அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 06

பெட்டகத்தைத் திரும்ப அனுப்பியது.

1. ஆண்டவருடைய பெட்டகம் பிலிஸ்தியர் தேசத்தில் ஏழு மாதமிருந்தது.

2. பிலிஸ்தியர் தங்கள் குருக்களையுஞ் சூனியக்காரர்களையும் அழைப் பித்து: ஆண்டவருடைய பெட்டகத் தினிமித்தம் என்ன செய்யலாம் என்றும், அதை அதன் இருப்பிடத்துக்கு எப்படி அனுப்பலாமென்றுங் கேட்டார்கள்.

3. அதற்கு அவர்கள்: இஸ்றாயேலின் தேவன் பெட்டகத்தை அனுப்ப வேணுமானால் அதை வெறுமையாய் அனுப்ப வேண்டாம். ஆனால் நீங்கள் உங்கள் பாவங்களுக்காக அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்துங்கள். அப்போது சுகமடைவீர்கள். அவருடைய கைப்பாரம் உங்களை விட்டு நீங்காதிருந்ததற்குக் காரணம் அறிவீர்களென்றார்கள்.

4. பாவத்துக்காக அவருக்குச் செலுத்த வேண்டியது எது என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாக:

5. உங்களுக்கும் உங்கள் அதிபதி களுக்கும் ஒரே வியாதி ஆனதால் பிலிஸ் தியர் மாகாணங்கள் கணக்குப் பிரகாரம் ஐந்து பொன் குதங்களும் ஐந்து பொன் எலிகளுஞ் செய்யக்கடவீர்கள். உங்கள் குதங்களின் ரூபங்களையும், பூமிடிய நாசம் பண்ணின எலிகளின் ரூபங்களை யுஞ் செய்து இஸ்றாயேல் தேவனுக்கு மகிமையாக ஒப்புக்கொடுங்கள். சிலவிசை அவர் உங்களினின்றும், உங்கள் தேவர்களினின்றும், உங்கள் பூமியி னின்றுந் தமது கைப்பாரத்தை நீக்குவார் என்றார்கள்.

6. எஜிப்த்து தேசத்தாரும் பரவோ னுந் தங்கள் இருதயத்தைக் கடினப் படுத்தினதுபோல ஏன் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்கள் வாதிக்கப்பட்ட பின் இஸ்றாயேலர்களை அனுப்பத்தான் வேண்டியதாயிற்று. அவர்களும் புறப் பட்டுத்தானே போனார்கள்.

7. இப்பவும் ஒரு புதுவண்டி செய்து எடுத்துக் கொண்டு இன்னமும் நுகத்தடி வைக்கப்படாத இரண்டு கறவைப் பசுக் களை அதில் கட்டுங்கள்; அவைகளின் கன்றுகளை வீட்டில் அடைத்து வையுங் கள்.

8. ஆண்டவருடைய பெட்டகத்தை எடுத்து வண்டியில் வைப்பீர்கள்; குற்றத்துக்குப் பரிகாரமாக அதற்குச் செலுத்துகிற பொன் பாத்திரங்களைச் சிறு பெட்டியிலடக்கி அதின் பக்கத்திலே வைப்பீர்கள்; அதைப் போகும்படி விடுங் கள்.

9. அப்பொழுது பாருங்கள். அது தன் எல்லைகளின் வழியாய்ப் பெத்சா மேசை நோக்கிப் போகுமாகில் இப்பெரிய வாதை அவரே நமக்குச் செய்தார். வேறுவிதமானால் அவரு டைய கை ஒருபோதும் நம்மைத் தொட் டதில்லை. தற்செயலாய் சம்பவித்த தென்று அறிந்துகொள்வீர்கள்.

10. அவ்விதமாய் அவர்கள் செய்தார் கள். கன்றுகளுக்கு ஊட்டக் கொடுத்துக் கொண்டிருந்த இரண்டு பசுக்களைக் கொண்டுவந்து வண்டியில் கட்டி அதின் கன்றுகளை வீட்டில் அடைத்து வைத்தார்கள்.

11. ஆண்டவருடைய பெட்டகத் தையும், பொன் எலிகளும், குதங்களின் ரூபங்களும் வைத்திருந்த பெட்டியையும் வண்டியில் வைத்தார்கள்.

12. பசுக்களோ பெத்சாமேசுக்குச் செல்லும் வழியாய் நேரே போய் நடந்து கொண்டுங் கூவிக் கொண்டும் ஒரே நடையாய் முன்னிட்டுச் சென்றன. வலது பக்கமாகிலும் இடது பக்கமாகி லுந் திரும்பவில்லை. பிலிஸ்தியரின் அதிபதிகளோ பெத்சாமேஸ் எல்லைகள் மட்டும் பின்சென்றார்கள்.

13. அப்பொழுது பெத்சாமித்தர் பள்ளத்தாக்கில் கோதுமை அறுத்துக் கொண்டிருந்தார்கள். கண்களை ஏறெடுத்துப் பார்க்கப் பெட்டகத்தைக் கண்டார்கள். அதைப் பார்த்ததினால் சந்தோஷப்பட்டார்கள்.

14. வண்டி பெத்சாமித்தானாகிய ஜொசுவா என்பவன் வயலில் வந்து அதில் நின்று விட்டது. அங்கு ஒரு பெரும் பாறையிருந்தது. (ஊரார்) வண்டியின் மரங்களைத் துண்டித்து அவைகளின் மேல் பசுக்களை வைத்து ஆண்டவருக்குத் தகனப்பலிகளை ஒப்புக் கொடுத்தார்கள். 

15. லேவியர் தேவனுடைய பெட்ட கத்தையும், அதனருகில் பொன் பாத்திரமிருந்த சிறு பெட்டியையும் இறக்கிப் பெரும் பாறையின்பேரில் வைத்தார்கள். பெத்சாமித்தரான மனி தர்கள் ஆண்டவருக்குத் தகனப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்கள். அந்நாளிலே சமாதானப் பலிகளையுங் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

16. பிலிஸ்தியரில் ஐந்து அதிபதிகள் அதைப் பார்த்து: அந்நாளிலே அக்கரோ னுக்குத் திரும்பிப் போனார்கள்.

17. பிலிஸ்தியர் குற்றத்திற்காகப் பொன் குதங்களைச் செலுத்தின பட்ட ணங்களாவன: அசோத் ஒன்றும், காஜா ஒன்றும், அஸ்காலோன் ஒன்றும், ழேத் ஒன்றும், அக்கரோன் ஒன்றுமாம்.

18. பிலிஸ்தியர் தங்கள் பட்டணங் களினின்று கணக்குப் பிரகாரம் பொன் எலிகளையுஞ் செலுத்தினார்கள். கடல் துவக்கிக் கர்த்தருடைய பெட்டகம் இறக்கி வைக்கப்பட்ட பெரிய ஆபேல் வரையிலுமாகிய ஐந்து மாகாணங் களிலிருந்த மதிலுள்ள பட்டணங்களுஞ் சரி, மதிலில்லாத நகரங்களுஞ் சரி அவை யெல்லாம் (பொன் எலிகளைச் செலுத்தி வந்தன.) தேவ பெட்டகம் இந்நாள் பரியந்தம் பெத்சாமித்தனாகிய ஜொசுவா வயலிருக்கின்றது.

19. ஆண்டவருடைய பெட்டகத் தைப் பார்த்தபடியால் (கர்த்தர்) பெத்சா மேஸ் மனிதர்களைத் தண்டித்தார். பிரதான சனங்களில் எழுபது மனிதர் களில் அற்ப சனங்களில் ஐம்பதினாயிரம் பேர்களையும் மடித்து விட்டார். ஆண்டவர் பெரும் வாதையால் சனத் தைத் தண்டித்ததின் மட்டில் ஊரார் அழுதார்கள்.

20. பெத்சாமேஸ் மனிதர்கள்: ஆண்ட வராகிய இந்தப் பரிசுத்த தேவனுடைய சமுகமுன் நிற்கக்கூடுமானவனார்? நம்மில் ஆரிடத்தில் வாசம் பண்ணுவார்?

21. பிறகு அவர்கள் கரியாத்தியாரிம் குடிகளுக்குத் தூதர்களை அனுப்பி: பிலிஸ்தியர் ஆண்டவருடைய பெட் டகத்தைக் கொண்டு வந்தார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடங் கொண்டு போங்களென்று சொல்லச் சொன்னார்கள்.