நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 04

பாராக்கைக் கொண்டு இஸ்ராயேலரை இரட்சித்தல்.

1. ஆவோத் மரணத்துக்குப்பின் இஸராயேல் மக்கள் கர்த்தர் சமுகத்தில் அக்கிரமங்களை மீண்டுஞ் செய்யத் தொடங்கினார்கள்.

2. ஆனதால் ஆசோர் பட்டணத்தில் ஆண்டு கொண்டிராநின்ற கானான் தேசத்தரசன் ஜாபின் என்பவனுடைய கைகளில் கர்த்தர் அவர்களை அளித்தார். அவன் படைத்தலை வன் சிசாராவென்பவன்; இவன் புறஜாதிக ளுடைய நகரமாகிய அரோசெத்தில் வாசஞ் செய்வான்.

3. இஸ்ராயேல் மக்கள் கர்த்தரிடத்தில் அபய சத்தமிட்டார்கள்; ஏனென்றால் தொள் ளாயிரம் வாள்பூட்டிய இரதங்கள் அவனிடமி ருந்தன. மேலும் இருபது வருஷகாலமாய் அவர்களை வெகுவாய் வாதித்து வந்தான்.

4. இலாப்பிதோத் மனைவியான தெபோராவென்ற தீர்க்கதரிசி ஒருவள் இருந்தாள். அவளே அக்காலத்தில் ஜனத்தை நடத்திவந் தாள்.

5. எப்பிராயீம் மலையில் ராமா பெத்தேல் என்ற ஊர்களுக்கு மத்தியில் அவள் பேரால் அழைக்கப்பட்ட பனைமரத்தடியில் உட்கார்ந்திருப்பாள். இஸ்ராயேல் மக்கள் தங்கள் சகல நியாயங்களையுந் தீர்த்துக்கொள்ள அவளிடம் போவார்கள்.

6. அவ்விடமிருந்துகொண்டு நேப்தளி யைச் சேர்ந்த கேதெஸ் ஊரானாகிய அபினோ யனின் குமாரன் பாராக்கை வரவழைத்துச் சொன்னதாவது. இஸ்ராயேலின் கடவுளான கர்த்தர் உனக்குக் கற்பிக்கிறது யாதெனில்: நீ போர் மலைக்கு நடத்து. நேப்தளி குமாரரும் சாபுலோன் குமாரருமாகிய பதினாயிரம் யுத்தவீரரை உன்னுடன் கூட்டிப்போ.

7. நாம் ஜாபின் படை தளர்க்கர்த்தனா கிய சிசாராவையும் அவன இரதங்களையும் அவனுடைய படைகளையுஞ் சிசோன் ஆற்றங்கரை யோரத்தில் கொண்டுவந்து சகலமும் உன் கையில் ஒப்புவிப்போம் என்கிறார், என்றாள்.

8. அப்போது பாராக்கென்பவன்: நீயும் என்னோடு வந்தால் நான் போகிறேன், என்னோடு வர உனக்கு மனமில்லையோ நானும் போகிறதில்லை என்றான்.

9. அவளோவென்றால் அவனை நோக்கி: நான் உன்னோடு வரத் தடையில்லை: ஆனால் அப்போது ஜெயங்கொண்ட மேன்மை உனக்கு வராது. ஏனென்றால் சிசாராவென் பவன் ஒரு பெண்பிள்ளை கையால் காட்டிக் கொடுக்கப்படுவான் என்றாள். பிறகு தெபோ ரா எழுந்து பாராக்கோடு கேதெஸ் ஊர் சென்றாள்.

10. அவனோ சபுலோனியரையும் நெப்தளி யரையும் வரவழைத்துப் பதினாயிரம் யுத்தவீ ரரோடு தெபோராவுந் தன்னைத் துணை கொள்ளச் சொன்னாள்.

11. சினேயனான ஆபேர் வெகுகாலத் துக்கு முன்னரே மோயீசன் உறவினனாகிய ஓபாபின் குமாரரான மற்றச் சினேயரை விட்டு நீங்கி சென்னிம் கணவாய் வரைக்குந் தன் கூடாரங்களை அடித்து கேதெஸ் ஊருக்குச் சமீபத்திலிருந்தான்.

12. அபினோயனின் குமாரன் பாராக்குத் தாபோர் ஏறினானென்று சிசாராவுக்கு அறிக் கையிடப்பட்டது,

13. அவன் வாள் பூட்டிய தொள்ளாயிரம் இரதங்களையும், புறஜாதிகளுடைய அரோ செத் பட்டணத்தின் சகல படைகளையுந் திரட்டிக்கொண்டு சிசோன் ஆற்றோரத்தில் வந்தான்.

14. அப்போது தெபோரா பாராக்கை நோக்கி: எழுந்திரு, இன்றே சிசாராவைக் கர்த்தர் உன்கைகளில் அளித்தார்; அவரே உனக்கு வழிகாண்பிக்கிறார் என்றாள். ஆகையால் பாராக்கும் அவனோடிருந்த பதினாயிரம் யுத் தவீரருந் தாபோர் மலையிலிருந்து இறங்கி னார்கள்.

15. சிசாராவைக் கர்த்தர் திகிலுறச் சகல இரதங்களையுஞ் சர்வ சேனைகளையும் பாராக்குக்கு முன்பாக சிசாரா இரதத்தி னின்று குதித்து ஓட்டம்பிடித்தான்.

16. பாராக்கு முறிந்தோடும் இரதங்களை யும் சேனைகளையும் அரோசெத்வரைக்கும் பின்தொடரவே சத்துராதிகளுடைய சேனை களெல்லாம் நிர்மூலமாயின.

17. ஓடின சிசாராவும் சினேயனான ஆபே ரின் மனைவி சாகேல் என்பவளுடைய கூடா ரத்திற்கு ஓடி வந்தான். ஏனெனில் ஆசோர் அரசனாகிய ஜாபினும் சினேயனான ஆபே ருந் தற்காலஞ் சமதானமாயிருந்தார்கள்.

18. ஆகையால் சாகேல் வெளியில் புறப் பட்டுச் சிசாராவைக் கண்டு அவனை நோக்கி: என் ஆண்டவனே! என் கூடாரத்துக்குள் வாரும், உட்பிரவேசியும், பயப்படாதேயும் என்றாள். அவன் கூடாரத்துக்குள் நுழைந் தான், அளும் போர்வையால் அவனை மூடினாள்.

19. அவன் அவளை நோக்கி: எனக்கு மெத் தத் தாகமாயிருக்கிறது, கொஞ்சந் தண்ணீர் கொடுவென்றான். அவள் பால் துருத்தியைத் திறந்து அவனக்குக் குடிக்கக் கொடுத்துத் திரும்பவும் அவனை மூடினாள்.

20. சிசாரா அவளைநோக்கி: நீ கூடார வாசலில் நின்றுகொண்டு, இவ்விடம் ஆரா வது இருக்கிறார்களாவென்று எவனாவது கேட்டால் ஒருவரும் இல்லையயன்று மறு உத்தாரஞ் சொல்லென்றான்.

21. ஆபேரின் மனைவி சாகேல் கூடாரத்து ஒரு ஆணியையும் ஒரு சுத்தியையும் எடுத்துக் கொண்டு சப்தப்படாமல் மெள்ள நழைந்து சிசாரா நெறியில் ஆணியைச் சுத்தியால் அடித்துப்போட்டாள்.அது உருவிப்போய் தரையிலே புதைந்தது. அவன் நித்திரை மரண நித்திரையாய் முடிந்தே போயிற்று.

22. சிசாராவைப் பின் தொடர்ந்துவந்த பாராக் அந்நேரத்தில் வந்தான். சாகேல் அவனுக்கு எதிர்கொண்டு போய்: வாரும், நீர் தேடுகிற மனிதனை உமக்குக் காண்பிக்கிறேன் என்றாள். அவன் உட்பிரவேசித்து மரித்துக் கிடக்கிற சிசாராவையும், அவன் நெறியிலடிக்கப்பட்ட ஆணியையுங் கண்டான்.

23. இப்படி கடவுள் அநநாளிலே இஸ்ரா யேல் மக்களுக்கு முன்பாகக் கானான் அரசனா கிய ஜாபினைத் தாழ்த்தினார்.

14. அவர்களோ நாளுக்குநாள் பலவந்த ராகி கானான் அரசனான ஜாபினை முற்றும் நிர்மூலம் பண்ணும் வரைக்கும் அவன்மேல் பலத்துக்கொண்டிருந்தார்கள்.