் ஆளனுப்பி: அந்தவிடத்திற்குப் போகா மல் எச்சரிக்கையாயிரும். ஏனெனில், அங்கு சீரியர்கள் பதிவிருக்கப் போகின் றார்கள் எனச் சொல்லச் சொன்னான். 

10. இஸ்றாயேல் அரன் கர்த்தரு டைய மனிதனானவன் குறித்தவிடத் திற்குப் (படையை) அனுப்பி, அந்த விடத்தைத் தானே முந்தி பிடித்துக் கொண்டான். அவ்விதமாய்ப் பலமுறை யும் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

11. இச்சம்பவத்தின் பொருட்டுச் சீரியா அரசன் மனங் கலஙட்கித் தன் ஊழியர்களை வரச் சொல்லி: நீங்கள் இஸ் றாயேல் அரசரிடம் என்னைக் காட்டிக் கொடுத்தவனை ஏன் எனக்குக் காட்டா மல் இருக்கின்றீர்கள் என அவர்களைக் கேட்டதற்கு,

12. உத்தியோகஸ்தரில் ஒருவன் அவனை நோக்கி: என் அரசனான ஆண்டவனே! அப்படி ஒருக்காலு மில்லை; ஆனால் இஸ்றாயேலிலிருக்கும் எலிசே என்னுந் தீர்க்கத்தரிசி தாங்கள் ஆலோசனைக் கூட்டத்திலே சொல்லு பவையெல்லாம் இஸ்றாயேல் அரசனுக்கு வெளிப்படுத்திவிடுகின்றனர் என்றான்.

13. இராசா ஊழியர்களை நோக்கி: நீங்கள் போய் அவர் எங்கிருக்கிறாரென்று பாருங்கள்; பின்னும் நான் ஆளை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வே னென்றான். அவர்கள் (ஒரு நாள்) வந்து: இராசாவே இந்நேரம் (எலிசே) தோத்தானில் இருக்கிறார் என இராசா வுக்குத் தெரியச் சொன்னார்கள்.

14. ஆதலால் அரசன் அங்கு அசுவங் களையும், இரதங்களையும் அதிக பல சாலிகளான சேவகர்களையும் அனுப்பி னான். இவர்கள் இரவே வந்து பட்ட ணத்தைச் சூழ்ந்தார்கள்.

15. ஆண்டவருடைய மனிதனின் ஊழியக்காரன் அதிகாலை எழுந்து வெளியே சென்று, குதிரைகள் வண்டிகள் பட்டணத்தை வளைத்திருப்தைக் கண் ணுற்று தன் எசமானண்டைக்கு ஓடி வந்து: ஐயோ! ஐயையோ! என்ன செய் வோம் எனக் கூவிச் (சங்கதியை) அவருக்கு அறிவித்தான்.

16. அதற்கு (எலிசே) நீ அஞ்ச வேண் டாம்; அவர்களிடம் இருப்பவர்களை விட நம் பட்சத்தில் அதிகமான பேர்கள் இருக்கின்றார்கள் என மறுமொழி சொன்னான். 

17. பின்பு எலிசே செபத்தியானம் பண்ணி ஆண்டவரை நோக்கி: கர்த்தரே! அவன் (உமது மகத்துவத்தைப் பார்க்கும் படி அவனுடைய கண்களைத் திறந் தருளும் என்றான். கர்த்தர் அவ்விதமே அவன் கண்களைத் திறந்தார். அவன் அதோ பர்வதம் நிறைய அக்கினி மயமான குதிரைகளும், இரதங்களும் எலிசேயென்பவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டான்.

18. ஆயினுஞ் சத்துராதிகள் அவரை அணுகி வந்தார்கள். வருகிறதைக் கண்டு எலிசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே இந்தச் சனங்களெல்லாருங் குருட்டாட்ட மாகும்படி செய்ய வேண்டுமென்று மன்றாடின மாத்திரத்தில் ஆண்டவர் எலிசேயின் மன்றாட்டுக்கு இரங்கி அவர் களைக் குருடாக்கினார்.

19. அப்போது எலிசே அவர்களை நோக்கி: இஃது நீங்கள் செய்யவேண்டிய பாதையுமல்ல, பட்டணமுமல்ல, என் பின்சென்று வாருங்கள்; நீங்கள் தேடும் மனிதனை நான் காட்டுகிறேனென் றனன். ஆதலால் அவன் அவர்களைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனான்.

20. அவர்கள் பட்டணத்துள் நுழை ந்த போது, எலிசே கர்த்தரை நோக்கி: என் ஆண்டவரே! இவர்கள் காணும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருள வேண்டுமென்றான். ஆண்டவர் அவர் கள் கண்களைத் திறக்கவே அவர்கள் சமாரியா பட்டணத்து நடுவில் தாங்கள் இருப்பதாகக் கண்டுகொண்டார்கள்.

21. இவர்களைக் காணவே இஸ்றா யேல் அரசன் எலிசேயை நோக்கி: தகப் பனே! நான் இவர்களைச் சங்கரியாது விடுவேனோ என்றான். 

22. அதற்கு அவன்: அவர்களைச் சங்க ரிக்க வேண்டாம்; ஏனெனில் நீர் அவர் களை வாளாலாகிலும், அஸ்திராங்களா லென்கிலும் பிடித்தீர் இல்லையாதலால், அவர்களைக் கொன்றுபோட உமக்கு நியாயமில்லை. ஆனால் அவர்கள் சாப்பிட்டுக் குடித்து தங்கள் எசமானிடத் தில் போகும்படி நீர் அவர்களுக்குப் போஜன பானாதிகள் பரிமாறுவீராக என்றான்.

23. அதைக் கேட்டு அரசன் அவர் களுக்கு அபரிமிதமாய்ப் போஜனப் பதார்த்தங்களைத் திட்டஞ் செய்தான்; அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்னர் அரசன் அவர்களை அனுப்பிவிட்டான். அவர்களோ தங்கள் எசமானிடம் போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் அன்று தொட்டு அந்தச் சீரியக் கள்ளர்கள் இஸ் றாயேல் தேசத்திலே காலடி வைக்க வில்லை.

24. கொஞ்சகாலத்திற்குப் பின் சீரிய அரசனான பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையுங் கூட்டிக்கொண்டு சமாரியாவை முற்றிக்கையிட வந்தான்.

25. (அப்போது) சமாரியாவில் மகா பஞ்சம் உண்டாயிற்று; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கு விற்கும் படியாகவும், புறாக்களின் எச்சமோ காபாஸ் என்னும் மரக்காலிலே நாலில் ஒரு பங்கு ஐந்து வெள்ளிக் காசுக்கு விற் கும்படியாகவும் பட்டணம் நெருக்கப் பட்டது.

26. இஸ்றாயேல் அரசன் (ஒருநாள் பட்டணத்து) அலங்கம் நெடுகச் செல்லு கையில் ஒரு ஸ்திரீ கூக்குரலிட்டு: என் அரசனான ஆண்டவனே, என்னைக் காப் பாற்றும் என்றாள்.

27. அதற்கு அவன்: ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லையே நான் எங்ஙனம் உன்னை இரட்சிக்கமாட் டுவேன்? களஞ்சியத்திலிருந்து அல்லது ஆலையிலிருந்தோ சொல்லென்று சொல் லிப் பின்னும் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்று சொல்லென் றான். அதற்கு அவள்:

28. இதோ பாரும் இந்த ஸ்திரீயை : அவள் என்னைப் பார்த்து: இன்று நாம் புசிக்க உன் மகனைக் கொடு; நாளைக்கு என் குழந்தையைச் சாப்பிடலாம் என்றனள்.

29. (அப்படியே) நாங்கள் என் மக னைச் சமைத்துச் சாப்பிட்டோம்; மறு நாள் நாம் புசிக்கும் பொருட்டு; உன் மகனைக் கொடு என்றேன். அவளோ தன் மகனை ஒளித்து விட்டாள் எனச் சொன்னாள்.

30. அரசன் இதைக் கேட்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, பட்டணத்து மதிளூடே சென் றான். அவன் தன் சரீரத்தின் மேல் வஸ்திரங்களுக்குள்ளே ஒரு முள்ளொட் டியானத்தைக் கட்டியிரந்தான். சனங்கள் அதைக் கண்டார்கள்.

31. பின்னும் அரசன் சபதங் கூறி; இன்றையப் பொழுதுக்குள்ளே நான் சாபாத் குமாரனான எலிசேயின் தலையை வெட்டாமல் போவேனாகில் தேவன் னக்கு என்ன தீமை செய்தாலுஞ் செய்யட்டுமென்றான்.

32. எலிசேயோ தனது ஆச்சிரமத்தில் உட்கார்நதிருந்தான். பட்டணத்துத் தலைவர் அவரோடிருந்தார்கள். அரசன் (அவரைக் கொல்ல) ஒரு மனிதனை முன்னே அனுப்பினான். அவன் வருவதற் குள்ளே (எலிசே) தன்னோடு உட்கார்ந் திருந்த பெரியோர்களைப் பார்த்து: கொலைப்பாதகனின் குமாரன் என் சிரசை வெட்டும்படி ஒருவனை அனுப்பி யிருக்கிறான் என உங்களுக்குத் தெரி யுமோ? எச்சரிக்கையாயிருங்கள். அவன் வரும்போது கதவை அடைத்து அவனை உள்ளே விடாதேயுங்கள், ஏனெனில் அவ னுடைய எசமானன் அவனைப் பின் சென்று வருகிற காலடி சப்தமும் (எனக்குக்) கேட்கிறது என்றான்.

33. எலிசே இங்ஙனம் பேசி முடிந்தும் முடியாமுன்னே அதோ அந்த மனிதன் எதிரே வந்தான். அவனைப் பின்சென்ற அரசனும் வந்து: கர்த்தர் இவ்வளவான வாதையை வரும்படி செய்தனரே. இனி அவரிடமிருந்து பொல்லாப்புதான் நமக்கு வரக்கூடுமென்றான்.