சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 04

ஏழைகளுக்குத் தர்மஞ் செய்து சாந்தகுணம் இரக்கங் காண்பிக்க வேண்டும் என்பது.

1. மகனே! பிச்சை கேட்கும் தரித்திரனை உன் வஞ்சகத்தால் ஏமாற்றாதே; எளியவனிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்ளாதே.

2. பசியுள்ள ஆத்துமத்தை நிந்தியாதே; ஏழையின் தேவையில் அவனைக் கோபம் கொள்ளச் செய்யாதே.

3. தரித்திரனை மனம் நோகச் செய்யாதே; வருந்துகிறவனுக்குக் கொடுப்பதைத் தாமதிக்காதே.

4. கஸ்திப்படுகிறவனின் மன்றாட்டைத் தள்ளிவிடாதே; எளியவனிடமிருந்து உன் முகத்தைத் திருப்பாதே.

5. எளியவன் உன்பேரில் கோபம் கொள்வது பற்றிய அச்சத்தோடு, அவனிடமிருந்து உன் கண்களைத் திருப்பாதே; உன்னிடம் கேட்பவர்கள் உன் முதுகுக்குப் பின்னால் உன்னைச் சபிக்கும்படி விடாதே.

6. ஏனெனில் தன் ஆத்துமத்தின் கசப்பில் உன்னைச் சபிப்பவனின் ஜெபம் கேட்கப்படும்; ஏனெனில் அவனை உண்டுபண்ணினவர் அவன் வேண்டுதலைக் கேட்பார்.

7. ஏழைகளின் கூட்டத்திற்குப் பிரியமானவனாய் உன்னை ஆக்கிக் கொள்; மூப்பருக்கு உன் மனதைத் தாழ்த்து, மேன்மையானவனுக்குத் தலைவணங்கு.

8. சந்தோஷமாய் எளியவனுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாயாக; நீ கடன்பட்டதை அவனுக்குத் திருப்பிக் கொடு; சாந்த குணத்தோடு அவனுக்குச் சமாதான வார்த்தைகளைச் சொல்லு.

9. ஆங்காரியின் கரத்தால் துன்புறுபவனை அவனிடமிருந்து விடுவி. உன் ஆத்துமத்தில் கோழையாயிராதே.

10. தந்தையற்ற பிள்ளைகளுக்கு நீதி செலுத்துகையில் தகப்பனைப்போல் இரக்கம் காண்பி; அவர்கள் தாயை ஆதரிப்பவனாயிரு.

11. அப்போது உன்னதரான கடவுளுக்கு நீயும் கீழ்ப்படிதலுள்ள மகனைப் போலிருப்பாய்; அவரும் தாயைவிட அதிகமாய் உன் மட்டில் இரக்கங்கொள்ளுவார்.

12. ஞானமானது தன் பிள்ளைகளுக்குள் ஜீவியத்தைத் தூண்டுகிறது, தன்னைத் தேடுகிறவர்களை அது காப்பாற்றுகிறது. நீதியின் வழியில் அது அவர்களுக்கு முன்செல்லும்.

13. அதை நேசிக்கிறவன் ஜீவியத்தை நேசிக்கிறான்; அதை எதிர்பார்த்து விழித்திருப்பவர்கள் அதன் இனிமையை அணைத்துக்கொள்வார்கள்.

14. ஞானத்தைப் பற்றிக் கொண்டவர்கள் சீவியத்தையடைவார்கள்; அது பிரவேசிக்கும் இடத்தையெல்லாம் கடவுள் ஆசீர்வதிப்பார்.

15. அதற்கு ஊழியம் செய்பவர்கள் பரிசுத்தரின் ஊழியராயிருப்பார்கள்; அதை நேசிப்பவர்களைக் கடவுள் நேசிக்கிறார்.

16. அதற்குச் செவிகொடுக்கிறவன் மக்களினங்களுக்கு நியாயத் தீர்வையிடுவான்; அதை நோக்கிப் பார்க்கிறவன் பாதுகாப்பாக நிலைத்திருப் பான்.

17. அவன் அதில் நம்பிக்கை வைப்பான் என்றால் அதைச் சுதந்தரித்துக் கொள்வான்; அவன் சந்ததியும் அதில் உறுதிப்படுத்தப்படும்.

18. ஏனெனில் சோதனையில் அது அவனோடு நடக்கின்றது; முதலில் அதுதான் அவனைத் தேர்ந்து கொண்டது.

19. அது பயத்தையும், திகிலையும், துன்ப சோதனையையும் அவன்மீது கொண்டு வரும்; தன் சட்டங்களால் அவனைப் பரிசோதித்து, அவனுடைய ஆன்மாவைத் தான் நம்பும் வரையிலும், தனது ஒழுங்கின் கசையால் அவனை அடித்துத் துன்புறுத்தும்.

20. அதன்பின் அது அவனை பலப் படுத்தி அவனிடம் நேர்வழியில் சென்று அவனுக்குச் சந்தோஷம் தரும்.

21. அது தனது இரகசியங்களை அவனுக்கு வெளியாக்கி அறிவினுடையவும். நீதியின் புத்தி யினுடையவும் பொக்கிஷங்களை அவன் மீது குவிக்கும்.

22. ஆனால் அவன் வழிதவறிப் போனால் அது அவனைக் கைவிட்டு, அவனுடைய விரோதியின் கைகளில் அவனைக் கையளிக்கும்.

23. மகனே! காலமறிந்து தின்மையை விலக்கு.

24. ஏனெனில் உன் ஆத்துமம் உண்மையைச் சொல்ல வெட்கப் படாதிருப்பதாக.

25. பாவத்தைக் கூட்டி வரும் அவமானம் ஒன்றுண்டு; மகிமை யையும் வரப்பிரசாதத்தையும் கொண்டு வரும் அவமானமும் ஒன்றுண்டு.

26. உன் இருதய நன்மைக்கு விரோதமான யாதொன்றையும் ஏற்றுக்கொள்ளாதே; உன் ஆத்துமத் திற்கு எதிராக ஒரு பொய்யையும் ஏற்றுக்கொள்ளாதே.

27. உன் அயலானின் குற்றத்தின் மட்டில் தாட்சணியங் கொள்ளாதே.

28. இரட்சிப்பின் நேரத்தில் பேசுவதை விலக்காதே; உன் ஞானத்தை அதன் அழகில் மறைக்காதே.

29. ஞானமானது நாவைக்கொண்டு உணரப்படுகின்றது; புத்தி, அறிவு, கல்வி ஆகியவை ஞானியின் வார்த்தையாலும், நீதிக்குரிய செயல் களில் நிலையாயிருத்தலும் உணரப் படுகின்றன.

30. எவ்விதத்திலும் சத்தியத்திற்கு எதிராகப் பேசாதே: ஆனால் உன் அறிவின்மையால் வந்த பொய்க்காக வெட்கப்படு.

31. உன் பாவங்களை சங்கீர்த்தனம் செய்ய வெட்கப்படாதே; ஆனால் உன் பாவத்தை முன்னிட்டு சகலருக்கு முன்பாகவும் உன்னைத் தாழ்த்தாதே.

32. வலியவனின் முகத்தே எதிர்த்து நில்லாதே; ஆற்று நீரோட்டத்தை எதிர்த்து நீந்தாதே.

33. உன் ஆத்துமத்தைப்பற்றி நீதிக் காகக் கஷ்டப்படு; சாகும் வரையும் கூட நீதிக்காகப் போராடு; சர்வேசுரன் உன் சத்துராதிகளை உனக்காக எதிர்த்து வெல்லுவார்.

34. பேசுவதில் அவசரப்படாதே; உன் செயல்களில் சோம்பலாகவும் அசமந்தமாகவுமிராதே.

35. உன் வீட்டில் உன் வீட்டாரை அச்சப்படுத்தி, உனக்குக் கீழ்ப்பட் டவர்களை ஒடுக்குகிற சிங்கத்தைப் போல் இராதே.

36. உன் கையானது வாங்குவதற்கு மட்டும் விரித்தும், கொடுப்பதற்கு மூடியுமிராதிருக்கக்கடவது.