இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 06

தேவனை நேசித்து அவருடைய கற்பனைகளின் படியே நடக்க வேண்டும் என்பதற்கேற்ற புத்திமதிகள்.

1. நான் உங்களுக்குப் படிப்பிக்க வேண்டியதென்றும், நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளப்போகிற தேசத்திலே அநுசரிக்க வேண்டியதென்றும், கர்த்தர் கற்பித்தருளிய கட்டளைகளையும், இரீதிச் சடங்குகளையும், நீதி முறைமைகளையும் இதோ (தெரிவிக்கப் போகிறேன்.)

2. (கர்த்தருடைய தாற்பரியமேதெனில்) நீ உன் வாழ்நாள் நீடித்திருக்கும் பொருட்டு நான் உனக்கும் உன் குமாரர்களுக்கும், உன் பேரர்களுக்கும் விதிக்கிற தேவ கட்டளை கற்பளைகளையயல்லாம் நீ கைக்கொண்டு உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து உயிருள்ளளவும் நிறை¼வ்ற வேண்டுமென்பதேயாம்.

3. இஸ்றாயேலே! செவி கொடு. உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் பாலுந் தேனுமோடுகிற தேசத்தை உனக்களிப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்ததினாலே நீ ஆண்டவர் கற்பித்தபடி நடக்கச் சாவதானமாயிருப்பாயாகில் நன்மையையும் பெறுவாய். மென்மேலும் பெருகுவாய்.

4. இஸ்றாயேலே! உற்றுக்கேள்! நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

5. உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமத்தோடும், உன் முழு சத்துவத்தோடும் உன் தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக.

6. இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த வார்த்தைகளே உன் இருதயத்திலே பதிந்திருக்கக் கடவது.

7. நீ அவைகளை உன் குமாரர்களுக்கு விவரித்துச் சொல்லவும், நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கையிலும் வழியில் நடந்து போகையிலும், துVங்குகையிலும், விழித்தெழுந்திருக்கையிலும் அவைகளைத் தியானிக்கக் கடவாய்.

8. அவற்றை உன் கையிலே அடையாளம் போல் கட்டுவாய். அவைகளை உன் கண்களுக்கு நடுவே தொங்கியாடும்படி வைக்கவும்,

9. உன் வீட்டின் வாசற்படியிலும் கதவின் நிலைகளிலும் அவைகளை எழுதவுங் கடவாய்;

10. பின்னும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேனென்று அபிரகாம், இசாக், யாக்கோப் என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு அவர் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப் பண்ணின போதும், நீ ஏற்படுத்தாத, பெரிய, வசதியான பட்டணங்களையும்,

11. நீ கட்டாத, சகலமான ஜசுவரியங்களாலும் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலீவ் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுத்த போதும்,

12. நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்த பின்னர்,

13. உன்னை எஜிப்த்துதேசத்தினின்றும், அடிமை வாசத்தினின்றும் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு மிகவும் எச்சரிக்கையாயிருப்பாயாக. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரொருவருக்கே பணிந்து அவருடைய நாமத்தைக் கொண்டு ஆணையிடுவாயாக.

14. உங்கள் நாலுபுறத்திலுமிருக்கிற சனங்களின் தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.

15. பின்பற்றினால் உன் நடுவிலிருக்கிற தேவனாகிய கர்த்தர் காய்மகாரமுள்ள தேவனாகையால் ஒரு வேளை உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் பொங்கி உன்னைப் பூமியின் முகத்தினின்று சங்கரித்து விட்டாலும் விடலாம்.

16. சோதனை என்னப்பட்ட இடத்திலே நீ பரிட்சித்தது போல உன் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சைப் பாராதிருப்பாயாக.

17. உன் தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளையும், அவர் உனக்குக் கற்பித்த நீதிப் பிரமாணங்களையும், இரீதி ஆசாரங்களையும் அநுசரிக்கக் கடவாயாக.

18. நீ கர்த்தருடைய பார்வைக்கு நலமும் இதமுமாயிருக்கின்றதையே செய்வாயானால் உனக்கு நன்மை உண்டாகும். கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த உத்தம தேசத்திலே நீ பிரவேசித்து அதைச் சுதந்தரிப்பாயன்றி,

19. அவர் திருவுளம் பற்றினபடி உன் பகைவரை எவ்லாம் அவரே உன் முன்னிலையில் நாசமாக்குவார்.

20 நாளைக்கு உன் குமாரன் உன்னை நோக்கி: நம் தேவனாகிய கர்த்தர் நமக்குக் கற்பித்த இந்தப் பிரமாணங்களுக்கும் ஆசாரங்களுக்கும், நீதி முறைமைகளுக்கும் தாற்பரியமாவதென்ன என்று கேட்கும் போது, 

21, நீ அவனைப் பார்த்து: நாங்கள் எஜிப்த்திலே பரவோனுக்கு அடிமைகளாயிருந்தோம்! கர்த்தரோ எஜிப்த்திலிருந்து வலிய கரத்தினாலே எங்களைப் புறப்படப் பண்ணினார் என்றும்,

22. எஜிப்த்து தேசத்திலே அவர் எங்கள் கண்களுக்கு முன்பாகப் பரவோனின் மேலும், அவனுடைய எல்லா வீட்டார்களின் மேலும் அடையாளங்களையும் மகா கொடிதான அற்புதாதிசயங்களையும் செய்தாரென்றும்,

23. நம்முடைய பிதாக்களுக்கு அவர் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திற்கு எங்களை அழைத்துக் கொண்டுபோய் அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ணினாரென்றும்,

24. ஆகையால் நமக்கு இந்நாளில் இருக்கிறது போல் நமது சீவிய நாளெல்லாம் நன்றாகும் பொருட்டு, இவ்வெல்லாச் சட்டப் பிரமாணங்களையும் அநுசரித்து நமது தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டுமெனக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டாரென்றும்.

25. தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடி நாம் அவருடைய சமூகத்தில் இந்தக் கற்பனைகளையயல்லாம் காத்து அநுசரித்து வருவோமானால் அவர் நமது பேரில் தயவாயிருப்பாரென்றும் சொல்லுவாய் என்றான்.