அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 05

தாவீது இஸ்றாயேலியரின் அரசனாக அபிஷேகம் பெற்றது.

1. அது நிற்க, இஸ்றாயேலின் கோத்திரங்கள் எல்லாம் எப்பிரோனில் இருந்த தாவீதிடம் வந்து: இதோ நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்;

2. மீளவும் நேற்றும் மூன்றாநேற்றுஞ் சவுல் எங்கள் மேல் அரசனாயிருக் கும்போது நீர் இஸ்றாயேலை நடத்திக் கொண்டு போனவரும் வந்தவருமா யிருந்தீரே; அன்றியுங் கர்த்தர் உம்மை நோக்கி: நம்முடைய ஜனமாகிய இஸ்றா யேலை நீ மேய்த்து, இஸ்றாயேலின் மேல் தலைவனாய் இருப்பாய் என்று உம்மிடத்தில் திருவுளம்பற்றினாரே! என்றனர்.

3. இஸ்றாயேலின் வயோதிகர்களும் எப்பிரோனிலே இராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதரசன் எப்பிரோனில் கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணின பின்பு அவர்கள் இஸ்றாயேலின் மேல் இராசா வாகத் தாவீதை அபிஷேகம் பண்ணி னார்கள்.

4. தாவீது இராஜரீகஞ் செய்யத் துடங்கிய போது முப்பது வயதாயிருந் தான்; அவன் நாற்பது வருஷம் இராச்சிய பாரம் பண்ணினான்.

5. அவன் எப்பிரோனிலே யூதாவின் மேல் ஏழு வருஷம் ஆறு மாதமும், ஜெருசலேமிலோவெனில் சமஸ்த இஸ்றாயேலின் மேலும் யூதாவின் மேலும் முப்பத்து மூன்று வருஷமும் இராஜரீகம் பண்ணினான். 

6. இராசாவும் அவனுடனிருந்த மனிதரனைவோரும் எழுந்து தேசத்திலே குடியிருந்த எபிசேயர் மேல் யுத்தம் பண்ணுவதற்கு எருசலேமுக்குப் போனார் கள். எபுசேயர் தாவீதுக்கு (ஆள் அனுப்பி): நீர் குருடர்களையும் முடவர்களையும் அப்புறப்படுத்தாமல் போனால் இவ் விடத்தில் பிரவேசிக்க உம்மாலே முடியா தென்று சொன்னார்கள்.  அதனால் அப் பட்டணத்தைப் பிடிக்கத் தாவீதுக்குப் போதுமான சக்தியில்லை என்று சாடை செய்தார்கள்.

7. ஆனாலுந் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீ தின் நகரமாயிற்று.

8. உள்ளபடி தாவீது அன்றைக்கு (தன் வீரர்களை நோக்கி:) உங்களில் எவன் கூடல்வாய் வழியாகக் கோட்டையின் மேலேறி எபிசேயரையும், தாவீதின் ஆத்மாவைப் பகைக்குஞ் சப்பாணி களையுங் குருடர்களையும் அடித்துத் துரத்திப் போடுவானோ அவனுக்கு வெகுமானங் கொடுக்கிறேனென்று கூறியிருந்தான்.  ஆனதுபற்றியல்லோ (அந்நாள் முதற் கொண்டு) “குருடனுஞ் சப்பாணியும் ஆலயத்திலே வரலாகா” தென்று பழமொழியாகச் சொல்லுகிற துண்டு.

9. அந்தக் கோட்டையிலே தாவீது வாசம் பண்ணி அதற்குத் தாவீதின் நகர மென்று பேரிட்டு மெல்லோ துவக்கி சுற்றிலும் உட்புறத்திலுங் கட்டுக் கோப்பைக் கட்டினான்.

10. அவன் நாளுக்குநாள் விருத்தி யடைந்தான்; சேனைகளின் கர்த்தராகிய தேவன் அவனோடுகூட இருந்தார்.

11. அன்றியுந் தீரின் அரசனாகிய ஹீராம் தாவீதிடத்தில் ஸ்தானாபதிகளை யுங் கேதுரு மரங்களையும், மரத் தச்சர் களையும்,கல் தச்சர்களையும் அனுப்பி னான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு மாளி கையைக் கட்டினார்கள்.

12. அதனாலே தாவீது தெளிவாய்க் கண்டுபிடித்ததென்னவெனில்: தான் இஸ்றாயேலின்மேல் இராஜாவாக உறுதிப்பட்டதும், கர்த்தருடைய ஜன மாகிய இஸ்றாயேலின்மேல் தன் இராச்சியம் உயர்த்தப்பட்டதுங் கர்த்த ருடைய வேலையன்றி வேறல்லவே யாம்.

13. அப்பால், தாவீது எப்பிரோனி லிருந்து வந்தபின்பு எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனைவிகளை யும், பத்தினிகளையுங் கொண்டான்; அவனுக்கு வேறு குமாரருங் குமாரத்தி களும் பிறந்தார்கள்.

14. எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளார் எனில்: ஸாமுவா, சோபாப், நாத்தான், சலோமோன்,

15. ஜேபவார், ஏலிசுவா, நெப்பேகு,

16. ஜாப்பியா, ஏலிசமா, எலியோதா, எலிப்பலேத் என்னப்பட்டவர்களேயாம்.

17. தாவீதை இஸ்றாயேலின்மேல் அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று அறிந்தபோது பிலிஸ்தியர் எல்லோரும் அவனைத் தேடும்படி வந்தார்கள்; அதைக் கேள்விப்பட்டுத் தாவீது கோட்டையிலே போய் விட்டான்.

18. பின்னும் பிலிஸ்தியர் இராப் பாயீம் பள்ளத்தாக்கில் வந்து பரம்பி யிருக்கும்போது,

19. தாவீது கர்த்தருடைய சந்நிதிக்கு வந்து: நான் பிலிஸ்தியரோடு யுத்தத் துக்குப் போகலாமா? (போனால்) தேவரீர் என் கையிலே அவர்களை ஒப்புக்கொடுப் பீரா என்று விசாரித்தபோது, கர்த்தர்: போகலாம்;  பிலிஸ்தியரை  உன் கையிலே ஒப்புக் கொடுப்போமென்று தாவீதுக்குச் சொன்னார். 

20. அப்பிரகாரமே தாவீது பாவால்-பாரசீமுக்கு வந்து அங்கு அவர்களை முறிய அடித்தான்.  அப்பொழுது அவன்: தண்ணீர்கள் ஓடி வற்றிப்போகிறதுபோல் கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாகச் சிதறிப் போகப் பண்ணினா ரென்றான்; ஆனபடியால் அந்த ஸ்தலத் திற்குப் பாவால்-பாரசீமென்று பேரிடப் பட்டதாம்.

21. பிலிஸ்தியர் உளியால் கொத்தப் பட்ட தங்கள் விக்கிரகங்களை அங்கு விட்டு விட்டார்கள்; தாவீதும் அவனு டைய சேவகரும் அவைகளைக் கொண்டு போனார்கள்.

22. மீண்டும் பிலிஸ்தியர் திரும்பி வந்து இராப்பாயீம் பள்ளத்தாக்கில் பரம் பினார்கள்.

23. தாவீது ஆண்டவருடைய சந் நிதிக்கு வந்து: பிலிஸ்தியருடன் நான் யுத்தத்திற்குப் போகலாமா?  (போனால்) தேவரீர் அவர்களை என் கையில் கொடுப்பீராவென்று விசாரித்துக் கேட் டதற்குக் கர்த்தர்: நீ நேராய்ப் போக வேண்டாம்; அவர்களுக்குப் பின்   னாலே சுற்றிப் போய்ப் பீர் மரங்    களுக்கு எதிரேயிருக்கும் போது அவர் களுக்குப் பிரதிமுகமாய்த் திரும்பு     வாய்;

24. பின்னும் பீர் மரங்களின் முனை யிலே மனிதர் நடந்து வருகிற சப்தம் நீ கேட்கும்போது சீக்கிரமாய் அவர்கள் மேல் விழுந்து போக வேண்டும்;  ஏனெனில் அந்நேரத்திலே பிலிஸ்தியரின் பாளையத்தை முறிய அடிக்கும்படி  கர்த்தர் உனக்கு முன்பாக நடந்திருப்பார் என்றார்.

25. கர்த்தர் தாவீதுக்குக் கட்டளை யிட்டபடியே அவன் செய்து பிலிஸ்திய ரைக் காபா துவக்கி ஜேசர் எல்லை மட்டுந் தோற்கடித்தான்.