அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 04

இஸ்றாலியர் பிலிஸ்தியரால் சங்கரிக்கப் பட்டது.

1. அந்நாட்களில் சம்பவித்தே தெனில் பிலிஸ்தியர் யுத்தத்துக்குக் கூடினார்கள்; இஸ்றாயேலர் பிலிஸ்திய ரோடு சண்டைக்கு எழும்பிச் சனுகு பாறையென்னும் இடத்தில் இறங்கினார் கள்; பிலிஸ்தியரோ அபேக்கென்னும் இடத்தில் வந்து,

2. இஸ்றாயேலர் எதிரில் போரணி வகுத்தார்கள்; சண்டை துவக்கின பின் இஸ்றாயேலர் பிலிஸ்தியருக்குப் புறங் காட்டி ஓடினார்கள்; அந்தச் சண்டை யிலும் அங்குமிங்கும் நிலங்களிலும் சற்றேறக்குறைய நாலாயிரம் பேர் வெட்டுண்டு போனார்கள்.

3. பிரசைகள் பாளையத்தில் திரும்பி வந்தார்கள். அப்போது இஸ்றாயேல ருக்குள் வயதில் முதிர்ந்தோர்: ஏன் ஆண்டவர் இன்று பிலிஸ்தியருக்கு முன் நம்மைத் தண்டித்தார்? ஆண்டவ ருடைய உடன்படிக்கைப் பெட்டகத் தைச் சிலோவிலிருந்து நமது அருகில் கொண்டுவருவோமாக! நமது எதிராளி களுடைய கையினின்று நம்மை மீட்க நமது நடுவில் அது வருவதாகவென்றார் கள்.

4. பிரசைகள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினார்கள்; அங்கிருந்து கெரூபின் பேரில் உட்கார்ந்திருக்குஞ் சேனைகளின் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டகத்தைக் கொண்டுவந்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கைப் பெட்ட கத்தோடு ஏலியின் இரு குமாரர்களாகிய ஒப்னியும் பினேசும் இருந்தார்கள்.

5. ஆண்டவருடைய உடன்படிக் கைப் பெட்டகம் பாளையத்தில் வந்த போது இஸ்றாயேலரெல்லாம் பூமி சப்திக்கும்படிப் பெருங் கோஷ்டமாய்ச் சத்தம் போட்டார்கள்.

6. பிலிஸ்தியர் சத்தக் குரலைக் கேட்டு: எபியேறர் பாளையத்தில் பலத்த இந்த சத்த ஓசைக்குக் காரணமென்ன வென்று சொல்லிக் கொண்டார்கள்; பிறகு ஆண்டவருடைய பெட்டகம் பாளையத்தில் வந்திருந்ததாக அறிந்து கொண்டார்கள்.

7. பிலிஸ்தியர் பயந்து தேவன் பாளையத்தில் வந்தாரேயென்று சொல் லிக் கொண்டார்கள்; பிறகு அவர்கள் பரிதபித்துச் சொல்லிக் கொண்டதாவது:

8. நமக்கோ நிற்பாக்கியம். நேற்றும் மூன்றாம் நாளும் இவ்வளவு சந்தோஷம் இருந்ததில்லையே! இவ்வளவு உந்நதத் தேவர்களின் கையினின்று நம்மை இரட்சிப்பவனார்? வனாந்தரத்தில் எஜிப்த்து தேசம் முழுமையும் வாதித்த தேவர்கள் அவர்களே!

9. பிலிஸ்தியரே! தைரியங்கொண்டு ஆண்மையுள்ளவர்களாயிருங்கள்; எபி றேயர் உங்களுக்கு அடிமைகளா யிருந்ததுபோல் நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாயிராதேயுங்கள்; தைரியங் கொண்டு யுத்தம் பண்ணுங்கள்.

10. பிலிஸ்தியர் யுத்தம் பண்ணினார் கள்; இஸ்றாயேலர் தோர்வையடைந் தார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுந் தன் தன் கூடாரத்திற்கு ஓடிப் போனான். அப்போது சங்காரம் மிக பலத்ததாயிருந்தது; இஸ்றாயேலரில் முப்பதினாயிரங் காலாட்கள் மடிந் தார்கள்.

11. தேவனுடைய பெட்டகமும் பிடிபட்டப் போனது. ஏலியின் குமாரர் களாகிய ஒப்னியும், பினேசும் மாண் டார்கள்.

12. பெஞ்சமீன் கோத்திரத்தான் ஒருவன் கிழிந்த சட்டைகளை உடுத்தின வனாய்த் தலையில் புழுதி படர்ந்தவ னாய் அன்று தினமே சீலோவுக்கு ஓடி வந்தான்.

13. அவன் வருகையில் ஏலி ஆசனத் தில் உட்கார்ந்து வழியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தேவனுடைய பெட் டகத்தைப் பற்றி அவன் உள்ளம் அச்சங் கொண்டிருந்தது. அந்த மனிதன் பட்டணத்தில் நுழைந்த பின் சண்டை வர்த்தமானத்தைச் சொன்னான். பட்ட ணம் முழுதும் பிரலாபித்து அழுதது.

14. ஏலி பிரலாபச் சத்தத்தைக் கேட்டு, இப்பேர்ப்பட்ட கோஷ்டச் சத்தம் ஏனென்றான். அப்போது அந்த மனிதன் தீவிரித்து வந்து ஏலிக்குச் செய்தியைச் சொன்னான்.

15. ஏலிக்கு அப்போது தொண்ணூற் றெட்டு வயது; அவன் கண்கள் மங்கிப் போனதால் பார்க்கக்கூடாதவனாயிருந் தான்.

16. போரினின்று வந்தவன் நானே, இன்று படையினின்று ஓடி வந்தவன் நானே என்று அந்த மனிதன் ஏலிக்குச் சொன்னான். மகனே! என்ன நடந்தது என்று ஏலி அவனைக் கேட்டான்.

17. சேதி தெரிவிக்க வந்தவன் மறு மொழியாக: பிலிஸ்தியர் முன் இஸ்றா யேலர் ஓடிப்போனார்கள்; பிரசையில் மிகுந்த நஷ்டமானது; மேலும் உமது இரு குமாரர்களாகிய ஒப்னியும் பினேசும் மரித்தார்கள்; ஆண்டவருடைய பெட்டகம் பிடிபட்டுப் போயிற்று என்றான்.

18. தேவனுடைய பெட்டகமென் கிற பதத்தை அவன் சொன்ன மாத்திரத் தில் ஏலி ஆசனத்தினின்று கதவு அருகில் மல்லாக்க விழுந்து தலை உடைந்து செத் தான். இவன் முதிர்ந்த விருத்தாப்பியனா யிருந்தான்; இஸ்றாயேலருக்கு நாற்பது வருஷம் நியாயாதிபதியாய் இருந்தான்.

19. அவனுடைய மருமகளாகிய பினேசின் பெண்சாதி கர்ப்பிணியாயிருந் தாள்; பேறுகாலம் நெருங்கியிருந்தது; தேவனுடைய பெட்டகம் பிடிபட் டதையும் தன் மாமனாரும் புருஷனும் இறந்துபோனதையும் கேள்விப்பட்ட உடனே திடீரென்று அவளுக்கு வாதனை கள் உண்டாகக் குனிந்து பிரசவித்தாள்.

20. அவள் சாகுந் தருவாயில் இருக்கையிலே அவள் அண்டையிலிருந் தவர்கள்: பயப்படாதே, நீ ஒரு குமாரனைப் பெற்றாயென்று சொன் னார்கள்; அவள் அதை கவனிக்கவு மில்லை, மறு மொழி சொன்னதுமில்லை.

21. தேவனுடைய பெட்டகம் பிடி பட்டு அவள் மாமனாரும் புருஷனும் இறந்து போனபடியால் மகிமை இஸ்றா யேலரை விட்டு நீங்கினதென்று சொல்லிப் பிள்ளையை இகாபோத் என்று பெயரிட்டு அழைத்தாள்.

22. தேவனுடைய பெட்டகம் பிடிபட்டபடியால் மகிமை இஸ்றா யேலரை விட்டு நீங்கினதென்றுஞ் சொன்னாள்.