நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 05

தெபோராளும் பாராக்கும் பாடிய நன்றியறிந்த தோத்திரப்பாடல்

1. அந்நாளில் தெபோராளும் அபினோ யன் குமாரன் பாராக்கும் பாடின பாடல் என்னவெனில்,

2. இஸ்ராயேலுக்காக மனப்பூர்வமாய் உங்கள் உயிரை ஒப்புக்கொடுத்த இஸ்ராயேல் மக்களே! கர்த்தரை ஸ்துதியுங்கள்.

3. மன்னர்களே! கேளுங்கள், பிரபுக்களே செவிகொடுங்கள். நானே கர்த்தரைத் துதிப் பேன், நானே இஸ்ராயேல் கடவுளாகிய கர்த்தரைப் போற்றுவேன்.

4. ஆண்டவரே! செயீரினின்று நீர் புறப் பட்டு ஏதோம் நாட்டை நீர் கடந்துவருகை யில் பூமி அதிர்ந்தது: வானங்களும், மேகங் களுந் தண்ணீரைச் சொரிந்தன.

5. கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்துபோயின. இஸ்ராயேலின் கடவுளான கர்திரைக் காணவே சீனாயியுங் கரைந்தது.

6. ஆனோத் புத்திரனான சாம்காருடைய காலத்திலும், சாகேல் காலத்திலும் பாதைகள் பாழடைந்து கிடந்தன; வழி நடந்தவர்கள் வேறு வழியாய் நடந்தார்கள்.

7. தெபோரான் (இஸ்ராயேலுக்குத் தாயா க எழும்புமளவும்) இஸ்ராயேலில் பராக்கிரம சாலிகள் இருந்ததில்லை; சிலர் இருந்தார்க ளென்றாலும் சும்மாயிருந்தார்கள்.

8. நூதன யுத்தங்களைக் கர்த்தர் தெரிந்து கொண்டார். சத்துராதிகளின் கோட்டை வாசல்களை அவர் தகர்த்துடைத்தார். ஆனால் இஸ்ராயேலிலே நாற்பதினாயிரஞ் சேனை யில் கேடயமும், ஈட்டியுங் காணப்ட்ட தில்லை.

9. என்னிருதயமானது இஸ்ராயேலின் பிரபுக்களை நேசிக்கின்றது, மனவுச்சாயமாய் ஆபத்துக்கு உங்களை ஒப்புக்கொடுத்தவர் களே, கர்த்தரை ஸ்துதியுங்கள்.

10. புஷ்டியான கழுதையின்மேல் ஏறு கிறவர்களே, நியாய ஸ்தலத்தில் உட்காருகிற வர்களே, வழியில் நடக்கிறவர்களே, நீங்களும் அவரை கொண்டாடுங்கள்.

11. இரதங்கள் மோதியுடைந்த விடங்க ளிலும், சத்துராதி படைகள் சங்காரமான ஸ்தலங்களிலும் இஸ்ராயேல் வீரர்மட்டில் கர்த்தருக்கு உண்டான நீதயுந் தயையும் பிரஸ்தாபிக்கப்படும். அப்போது கர்த்தரு டைய ஜனங்கள் சத்துராதிகளுடைய வாசல் மட்டுஞ் சென்று அவர்களைக் கீழ்ப்படுத் தினார்கள்.

12. எழுந்திரும், எழுந்திரும், தெபோரா ளே, எழுந்திருந்து சங்கீதம் பாடும், பாராக்கே எழுந்திரும். சண்டையில் பிடிபட்டவர்களே நீரே கொண்டுபோம் அபினோயனின் குமாரனே.

13. மீதியாயிருந்த ஜனங்கள் காப்பாற்றப் பட்டார்கள். கர்த்தர்தாமே வீரரிடமாய் யுத்தஞ் செய்தார்.

14. எப்பிராயீமின் சந்ததியாரைக் கொண்டு அவர் அமலேக்கை முறியடித்தார். பிறகு பெஞ்சமீனரைக்கொண்டும், ஓ அம லேக்கே, உன் ஜனங்களை வென்றார், மாக்கீரி னின்றும் சாபுலோனினின்றும் பிரபுக்கள் புறப்பட்டு யுத்தத்திற்குப் படை நடத்த இறங்கி வந்தார்கள். ஆனால் ரூபனின் பிரிவி னைகளால் மகாத்துமாக்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

15. இஸாக்கார் தளக்கர்த்தர் தெபோரா ளோடிருந்தார்கள். பாதாளத்தில் விழுவது போல் ஆபத்தைத் தேடின பாராக்கைப் பின்சென்றார்கள்.

16. மந்தைகள் சப்தத்தைக் கேட்பதற்கோ இரண்டெல்லைகள் நடுவில் வாசஞ் செய் கிறாய்? ரூபனின் பிரிவினைகளால் மகாத்து மாக்களுக்குள்ளே சடுத்தம் உண்டாயிற்று.

17. கலாத் யோர்தான் நதிக்கப்பால் விரு தாவாய்க் காலம் போக்கினான். தானோ கப்பல்களைச் செய்துகொண்டிருந்தான். ஆ சேரோவென்றால் கடற்கரை ஓரங்களில் வா சஞ் செய்து துறைமுகங்களில் தங்கியிருந் தான்.

18. சாபுலோனும் நேப்தளியுமோ மேரோமே தேசத்தில் தங்கள் உயிரை மரணத்துக்கு இரையாக்கினார்கள்.----------19. அரசர் வந்து யுத்தஞ் செய்தார்கள். கானானைய அரசர் தாகெதோ ஜலங்களரு கே தானாக்கில் சண்டை செய்தார்கள். ஆ னால் அவர்கள் யாதொன்றுங் கொள்ளை கொண்டவர்களல்ல.

20. ஏனென்றால் வானத்தினின்று அவர்க ளுக்கு விரோதமாய்ச் சண்டை செய்யப் பட்டது. நட்சத்திரங்கள் தங்கள் தங்கள் வரி சையிலும் ஓட்டத்திலும் நின்று சிசாராவை எதிர்த்தன.

21. சிசோன் நதி அவர்கள் பிரேதங்களை இழுத்துப்போனது, கதுமீம் நதியும்சிசோன் நதியும் அவ்விதமே செய்தது: என்னாத்துமமே வலியரை நீ மிதித்துத் தள்ளு.

22. அப்பொழுது சத்துராதிகளில் பலவான் கள் ஓடிய வேகத்தினாலும், பள்ளங்களிற் பாய்ந்த விசையினாலும் அவர்களுடைய குதி ரைகளின் குளம்புகள் பிளந்து போயின.

23. கர்த்தருடைய தூதன்: மேரோஸ் நாட் டைச் சபியுங்கள், அந்நாட்டு வாசிகளையுஞ் சபியுங்கள், ஏனென்றால் அவர்கள் கர்த்தரு டைய ஜனத்திற்குச் சகாயம் பண்ணவும் அவருடைய வீரருக்கு உதவி செய்யவும் வந்ததில்லை என்றார்.

24. பெண்களில் சினேயனான ஆபேர் மனைவியான சாகேல் ஆசீர்வதிக்கப்பட்ட வள். அவள் தன் கூடாரத்தில் ஆசீர்வதிக்கப் படுவாளாக.

25. தண்ணீர் கேட்டவனுக்குப் பாலைக் கொடுத்தாள்; பிரபுக்கள் உண்ணும் பாத்திரத் தில் ஆடையைக் கொணர்ந்தாள்.

26. இடது கையில் ஆணியைத் தாங்கி, வலது கையால் தொழிலாளரின் சுத்தியை ஓங்கிச் சிசாராவின் தலையில் ஆணியிறங்கு மிடம் அறிந்து நெறியுருவக் கடாவி அடித் தாள்.

27. அவள் கால்களில் (சிசாரா) விழுந்தான், பலமிழந்தான், மரித்தான், அவள் கால்கள் முன்பாக உருண்டு புரண்டு நிர்ப்பாக்கிய னாய் உயிரை விட்டுக் கிடந்தான்.

28. ஜன்னல் வழயாய்ப் பார்த்துக் கொண்டு, அவன் தாயார் ஓலமிட்டு அறையி னிறுன் சொல்லுவாள்: அவன் இரதம் திரும்பி வரத் தாமதென்ன? அவன் குதிரைகள் இன்னம் வராமலிருப்பதென்ன? என்பாள்.

29. அப்போது அவன் பெண்ஜாதிகளில் புத்தியில் சிறந்தவளொருத்தி, தன் மாமி யாரை நோக்கி:

30. கொள்ளையடித்த பொருள்களைச் சில வேளை இப்போது பங்கிடுகிறார். அதி செளந்தர்யமான பெண்பிள்ளையைத் தனக் குத் தேடிக்கொள்ளுகிறார். பலவர்ன வஸ்தி ரங்கள் அவருக்குக் கொடுக்கப்படுகிறதாக்கும். அவர்மேல் தரித்துக்கொள்ளப் பலவித ஆபர ணங்கள் தெரிந்துகொள்ளுகிறார்போலும் என்பாள்.

31. ஆண்டவரே உம்முடைய சத்துராதி கள் யாவரும் இப்படி நிர்மூலமாகக்கடவார் கள். உம்மை நேசிப்பவர்களோ, சூரியனானது தன்னுதயத்தில் பிரகாசிக்கும்வண்ணம் ஒளி வீசக் கடவார்கள்.

32. பிறகு நாற்பது வருஷகாலம் தேசம் சமாதானமாயிருந்தது.