ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 05

இஸ்றாயேலரைக் குறித்த புலம்பல், - தேவன் குணப்படுவதற்கு அவர்களைத் தூண்டுகின்றனர், - தாம் அவர்களுடைய கள்ளமான ஊழியத்தை வெறுக்கிறதாகச் சொல்லுகிறார்.

1. இஸ்றாயேல் வீட்டவர்காள்! உங்கள் நிற்பாக்கியத்தைக் குறித்து உங்கள்மீது யான் சொல்லும் புலம்பல் தனைக் கேளுங்கள்; இஸ்றாயேல் வீடு வீழ்ந்துபோயிற்று; அது நிமிர்ந்தெழ ஏலாது போயிற்று.

2. இஸ்றாயேல் மாது கீழே வீழ்த்தப் பட்டாள்; அவளைத் தூக்கிவிடுவான் யாருமில்லை.

3. ஏனெனில், இதோ ஆண்டவர் சொல்வது: அதின் பட்டணமொன்றில் ஆயிரம் பேர் இருப்பாரேல், நூறு பெயரே மீதியாவர்; இஸ்றாயேல் வீட்டில் நூறு பேர் இருந்திருப்பாரேல் பத்தே பேர் மீதியாவர்.

4. இஸ்றாயேல் வீட்டைக் குறித்து ஆண்டவர் இன்னுஞ் சொல்வதே தெனில்: நம்மைத் தேடுங்கள்; நீங்கள் சுகமே வாழ்வீர்கள்.

5. பேட்டேல் (கங்கனக் கன்றைத்) தேடல் வேண்டாம்; பிரபூசனஞ் செய்ய கல்காலாவில் நுழைய வேண்டாம்; பெர்சாபேயுக்குக் குறுக்கே போகவும் வேண்டாம்; ஏனெனில், கல்காலா (விக்கிரகஞ்) சிறைகொண்டு போகப் படும்; பேட்டேல் (சிலை) திரண மெனவேயிருக்கும்.

6. ஆனால் ஒருவனும் அணைக்கக் கூடாவண்ணம், பேட்டேலைச் சுட் டெரிக்க அனுப்பப்பட்ட நெருப்பானது, யோசேபு வீட்டின்பேரிலும் வீழ்ந்து பட்சணஞ் செய்யாதபடி, நீங்கள் (தீவிர மாய்) ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் சுகமே பிழைப்பீர்கள்.மீ

7. ஏனெனில், எளியர்களுககு உங் கள் ஞாயத் தீர்மானங்ளைக கசப்பாய் மாற்றி, நீதியைத் தரையில் விட்டுவிட்ட நீங்கள்,

8. வடதாராகணத்தையும், தென் தாராகணத்தையுஞ் சிருஷ்டித்தவரும், இருளைக் காலை வெளிச்சம் பின்தொட ரவும், பகலை இரவு பின்பற்றவுஞ் செய் கிறவரும், சமுத்திர சலங்களை உயரத் தருவித்து, பூமிமீது கார்முகல் வழியாய்ப் பொழிகின்றவரும் ஆகிய அவரைத் தேடுங்கள்; ஆண்டவர் என்பது அவர் அபிதானமாகும்.

9. அவர்தான் புன்னகையோடு (அனாயாசமாகப்) பலாஷ்டிகரை விழத் தாட்டுகிறவர்; வல்லுனருக்கும் வறு மையை வருவிக்கிறவர்.

10. இவைகளைச் சொல்லி பய னென்னை? அவர்கள் பொது ஸ்தலத்தில் கண்டனஞ் செய்தாரைப் பகைத் தனர்கள்; உண்மை உரைப்பாரை அருவ ருத்தனர்கள்.

* 10-ம் வசனம். கண்டனஞ் செய்வோரும், உண்மை உரைப்போருந் தீர்க்கவசனரேயாவர் என அறியவும்.

11. நீங்கள் எளியர்களை உரிந்துவிட் டதினாலும், அவர்களிடத்தில் விலை யுயர்ந்தனவைகளைப் பறித்துக் கொண் டதினாலும் நீங்கள் கட்டும் பொளிந்த கல்வீடுகளில் வாசஞ் செய்யமாட்டீர்கள்; நீங்கள் நடுஞ் சிறந்த கொடிமுந்திரிகை களது இரசத்தைப் பானஞ் செய்யமாட்டீர்கள்.

12. ஏனெனில், உங்கள் பாதகங்கள் பேரெண்ணுடையனவெனவும், நீங்கள் தீயனவைகளைச் செய்வதில் சதுரர் எனவும், நீதிமானுக்குச் சத்துருக்களாய் (இலஞ்சப் பிரதானம் வாங்குகிறவர்களெனவும், நீதி ஸ்தலத்தில் எளியர்களை உபத்திரியப்படுத்துகிறவர்களெனவும் யாமறியோம்.

13. ஆதலான் விவேகியானவன் அப்போது காலங் கெடுதலாயிருத்தல் பற்றி மோனஞ் சாதித்திருப்பன்.

14. நீங்கள் பாக்கியவான்களாய் வாழும்படி தின்மையையல்ல, நன்மை யைத் தேடுங்கள்; அப்போது சேனை களின் நாயகரான ஆண்டவர் நீங்கள் சாதிப்பதுபோல் உங்களோடிருப்பர்.

* 14-ம் வசனம். நீங்கள் சாதிப்பதுபோல் நீங்கள் ஆபிரகாம் புத்திரராயிருத்தல் பற்றி, ஆண்டவர் உங்களோடு வாசமாயிருப்பதாக ஜகப்பிரக்கியாதி கொண்டாடுகிறீர்களே, நீங்கள் மெய்யாகவே நன்மையைத் தேடினாலன்றோ, நீங்கள் சொல்வதுபோல் ஆண்டவர் உங்களோடு இருப்பர் என்பது கருத்து.

15. தின்மையை அருவருத்து, நன் மையை விரும்புங்கள்; நீதி ஸ்தலத்தை ஞாய தருமத்தை ஸ்தாபியுங்கள்; அப்போது சிலதுவிசை சேனைகளின் தேவனான ஆண்டவர் யோசேப்பு கோத்திரத்திய மீதி பேர்களுக்குக் கிருபை பாராட்டுவர்.

16. (நீங்கள் செவிகொடாததால்) இதோ சேனைகளில் சர்வாதிக்கத்துவ தேவனாகிய ஆண்டவர் சொல்வது: நகரத்தின் உள்வெளிகளில் புலம்பல் (உண்டாகும்;) வெளிப்புறத் தாவுகளி லெங்கும் ஐயோ! நிற்பாக்கியமே எனச் சப்தங் கேட்கப்படும்; துக்கங் கொண்டாட உழவரைக் கூப்பிடுவார்கள்; அழுதற்கு ஒப்பாரி வைக்கத் தெரிந்தோரைத் தருவிப்பார்கள். 

17. திராட்சத் தோட்டங்கள் எங்குமே புலம்பல் சப்தமாகவிருக்கும்; ஏனெனில், உங்கள் நடுவே நாம் (சண்ட மாருதம்போல்) நடப்போம் என்கிறார் ஆண்டவர்.

18. ஆண்டவரின் பயங்கர நாளைப் பார்க்க ஆசிப்போருக்கு ஐயோ கேடாம்; ஆண்டவருடைய சின மிகுந்த அந்நாளி னால் உங்களுக்காவதென்னை? அஃது அந்தகாரத்தின் நாளாகும், அஃது பிரகாச முள்ளதன்று.

* 18-ம் வசனம். அஞ்ஞானிகள் கோயிலுக்கும், பேய்த் திருவிழாக்களுக்கும் அடுத்த வேலை செய்யும் பற்பல கிறீஸ்துவர்கள் இதைக் கவனிக்கவும்.

19. சிம்ம முகத்து ஓட்டம் பிடிப்பானுக்குக் கரடி எதிர்ப்பட்டால் எங்ஙனமோ, அல்லது தப்பி வீட்டுட் புகுந்து கரத்தால் சுவற்றைப் பற்றிச் சாய அரவு தீண்டின் எங்ஙனமோ அங்ஙனமாயிருக்கும் அந்நாள்.

20. ஆண்டவருடைய நாள் அந்த காரத்தையல்லாது பிரகாசத்தைத் தருமோ; அது இருள் (மயமாயிருக்கும்,) அதில் ஒளியேயிராது.

21. உங்கள் உற்சவங்களைப் பகைக் கின்றோம், அருவருக்கின்றோம்; உங்கள் கூட்டத்தைச் சகிக்கவறியோம்.

22. நமக்குத் தகனப்பலி ஒப்புக் கொடுப்பது (வீணே;) உங்கள் காணிக் கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்; நேர்ச்சி கடனுக்குக் கொழுத்த பலிகள் (இடினும்) அங்கீகரிப்போமில்லை.

23. உங்கள் பாடல்களின் சப்தத்தை நம்மை விட்டு அகற்றுங்கள்; வீணை சேர்ந்த கீதங்களையுங் கேட்க மாட் டோம்.

24. நமது தீர்வை உங்கள்மீது சலம் போல் ஊற்றப்படும்; நமது நீதி விசை கொண்ட வெள்ளம்போல் உங்கள்மீது பிரவாகமாகும்.

25. இஸ்றாயேல் சந்ததியே! நாற்பது வருடமாய் வனாந்தரத்தில் நமக்கு (முழு இருதயத்தோடு) அப்பப்பலி தகனப்பலி இட்டதுண்டோ?

26. உங்கள் மெலோக் தெய்வத்தின் பெட்டகத்தையும், உங்கள் கர வேலை யதாகிய விக்கிரக ரூபத்தையும், உங்கள் தேவனின் நட்சத்திரத்தையுஞ் சுமந்து திரிந்தீர்கள்.

27. ஆதலின் உங்களைத் தமாஸ்கு அப்புறத்தில் கொண்டுபோகச் செய் வோம் என்கிறார் ஆண்டவர்; சேனைகளின் தேவன் என்பது அவருடைய நாம கரணமாகும்.

* 27-ம் வசனம். தமாஸ்கு அப்புறம் என்பது அசீரியாவையே குறிக்கிறது.