அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 05

தேவாலயம் கட்ட ஆரம்பித்தல்.

1. சலொமோனை அவருடைய பிதாவின் ஸ்தானத்தில் இராசாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீரின் இராசாவாகிய ஈராம் கேள்விப்பட்டு தன் ஊழியக்காரரை அவரிடத்தில் அனுப்பி னான்.  ஏனெனில் ஈராம் தாவீதுக்கு எந் நாளுஞ் சிறந்த சிநேகிதனாயிருந்தான்.

2. அப்பொழுது சலொமோனும் ஈராமிடத்தில் தன் ஆட்களை அனுப்பி:

3. என் தகப்பனாகிய தாவீதின் சத் துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங் களுக்குக் கீழ்ப்படுத்திவிடும் வரையில் சுறறிலும் இருந்த யுத்தத்தின் முகாந்தர மாய் அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட அவருக்குக் கூடாதிருந்ததென்று நீர் அறிந்திருக்கிறீர்.

4. ஆனால் இப்பொழுதுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்குச் சமாதானத்தைத் தந்தார்; எனக்கு விரோதியுமில்லை, இடையூறுமில்லை.

5. ஆகையால்: உன் ஸ்தானத்திலே உன் சிம்மாசனத்தின் மேல் நாம் வைக்கும் உன் குமாரனே நமது நாமத் துக்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதுக்குச் சொன்னபடியே, என் தேவனாகிய ஆண்டவருடைய நாமத்திற்கு ஆலயத் தைக் கட்ட வேண்டுமென்றிருக்கிறேன்.

6. ஆதலால்: லீபானின் கேதுரு மரங் களை எனக்காக வெட்டக் கட்டளை யிடும்; சிதோனியரைப்போல் மரம் வெட்டும் வேலை அறிந்தவர்கள் எங்க ளுக்குள் ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்;  ஆதலால் என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுகூட வேலை செய்வார்கள்.  நீர் எப்படி சொல் லுவீரோ அப்படியே நான் உம்முடைய வேலைக்காரருக்குச் சம்பளம் அளிப்பே னென்று சொல்லச் சொன்னான்.

7. ஈராம் சலொமோன் வார்த்தை களைக் கேட்டபோது மிகவும் சந்தோ ஷப்பட்டு: அப்படிப்பட்ட ஏராளமான ஜனங்களை ஆளும்படி தாவீதுக்கு ஞான முள்ள ஒரு குமாரனைக் கொடுத்த தேவ னாகிய கர்த்தர் இன்று தோத்தரிக்கப்படு வாராக! என்று சொல்லி,

8. ஈராம் சலொமோனிடத்தில் தன் மனுஷரை அனுப்பி: நீர் எனக்கு சொல்லி யனுப்பின காரியத்தை நான் கேட் டேன்; கேதுரு மரங்களுக்காகவும், சப்பீன் மரங்களுக்காகவும் உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய் வேன்.

9. என் வேலைக்காரர் லீபானி லிருந்து அவைகளை இறக்கிக் கடலோ ரத்தில் கொண்டுவந்து சேர்ப்பார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங் களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத் துக்குக் கடல் வழியாய் அனுப்பி அவை களைக் கரையேற்றுவேன்.  அவைகளை நீர் ஒப்புக்கொண்டு  என் ஜனங்களுக்கு ஆகாரங் கொடுப்பதற்கு வேண்டியவை களை நீர் எனக்களிக்க வேண்டுமென்று சொல்லி அனுப்பினான்.

10. அப்படியே ஈராம் சலொமோ னுக்கு வேண்டியமட்டும் கேதுரு மரங் களையுஞ் சப்பீன் மரங்களையும் கொடுத் துக்கொண்டு வந்தான்.

11. சலொமோன் என்பவனோ ஈரா மின் அரண்மனைக்குப் போஜனத்துக் காக இருபதினாயிரம் கோர் என்னும் மரக்கால் கோதும்பையும், இருபது மரக்கால் சுத்தமான ஒலீவ் எண்ணெயுங் கொடுத்தான். இப்படியாகச் சலொ மோன் ஈராமுக்கு வருஷாந்தரங் கொடுத்துவந்தான்.

12. கர்த்தரும் (முன்) சலொமோனுக் குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்.  ஈராமுக்கும்  சலொமோனுக்கும் சமாதானம் உண் டாகி இருவரும் உடன்படிக்கைச் செய்து கொண்டார்கள்.

13. இராசாவாகிய சலொமோன் இஸ்றாயேலியர் எல்லாரிலும் வேலை செயவதற்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைத் தெரிந்தெடுத்துக்கொண்டு,

14. அவர்களில் ஒவ்வொரு மாதத்துக் கும் பதினாயிரம் பேரை மாற்றி மாற்றி லீபானுக்கு அனுப்பினான்.  இப்படியாய் அவர்கள் இரண்டு மாதம் வீட்டில் இருப் பார்கள்; அதோனிராம் அந்த அமஞ்சி ஆட்களுக்குக் கண்காணியாயிருந்தான்.

15. சலொமோனிடத்தில் சுமைசுமக் கிறவர்கள் எழுபதினாயிரம் பேரும், மலையில் கல்வெட்டுகிறவர்கள் எண்பதி னாயிரம் பேரும் இருந்தார்கள்.

16. இவர்களைத் தவிர வேலையெல் லாம் விசாரித்து வேலை செய்யும் ஜனங் களையும் அமஞ்சி ஆட்களையுங் கண் காணிக்கிறதற்குத் தலைமையான காரி யஸ்தர்கள் மூவாயிரத்து முந்நூறு பேரும் இருந்தார்கள்.

17. ஆலயத்திற்கு அஸ்திவாரம் போடப் பெரிதும் விலையேறப் பெற்றது மான கற்களைக் கொண்டுவந்து சீர்படுத் தக் கட்டளையிட்டான்.

18. ஆலயத்தைக் கட்டச் சலொமோ னின் கொற்றர்களும், ஈராமின் கொற்றர் களுங் கற்களைப் பொளிய, கிப்லோ ஊரார் அந்த மரங்களையுங் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.