அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 04

இஸ்போசேத் கொலை செய்யப்பட்டது.

1. அப்நேர் எப்ரோனில் மடிந்தானென்று சவுலின் குமாரனாகிய இஸ்போ சேத் கேள்விப்பட்ட போது அவன் கைகள் திடனற்றுப் போயிற்று; மேலும் இஸ்றாயேலரெல்லோருங் கலங்கினர்.

2. அது கிடக்க, சவுலின் குமாரனுக் குக் கள்ளர் தலைவரான இரண்டு       பேர் இருந்தார்கள்; இவர்களில் ஒருவ னுக்குப் பேர் பாஹானா, மற்றவ   னுக்குப் பேர் இரேக்காப்.  அவர்கள் பெஞ்சமீன் புத்திரரில் பெரோத்  தியனான ரெம்மனின் குமாரர்.  உள்ள படி பெரோத் பெஞ்சமீனுக்கடுத்ததாய் எண்ணப்படும்.

3. பெரோத்தியரோ செத்தாமீமுக்கு ஓடிப்போய் அந்நாள்வரைக்கும் அங்கே பரதேசிகளாயிருந்தார்கள்.

4. சவுல் குமாரனாகிய ஜோனத் தாசுக்கு இரண்டு காலும் ஊனமாக ஒரு மகனிருந்தான்.  சவுலும் ஜோனத்தாசும் இறந்த செய்தி ழெஸ்றாயேலிலிருந்து வந்தபோது அவனுக்கு ஐந்து பிராய மிருக்கும்.  அவனுடைய செவிலித்தாய் அவனை எடுத்துக் கொண்டு விரைந்து ஓடிப் போனாள்.  ஓடிப் போகும் அவசரத்தில் அவன் விழுந்து முடவ னானான். அவனுக்கு மிப்பிபோசேத் என்று பேரிடப்பட்டது.

5. இரேக்காப், பாஹானா என்னும் பெரோத்தியரான செம்மனின் மக்கள் போய் உச்சியுரும் வேளையில் இஸ்போ சேத்தின் வீட்டிலே நுழைந்தார்கள்; அவனோ தன் படுக்கையின்மீது மத்தி யான நித்திரை செய்துகொண்டிருந்தான்.  வீட்டு வாசல்காரி கோதுமையைத் தூற்றிக்கொள்ளவே தானுந் தூங்கி விட் டாள்.

6. அப்போது இரேக்காபும், பாஹா னாவென்கிற அவன் சகோதரனுங் கோதுமை வாங்க வருகிறவர்களைப் போல் நடுவீடு மட்டும் இரகசியமாக வந்து அவனை அரையாப்பில் குத்திப் போட்டு ஓடிப்போனார்கள்.

7. அவர்கள் வீட்டில் நுழைந்த போது அவன் பள்ளி அறையிலே தன் கட்டிலின்மேல் படுத்துக் கொண்டிருந் தது கண்டு அவ்விருவருங் கிட்டப்போய் அவனைக் கொன்றுபோட்டு அவன் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு இராமுழுவதும் வனத்து வழியாய் நடந்து,

8. இஸ்போசேத்தின் தலையை எப்பிரோனிலிருந்த தாவீதினிடத்தில் கொணர்ந்து இராசாவை நோக்கி:  உம்முடைய பிராணனை வாங்கத் தேடியிருந்த உமது மாற்றானாகிய சவுலின் குமாரனான இஸ்போசேத்தின் தலையை இதோ! பாரும்.  கர்த்தர் என்னாண்டவனாகிய அரசனுக்குச் சவுலின் மேலும் அவன் குடும்பத் தாரின் மேலும் பழிவாங்கினாரே! என்றார்கள். 

9. தாவீதோ பெரோத்தியனான ரெம்மனின் குமாரராகிய இரேக்காபுக் கும் அவன் சகோதரனான பாஹானா வுக்கும் பிரத்தியுத்தாரஞ் சொல்லி: என் னான்மாவைச் சகல இக்கட்டினின்று மீட்டிரட்சித்த கர்த்தருடைய சீவ னாணை!

10. முன்னொருவன் வந்து என்னை நோக்கி: சவுல் ஜீவித்துப் போட்டா ரென்று எனக்கு அறிவித்துத் தான் கொண்டுவநதது எனக்கு நல்ல செய்தி யென்று எண்ணிக் கொண்டிருக்கையில் நான் அவனைப் பிடித்து அவன் கொண்டு வந்த சமாசசாரத்துக்கு வெகுமானமாக சிசெலேக் ஊரில் அவனைக் கொன்று போட்டேன்.

11. அதை விடத் தமது வீட்டுக்குள் தமது படுக்கையின்மேல் படுத்து உறங்கி யிருந்த குற்றமற்ற மனிதனைக் கொலை செய்த சண்டாள மனிதருக்கு எவ்வளவுக் கதிகமாய் ஆக்கினை செய்ய வேண்டும்?  இப்பொழுது நான் அவருடைய இரத்தப்பழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களைப் பூமியிலிருந்து அழித் துப் போடாதிருப்பேனோ என்று சொல்லி,

12. தன் சேவகர்களை யேவி அவர்களைக் கொன்றுபோடக்  கட் டளையிட்டான்.  சேவகர் அவ்விதமே செய்து இருவருடைய கைகால்களை   யுந் தறித்து எப்பிரோனில் குளத் தண்டையில் அவர்களைத் தூக்கிப் போட்டார்கள்.  பிறகு அவர்கள் இஸ்போசேத்துடைய சிரசை எடுத்துப் போய் எப்பி ரோனிலிருக்கிற அப்நேரின் கல்லறையில் தானே அடக்கம் பண்ணி னார்கள்.