ஓசே ஆகமம் - அதிகாரம் - 04

கர்த்தர் யூதர்களை மனந்திரும்பச் செய்வதற்கு அவர்களை மிரட்டுகிறார், - புத்திமதிகளையுஞ் சொல்லுகிறார்.

1. இஸ்றாயேல் மக்கள்காள், ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்; உங்கள் தேவ வாசிகளோடு அவர் (குற்ற) விசாரணை நடத்தப் போகின்றனர்; ஏனெனில், அத்தேயத்தின்கண் சத்திய மென்பதுமில்லை, தாட்சணியமுங் கிடையா, தேவ அறிவென்பதுஞ் சுத்த சூனியம்.

2. தூஷணம், பொய், கொலை, களவு, வியபசாரம் அங்கு பிரளயமாயின; இரத்தப் பழியோடு இரத்தச் சேதம் பொருந்தி நின்றது.

3. ஆனதை முன்னிட்டு (இஸ்றாயேல்) தேசம் பரிதபிக்கும்; அதில் வசிப்பாரெல்லாருங் காட்டு மிருகங்கள், ஆகாயப் பறவைகள் சகிதமாகச் சோர்வடைவர்; சமுத்திர மட்சங்களும் செத்து குவிக்கப்படுவன.

* 3-ம் வசனம். மிருகங்களும், பறவைகளும், மட்சங்களுஞ் சோர்வடைவன என்றது; தேசஞ் சர்வேசுரனின் கோபத்தால் பாழாக்கப்படும் பட்சத்தில், சகல ஜீவ இராசிகளும் பசியால் வாடும்படியாகும்; ஆதலின்,

4. இஸ்றாயேலே! உன் சனத்திற்கு ஞாயங் கூறுவதும், அதின்மேல் குற்ற மெடுப்பதும் வியர்த்தமே; ஏனெனில், குருவோடு விவாதம் பேசுவாரையொத்த பிடிவாதமுள்ள சனம் உன் சனம்.

5. நீங்கள் இன்று ஒருங்கே (கேடு பாடாய்) விழுவீர்கள்; உங்களோடு தீர்க் கத்தரிசியரும் வீழ்வர்; ஒரு இரவிலேயே உன் தாய் வாய் பொத்தி நிற்கச் செய்வோம்.

* 5-ம் வசனம். நீங்கள் இன்று கொஞ்சகாலத்தில் அசீரியர் அடிமைத்தனத்தில் வீழ்வீர்கள்; ஒரு இரவிலே துன்பத்துடையவும், அடிமைத்தனத்துடையவும் அந்தகாரத்திலே உன் மாதாவாகிய திருச்சபை பாபத்துக்குத் தக்க தண்டனையே இது என்று முறையிட நாவெழா திருக்கும்.

6. நம் பிரசை வேத நூலறிவு அடையாததால் நாவெழாது நிற்கும்; (குருக்களாகிய) நீங்கள் நூலறிவை அகற் றியதால், நீங்கள் நமக்குக் குருத்துவப் பணிவிடை செய்யாதபடி உங்களைத் தள்ளிவிடுவோம்; சர்வேசுரனின் வேதத்தை நீங்கள் மறந்ததினால், நாமும் உங்கள் மக்களை மறந்துவிடுவோம்.

7. எவ்வளவுக்கு அவர்கள் பலுகினர் களோ, அவ்வளவுக்கும் நமக்கு விரோத மாய்ப் பாபங் கட்டிக் கொண்டனர்கள்; ஆதலின், அவர்கள் மகிமையை அவமான மாக மாற்றிவிடுவோம்.

8. ஏனெனில், அவர்கள் நம் பிரசை யின் பாபங்களைக் கொண்டு சாப்பிடு கின்றார்கள்; அன்றியும் அவர்களுடைய ஆத்துமங்களைத் தம் அக்கிரமத்திற்கு இழுக்கின்றார்கள்.

* 8-ம் வசனம். பாபப் பலிகளிலே குருக்களுக்கு ஆதாயமுண்டு என்றவாறு,

9. குரு எங்ஙனமோ, பிரசையும் அங்ஙனமே தண்டிக்கப்படும்; அதின் (துர்) நடபடிக்காக அதின்மீது பழிவாங்குவோம்; அவர்களுடைய (கெட்ட) எண் ணங்களுக்குத் தக்க பலனளிப்போம்.

10. வேதத்தை அநுஷ்டிக்காது, ஆண்டவரை அவர்கள் கைவிட்டதால், சாப்பிட்டாலுந் திருப்தியடையமாட் டார்கள்; சையோகஞ் செய்யினும் புத்திர சந்தானம் அடையமாட்டார்கள்.

11. வேசித்தனமும், இரசமும், குடி வெறியும் அவர்கள் புத்தி தடுமாறச் செய்தன.

12. என் சனம் தன் கட்டையிடங் குறி கேட்கின்றது; அதின் கோல் வருவன வற்றை முன்னுரைக்குமாம்; வியபசாரத்தின் புத்தி அவர்கள் கண்களை (இங் ஙனம்) மறைத்தது; அவர்கள் தம் தேவனை விலகி (விக்கிரகங்களோடு) சோரம் போனார்கள்.

13. அவர்கள் பர்வதங்களின் சிகரங் களின்மேல் பலியிட்டு, குன்றுகளின் மீதும் நிழல் சுகமாயிருக்கையில் கருவாலி விருட்சம், புன்னை மரம், தெரேபேந்து மரம் (முதலியவற்றின்) கீழும் (சிலைகட் குத்) தூபாராதனை நடத்துகின்றனர்கள்; ஆனதைப் பற்றி உங்கள் புத்திரிகள் வேசைகளாவார்கள்; உங்கள் மனைவி களும் வியபசாரம் போவார்கள்.

14. உங்கள் புத்திரிகள் சோரம் போயி னும், உங்கள் பத்தினிகள் வியபசாரஞ் செய்யினும் அவர்களை நாம் தண்டிப் போமில்லை; ஏனெனில், நீங்களே வேசி களுக்குச் (சமதையானவரோடு) சீவித்து பெட்டையரோடு பலியிடுகின்றீர்கள்; புத்தி கெட்ட பிரசையானது (இப்படி யாகத்) தண்டிக்கப்படும்.

15. இஸ்றாயேலே! நீ வியபசாரியாய்ப் போனாலும், யூதாவாகிலும் (அப்பாபத்தில்) விழாதிருக்கக் கடவது; (நீங்களோ) கல்காலாவிலுள்ள விக்கிரகங் களை ஆராதிக்கப் போகாதீர்கள்; பெத்தா வென்ற இடத்திற்குஞ் செல்ல வேண் டாம்; (அவைகளைப் பார்த்து) ஆண்டவர் சீவியராயிருக்கின்றனர் எனச் சத்தியங் கூறாதீர்கள்.

* 15-ம் வசனம். பெட்டயர் பேல்பேகோரின் அர்ச்சகர் அண்ணகர்களாயிருத்தல் பற்றி.

16. ஏனெனில், இஸ்றாயேல் அடங்காக் கிடாரியைப்போல் பாதை விலகினது; இனி ஆண்டவர் அவர்களை ஆட்டுக் குட்டியைப் போல் அகன்ற வெளியில் (இஷ்டம்போல்) மேய விடுவர்.

* 16-ம் வசனம். இஷ்டம்போல் ஆடு எங்கும் மேயுமாகில், நரிகள் கொண்டுபோகும் எனுங் கருத்து தொக்கியிருத்தல் காண்க.

17. எப்பிராயீம் சனம் விக்கிரகங்களுக்கு ஸ்வாதீனமானபடியால் அதை நீ விட்டு விலகு.

18. விபசாரத்தின்மேல் விபசாரங் கட்டிக்கொள்ளும் அச்சனஞ் செய்யும் நைவேத்தியம், படையல் முதலியது உன் ஆசாரத்திற்கு வேறுபட்டதாய் இருக்கின்றதன்றோ? அவர்கள் பாதுகாவலராகிய ஆசாரியர் வெட்கக்கேடானவைகளால் அதை நிரப்பப் பிரீதி கொண்டனர்.

19. (சண்டமாருதக்) காற்றானது அதைத் தன் செட்டைகளால் அடித்துக் கொண்டு போய்விடும்; பலி ஆராதனை செய்த (தேவர்களைக் குறித்து) அவர்கள் வெட்கிப் போவார்களாமே.

* 19-ம் வசனம். காற்று ஆண்டவருடைய கோபஞ் செப்பட்டைகளை உடைத்தாயது போல் இஸ்றாயேலை அசீரியர் நாட்டுப் பக்கமாய் அடித்துப் போகும் என்றவாறு.