சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 04

பொன்விளக்குத் தண்டும், ஒலீவ் தருக்களும்.

1. என்னிடமாய்ச் சம்பாஷித்திலங்கிய வானவன் பின்னும் வந்து நித்திரையில் மனிதனைத் தட்டி எழுப்பும் பான்மை, என்னை எழுப்பி:

2. நீ பார்ப்பதென்ன என எனைக் கேட்டனன்; யான்: இதோ சர்வமுங் கனகமாகிய விளக்குத் தண்டும், அதனுச் சியில் ஓர் தீப அகலும், அதன் (கிளைத்) தீபங்கள் ஏழுங் காண்கின்றேன்; அதன் மூடியிலிருந்த தீபங்கள் ஏழுக்குங் குழைகளுமுள.

3. அதன்மீது இரு ஒலீவ் மரங்களும், ஒன்று தீபத்தின் வலது புறமும், மற்றொன்று இடதுபுறமுமாயிருத்தலை யும் (காண்கின்றேன்) என்றேன்.

4. அப்போது என்னிடமாய்ச் சம்பாஷித்திலங்கிய வானவனை யான் பார்த்து: என் ஆண்டவரே, இவைகள் என்னவெனக் கேட்டேன்.

6. பின்னர் மாறுத்தாரமாக அவன் என்னைப் பார்த்து: யஸாரோபபேலுக்கு ஆண்டவர் அருளும் வாக்கியமாவது: சேனையினாலுமன்று, (சுய) பலத்தி னாலுமன்று நமது ஆவியால் மாத்திரமுண்டு எனச் சேனைகளின் தேவனார் செப்புகின்றனர் என உரைத்தனன்.

7. பிரம்மாண்டப் பர்வதமே! (தேவ தாசனாகிய) யஸாரோபபேல் முன் நீ யார்? உன்னைத் (தரை) மட்டமாக்கு வேன்; அவனே மேல் வரிக்கல் வைப்பன்; இவ்விரண்டாமாலயத்தை முந்தினதளவு வனப்பாக்குவன்.

8. அப்போது ஆண்டவர் என்னை நோக்கித் திருவாய்மலர்ந்து: 

9. யஸாரோபபேல் கரங்கள் இவ் வாலயத்துக்கு அஸ்திவாரமிட்டன; அவன் கைகளே அதனை முடிப்பன; இங்ஙனஞ் சேனைகளின் ஆண்டவரே என்னை அனுப்பினதென அறிந்துகொள் வீர்களாக.

10. இந்த ஆரம்ப (வேலை) நாட்க ளைப் பொருட்டாய் எண்ணாதவர் யாரே? யஸாரோபபேலைத் தூக்கு நூல் குண்டு கரத்தினனாய்ப் பார்க்கையில் களிப்புறமாட்டாரோ? (ஏனெனில்,) புவன மனைத்துஞ் சுற்றிப் பார்க்கும் ஆண்டவ ருடைய கண்கள் ஏழிருக்கின்றன.

11. அப்போது யான் பேச ஆரம்பித்து அவனை நோக்கி: விளக்குத்தண்டுக்கு வலது புறமும் இடது புறமுமாயிருக்கும் இந்த இரு ஒலீவ் மரங்கள் என்னத்தைக் குறிக்கின்றன எனக் கேட்டேன்; (மெளனஞ் சாதிப்பதைப் பார்த்து:)

12. மறுபடியும் அவனை நோக்கி (எண்ணெய் ஒழுகும்) பொன் குழைகள் அமர்ந்துள்ள, கனகத்தாலாகிய இரு (அகல்) மூக்குகளுக்கு அருகிலிராநின்ற ஒலீவ் கிளைகள் என்ன பொருட் கொள்ளுகின்றன எனக் கேட்டேன்.

13. அவன் அதற்கு என்னைப் பார்த்து: இவை யாதென உனக்கு விளங்குகின்ற தில்லையோவெனக் கேட்க, யான்: என் ஐயனே, இல்லை என்றேன்.

14. அதற்கு அவன்: இவர்கள் சர்வ புவன தேவன் முன் துணை நிற்குந் தைலாபிஷேகதாரிகளாம் என்றனன்.