அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 05

நாமான் குணமடைதல்.

1. சீரியா அரசனுடைய தளக்கர்த்தனாகிய நாமான் என்போன் ஒருவன் இருந்தான். அரசன் அவனை மகா புருஷ னென்று எண்ணி மெத்தவும் அவனை வெகுமானித்து வருவான்; ஏனெனில், அவனைக் கொண்டு ஆண்டவர் சீரியா வைக் காப்பாற்றியிருந்தார்; ஆனால் அவன் மகா தீர சூர தனவந்தனாயினுங் குஷ்டரோகியாயிருந்தான். 

2. அப்படியிருக்க சில கள்ளர்கள் சீரியாவினின்று புறப்பட்டு இஸ்றாயேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைக் கைதியாகக் கொண்டு வந்திருந்தார்கள். இவளோ நாமானின் தேவியாருடைய தொண்டூழியத்தில் வைக்கப்பட்டாள்.

3. அந்தச் சிறு பெண் (ஒரு நாள்) தன் எசமாட்டியை நோக்கி: என் எசமான் சமாரியாவில் இருக்கிற தீர்க்கத்தரிசியைப் போய்ப் பார்க்க ஏன் போகவில்லை? அவன் இவருடைய குஷ்ட நோயை அகத்தியமாய்க் குணமாக்கியிருப்பா னென்றாள்.

4. அதைக் கேள்விப்பட்டு நாமான் தன் எசமானிடம் போய்: இஸ்றாயேல் தேசத்திலிருந்து வந்த ஒரு சிறு பெண் இன்னின்ன காரியஞ் செப்பலுற்றாள் என, அவனுக்குச் செய்தி சொன்னான்.

5. அதற்கு மாறுத்தாரமாகச் சீரியா அரசன்: நீர் அவ்விடம் போகலாம்; (உம் முடைய நிமித்தமாக) நாம் இஸ்றாயேல் அரசனுக்குக் கடிதம் எழுதுவோம் என்றான். நாமான் தன்னோடு பத்துத் தலேந்து வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்து வஸ்திராபர ணங்களையும் எடுத்துக் கொண்டு (சீரியா விலிருந்து பிரயாணமாகி,

6. சீரியா அரசன் எழுதித் தன் கையில் கொடுத்திருந்த கடிதத்தை இஸ்றாயேல் இராசாவுக்குப் போய்க் கொடுத்தான். மேற்படி கடிதத்தில் எழுதி யிருந்தது என்னவென்றால்: நீர் இக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு வாசித்த மாத்திரத்தில், என் ஊழியனான நாமா னுக்குக் கண்ட குஷ்டரோகத்தினின்று நீர் அவனைச் செளக்கியப்படுத்த வேணு மென்று உம்மிடத்தில் அனுப்பியதாக அறியக்கடவீர் என்பதாம்.

7. இஸ்றாயேல் அரசன் இக் கடிதத்தை வாசித்துப் பார்த்துத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு: (சீரியவரசன்) ஒரு மனிதனை என்னிடம் அனுப்பி அவனுக்கிருக்கிற குஷ்டரோகத் தைச் சொஸ்தப்படுத்தச் சொல்லுகின் றாரே; நானென்ன உயிரைக் கொடுக்க வும், உயிரை அழிக்கவும் வல்லமையுள்ள தேவனா? கவனித்துப் பாருங்கள். அவர் என்னைத் தமக்குப் பகைஞனென்று காண்பிக்கச் சமயந் தேடுகின்றனரென் றான்.

8. ஆண்டவரின் மனிதனான எலிசே யென்பவன் இஸ்றாயேல் அரசன் இங்ஙனந் தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்ட செய்தியை யறிந்து ஆள னுப்பி: நீர் ஏன் உமது வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டீர்? (அம்மனிதன்) என்னிடம் வரட்டும். இஸ்றாயேலில் தீர்க்கத்தரிசி ஒருவர் உண்டென அவன் அறியட்டும் என்று சொல்லச் சொன் னான்.

9. ஆகையால் நாமான் தன் வண்டி களோடும், தன் குதிரைகளோடும் எலிசேயுடைய ஆச்சிரமத்து வாயின்முன் வந்து நின்றான்.

10. எலிசே அவனுக்கு ஆளனுப்பி: நீர் யோர்தான் நதியில் ஏழுமுறையுங் குளிக் கப்போனால் உமது தேகம் ஆரோக்கிய மடைந்து சுத்தமாகுமெனச் சொல்லச் சொன்னான்.

11. அதற்கு நாமான் கோபமுற்று: தீர்க்கத்தரிசியானவர் என்னிடம் அணுகி, ஆண்டவருடைய திருநாமத்தை ஸ்ம ரணை செய்து, குஷ்டங்கண்ட இடங் களைக் கரத்தால் தொட்டு என்னைச் சொஸ்தமாக்குவார் என்றிருந்தேனே; 

12. நான் குளித்துத் தேகத்தின் அசுசியங்களைக் கழுவித் தீர்க்கத்தக்க தும், இஸ்றாயேலிலிருக்கப்பட்ட ஆறு களைப் பார்க்கிலும் அதிக செளக்கிய மான சலத்தையுடையதுமான ஆபானா, பர்பர் என்னும் நதிகள் எங்களுக்குண் டல்லவா என்று சொல்லிச் சினத்தோடு ஊருக்குத் திரும்பிப் போகப் புறப்பட் டான்.

13. அந்நேரத்திலே அவனூழியர்கள் அவனிடம் அணுகி: தகப்பனே, தீர்க்கத் தரிசியானவர் உமக்கு வெகு கஷ்டமான காரியத்தை ஆக்கியாபித்திருந்தாலும் அதனைச் செய்ய வேண்டியதாகு மன்றோ? அவர் “குளிக்கப்போம் சுத்த மாவீர்” என்றபோது தாங்கள் எவ்வளவு பூஜிதமாய்க் கேட்டுக்கொள்ள வேண்டிய வராயிருக்கிறீர் என்றார்கள்.

14. (இதை ஒப்புக்கொண்டு) நாமான் புறப்பட்டு ஆண்டவரின் மனிதன் தனக்குக் கற்பித்தபடி போய் யோர்தான் நதியில் ஏழுதரம் ஸ்நானஞ் செய்தான். இப்படி செய்ததினாலே அவன் தேகம் ஒரு சிறு குழந்தைத் தேகத்தைப்போல் ஆகிவிட்டது. முழுதுஞ் சொஸ்தமா னான்.

15. பின்பு தன் பரிவாரத்தோடு கர்த்த ருடைய மனிதனைக் கண்டுகொள்ளும் பொருட்டுத் திரும்பி வந்து, அவருக்கு முன்பாக நின்று: இஸ்றாயேலிலிருக்கிற தேவன் அல்லாது லோகாதிலோகங்களி லும் வேறில்லையென எனக்கு நன்கு விளங்குகிறது; ஆகையால் அடியா னுடைய காணிக்கைகளைத் தாங்கள் கையேற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேனென்றான்.

16. அதற்கவர்: நான் எவருடைய பார்வைக்கு முன் நிற்கிறேன், அந்த ஆண்டவருடைய ஜீவனாணை! நாம் உம்முடைய காணிக்கைகளில் எதையுங் கையேற்றுக்கொள்ளேன் என மறுமொழி தந்தார். நாமான் என்ன பிரயத்தனஞ் செய்தும் எலிசே உடன்படவில்லை.

17. (அப்போது) நாமான் அவரைப் பார்த்து : உமது சித்தம் ஆகட்டும்; ஆனால் இத்தேசத்து மண்ணில் இரண்டு கழுதை சுமை அவ்வளவு நான் கொண்டு போகும்படி தேவரீர் உத்தரவு செய்ய மன்றாடுகிறேன்; இனிமேல் உமது அடியான் பிறதேவருக்குத் தகனப்பலி சமாதானப்பலி ஒருகாலுஞ் செலுத்தப் போகிறதில்லை; நான் கர்த்தருக்கு மாத் திரம் பலியிடுவேன்.

18. தேவரீர் உமது அடியானுக்காக ஆண்டவரிடத்திலே மன்றாடிக் கேட்க வேண்டிய ஒரு காரியமட்டும் உண்டு; அஃதென்னவெனில்: (அரசனான) என் ஆண்டவன் ரெம்மோன் ஆலயத்திலே போகும்போது என் புஜத்தின் மேலே ஊன்றிக் கொண்டு அதனைக் கும்பிடு கையில், நானும் அதேயிடத்தில் (அவரைத் தாங்க) சிரவணக்கமானால் ஆண்டவர் எனக்கு அதை மன்னிக்க வேண்டுமென வேண்ட, 

19. (எலிசே:) நீர் சமாதானத்துடன் போம் என்று அவனுக்குச் சொல்ல, நாமான் விடைபெற்றுக்கொண்டு அவன் குறித்த நல்ல காலத்தில் போய்விட்டான்.

20. கர்த்தருடைய மனிதனின் ஊழிய னான ஜியேசி தனக்குள் ஆலோசித்து: என் எசமான் சீரியனான நாமானைத் தர்மமாய்க் குணமாக்கி அவன் கொணர்ந்துவந்த வெகுமானங்களில் ஒன் றையுங் கையேற்றுக் கொள்ளவில்லை. ஆண்டவர் ஜீவனாணை! நான் அவ னிடம் ஓடி அவனிடம் ஏதாகிலும் பெற்றுக்கொள்வேனென்றான்.

21. இப்படி ஜியேசி நாமான் பின் ஓட, நாமான் அவன் ஓடி வருவதைக் கண்டு, தன்னுடைய இரதத்தினின்று தீவிரமாய் இறங்கி அவனுக்கு எதிராகப் போய்: சுபக்ஷேமம் எப்படி என விசாரித் தான்.

22. ஜியேசி: சுபந்தான் எனச் சொல் லிப் பின்னும் அவனைப் பார்த்து: என் எசமான் தங்களிடத்திலே என்னை அனுப்பிச் சொல்லச் சொன்னதேதெனில்: தீர்க்கத்தரிசிகளின் சீஷர்கள் இரண்டு பேரும் இப்போது தான் எப்பிராயீம் மலையிலிருந்து வந்தார்கள். தாங்கள் அவர்களுக்கு ஒரு தலேந்து வெள்ளி யையும், உடையை மாற்ற இரண்டு வஸ்திரங்களையுங் கொடுத்தால் (தர்மம்) என்றாரென்றான்.

23. அதற்கு நாமான்: நீ இரண்டு தலேந்து கொண்டுபோவது நலமென, அவைகளை ஜியேசி பெற்றுக் கொள்ளும்படி அவனை வருந்தினான். பிறகு அவைகளையும் இரண்டு வஸ்திராபரணங்களையும் இரண்டு சாக்கிலிட்டுக் கட்டி, தன் ஊழியர்களில் இரண்டு பேர் அவைகளை எடுத்துக் கொண்டு ஜியேசிக்கு முன் நடந்து போகும்படி சொல்லி அனுப்பினான்.

24. மாலைப்பொழுதானவுடனே (ஜியேசி) அவர்கள் கையினின்று அவை களை வாங்கிப் புறப்பட்டுத் தன் வீட்டில் பதனப்படுத்திக்கொண்டு வந்த வர்கள் திரும்பிப்போக விடை கொடுத்து அனுப்பினான்.

25. பின்பு (ஜியேசி) தன் எஜமானன் அண்டை வந்து நின்றான். எலிசே அவனைப் பார்த்து: ஜியேசீ, எங்கிருந்து வருகின்றாய்? எனக் கேட்டதற்கு, அவன்: உம்முடைய அடியான் எங்கேயும் போனதில்லையே என்று மறுமொழி சொன்னான்.

26. அதற்கு எலிசே: அந்த மனிதன் வண்டியினின்றிறங்கி உன் எதிரே வந்த போது என் ஞான திருஷ்டி அங் கிருந்ததல்லவா? நீ ஒலீவ் மரத்துக் கன்றுகளையும், திராட்சக் கொடி களையும், ஆடுமாடுகளையும், பணி விடைக்காரர் பணிவிடைக்காரிகளை யும், வாங்கிக்கொள்ளும்படி பணத்தைப் பெற்றுக் கொண்டதன்றி, ஆடையாபர ணங்களையும் வாங்கிக் கொண்டனை யன்றோ?

27. ஆனால் (கேள்) நாமானுடைய குஷ்டரோகமானது உன்னையும் உன் சந்ததியையும் என்றைக்கும் பீடிக்கு மாமே என்றான். ஜியேசியோ தன் எசமானை விட்டுப் போகாமுன்னே வெண்பனிக்கொப்ப குஷ்டரோக மானது அவன் தேகமெங்குங் கண்டது.