சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 06

நான்கு இரதங்கள்.

1. பின்னும் யான் திரும்பி கண்களை ஏறெடுத்துப் பார்க்க: இதோ இரு பர்வதங்கள் நடுவினின்று நான்கு இரதங்கள் புறப்பட்டு வருதலைக் கண்டேன்; அப்பர்வதங்கள் தாம்பிர மலைகளாயிருந்தன.

* 1-ம் வசனம். நான்கு இரதங்கள்--கல்தேயர், பேர்சியர், கிறீக், ரோமான் என்னும் நான்கு ஏகாதிபத்தியங்களைக் குறிக்கின்றன என்று சிலர் சொல்லுகிறார்கள்.

2. முதல் இரத்தில் கபில நிறத்த அசுவங்களும், இரண்டாம் இரதத்தில் கருமைய அசுவங்களும், 

3. மூன்றாம் இரதத்தில் வெண் ணிறத்தக் குதிரைகளும், நான்காவதில் பல வண்ணத்ததும், திடகாத்திரமுளது மான குதிரைகளும் (பூட்டப்பட்டிருந்தன.)

4. யான் வாய் திறந்து என்னோடு சம்பாஷித்திலங்கிய வானவனைப் பார்த்து: என் ஐயனே! இவைகள் என்ன வெனக் கேட்டேன்.

5. வானவன் என்னைப் பார்த்து: அவை சர்வபுவன கர்த்தாவானவரின் முன் பிரசன்னமாதல் பொருட்டு புறப்பட்டு வரும் வான்றல நாலு காற்றுகளேயாமென மாறுத்தாரந் தந்தனன்.

6. (இரண்டாம் இரதத்தில்) பூட்டப் பட்ட கரு நிறத்த அசுவங்கள் வட தேசத்தை நோக்கிச் சென்றிருந்தன; வெண்ணிறத்த அசுவங்களும் அவைக ளைப் பின்தொடர்ந்தன; பல நிறத்தவை களோ தென் தேசத்தை நோக்கிப் புறப் பட்டன.

7. அதிதேக புஷ்டியானவைகள் வெளியே வந்து புவனமெல்லாம் போய்த் திரிய (கர்த்தரிடம்) விடை கேட்டன; அவரும் போமின், பூவன(மெங்ஙனும்) சுற்றுங்களென உரைக்க, அவைகள் புதல (மனைத்தும்) சுற்றிவரலாயின.

8. அப்போதவர் எனை அழைத்து: வட தேசத்தை நோக்கிச் செல்லாநின்ற அவைகள், வட தேசத்து மட்டில் (பொங்கிய) நம் கோபத்தை அமரச் செய் தனவென மொழிந்தனர்.

9. பின்னும் எனக்கு ஆண்டவ ருடைய வாக்கியம் அருளப்பட்டுச் சொல்லியதாவது:

10. தேசாந்தரத்தினின்று (புறப்பட்டு வரும்) ஒல்தாயி; தோபியாஸ், இதாயியா உனக்கு எதைத் தருவாரோ நீ அதனை வாங்கு; பின்பு அந்நாளில் தானே பபிலோனினின்று (திரும்பி) வந்த யVப்போனியா புத்திரன் யோசியாஸ் வீடு புகுந்து, 

11. (அவர்களால் சமர்ப்பிக்கப்படும்) பொன் வெள்ளி (லோகங்களை) நீ பெற்றுக் கொண்டு, (அவைகளால்) கிரீடங்களைச் சமைத்துப் பிரதம குருவா கிய யேசேதேக் புதல்வன் ஏசுவின் சிரஞ் சூட்டுவையாக.

12. பின்னும் நீ அவரைப் பார்த்து: சேனைகளின் தேவனார் அருள்வதே தெனில்: கீழ்த்திசையோன் என அபிதானங் கொண்ட ஸ்ரீமான் இதோ! அவரிடத்தினின்று உதிப்பார்; அவர் ஆண்டவருக்குச் (சிறந்ததோர்) ஆலயமுங் கட்டுவர்.

13. (ஆம்) ஆண்டவருக்கு அவரே ஆலயஞ் சமைப்பர்; அவரே மகிமைக் (கிரீடந்) தரித்து தம் சிம்மாசனத்தில் உட்கார்ந்து, இராஜரீகஞ் செலுத்துவர்; தம் ஆசன பீடத்தின்மீது (பெரிய) குருவும் வீற்றிருப்பர்; (இங்ஙனம்) இவ்விருவர் நடுவிலுஞ் சமாதான உடன்பாடு பிரகாசிக்கும்.

14. அந்தக் கிரீடங்கள்: ஏலேம், தோபியாஸ், இதாபியா, சொப்போஸி புத்திரன் எம் என்போருடைய பெயர் விளங்க ஆண்டவருடைய ஆலயத்தில் (என்றும்) ஸ்தாபிக்கப்பட்டிருப்பன்;

15. துலைதூரத்தியவர்களும் (உங்களைப் பார்த்து:) ஆண்டவர் ஆலய நிமித்தம் (ஓடி) வந்து கட்டிட வேலை செய்வர்; அப்போது சேனைகளின் தேவனே உங்களிடம் என்னை அனுப்பினரென அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனான ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து வருவீர்களே யாகில், இஃதெல்லாம் (தவறின்றி) சம்பவிக்கும் எனச் சொல்வையாக வென்றார்.