சொப்போனியாஸ் ஆகமம் - அதிகாரம் - 03

கிறீஸ்துவின் வருகை

1. சினங்கொளுத்தும் பட்டணமே! மீட்கப்பட்டும் புறாவைப்போல் (பேதமையுடைய எருசலேமே! உனக்கு) ஐயோ கேடாம்.

2. அது வார்த்தைதனைக் கேட்கவுமில்லை, போதனையைக் கைக்கொண்டதுமில்லை; ஆண்டவர்பால் நம்பிக்கை வைத்ததுமில்லை, தன் தேவனை அணுகினதுமில்லை.

3. அதின் நடுவுற்ற மன்னர்கள் கர்ச்சனை செய்யுஞ் சிம்மங்கள் போலாம்; நீதியதிபரோ மறுதினத்திற்கு மீதி வையாது மாலைப் பொழுதே (பட் சித்துவிடும்) கரடிகட்கு ஈடாம்.

4. அதின் தீர்க்கவசனர் மூடரும் வஞ்சகருமேயாம்; அதின் குருக்களோ தேவஸ்தானத்தைப் பங்கப்படுத்தி, வேதத்துக்கு விருத்துவ நடவடிக்கையில் ஒழுகினர். 

5. அதின் கண்ணிலங்கும் நீதிபிரான் பட்சபாதஞ் செய்யமாட்டார்; வெள் ளெனத் தம் தீர்வைதனைப் பிரகடனஞ் செய்வர்; அஃதும் ஒளிமறைவு கொள்ளா; ஆயினுஞ் சீர்குலைந்த (இப்பிரசையானது) தன் வெட்கக்கேட்டை நினைத் திலது.

6. (முன்னம் உனக்கு விருத்துவமாயிருந்த) அநந்த சனங்களை யாம் நாசஞ் செய்தோம்; அவர்கள் கோபுரங்களைத் தகர்த்தோம்; அவர்கள் தடங்களை வழிகடப்பனின்றி வெறுமனே ஆக்கி னோம்; அவர்கள் நகர்களும் மீதியாய் நிற்பானின்றி, வசிப்பானின்றி பாழா யின.

7. இவைகட்குப் பின்னரேனும் நமக்கு அஞ்சி நடப்பாய்; அறிக்கைகளை அங்கீகரிப்பாய் எனவும், ஏது காரணார்த் தமாய் (இதுகாறும்) தண்டித்தோமோ, அந்தப் பாவங்கள் பொருட்டு உன் பட்டம் அழிவு கொள்ளாது எனவும் நமக்குள் எண்ணமிட்டிருந்தோம்; ஆனால் முற்றும் மாறாக அவர்கள் பொள்ளெனக் கிளம்பித்தம் சகல துர் எண்ணங்கள் சார்பாகவே சீர்கேடா யினர்.

8. ஆதலின் எதிர்காலத்திய நமது உயிர்த்தானம் வரையில் (சற்று) காத்திரு; ஏனெனில், சனங்களை ஒன்றுகூட்டவும், சகல இராச்சியங்களையும் ஒருங்கு சேர்க் கவுங் கடைப்பாடுடைத்தா (யிருக்கின்றோம்;) அப்போது அவர்கள்மேல் நமது சீற்றத்தையும், நமது முழு கோபாக்கிரத் தையுஞ் செலுத்துவோம்; நமது வைராக் கியமதின் அக்கினிக்குச் சர்வபுவனமும் பட்சணமாகும்.

9. அப்போது சகலரும் ஆண்டவரின் நாம கரணத்தைத் தொழும்பொருட்டும், ஒரே (மனத்தினராய்) நுகத்தின் கீழ் அவரைச் சேவிக்கவும் பிரசைகளின் அதரங்களைச் சுத்திகரிப்போம்.

10. எத்யோப்பியா நதிகள் அப்புறத்தியவர்கள் அங்கிருந்து நம்மிடம் பிரார்த்தனை (செய்ய வருவார்கள்;) நமது (பிரசையில் எங்கும்) சிதறுண்ட மக்கள் நமக்குக் காணிக்கைகள் கொணர்ந்து வருவர்.

11. அக்காலையில் நமது வேதத்தைத் திரஸ்கரஞ் செய்து (கட்டிக் கொண்ட) உங்களது எல்லாத் துஷ்கருமங்களுக்காக நீங்கள் கலக்கமுற மாட்டீர்கள்; ஏனெனில், உங்கள் அகங்காரத்தைப் (பிரவர்த்தனஞ் செய்யப்) போற்றிப் புகழ் கூறும் (வேதபாரகரை) உங்கள நடுவினின்று அகற்றுவோம்; நமது பரிசுத்த பர்வதத்தின் பொருட்டு இன பிரக்கியாதி கொள்ளவும் இடங்கொடாது.

12. ஏழையும் அகதியுமான பிர சையை உங்கள் நடுவில் விடுவோம்; அதுவும் ஆண்டவரது நாமகரணத்து மீது நம்பிக்கை கொள்ளும்.

13. இஸ்றாயேலின் மீதியான பேர்கள் அகிர்த்தியங்கள் செய்யவறியார்கள்; படிறு சொல்லமாட்டார்கள்; வஞ்சக நாவென்பது அவர்கள் வாயில் கிடைக்கப் பெறாது; ஏனெனில், அவர்கள் (ஆண்டவரினாய கோல் நிழலில்) இடறு செய்வானின்றி (சுகமே) மேய்வார்கள், இளைப்பாறுவார்கள்.

14. (அப்போது அவர்களைப் பார்த்து:) சீயோன் புத்திரியே துத்தியம் பாடு; இஸ்றாயேலே அக்களிப்பு கொள் வாயாக; எருசலேம் புத்திரியே இருதய கதமாய்ப் பூரிப்பு கொண்டு நிர்த்தனஞ் செய்வையாக.

15. (ஏனெனில்,) ஆண்டவர் உனது தீர்ப்புத் தண்டனைதனை) இரத்து செய்து, உன் சத்துருக்களை அகற்றி விட்டனர்; இஸ்றாயேல் வேந்தராகிய ஆண்டவர் உன் நடு(வுற்றிருத்தலின்) நீ இனி தின்மைக்கு அஞ்சமாட்டாய் (என் பார்கள்.)

16. அந்நாளில் எருசலேமை நோக்கி: சீயோனே ஐயமுறாதே, உன் கரங்கள் சோர்வடைய வேண்டுவதில்லை.

17. உன் தேவனாகிய ஆண்டவர் வல்லுனராய் உன் நடு வீற்றிருப்பர், அவரே உன்னை இரட்சிப்பர்; உன்னைக் குறித்துச் சந்தோஷ பூரிப்புக் கொள்வர்; தமது அன்பில் நிலைத்திருப்பர், உன்னைக் குறித்துப் புகழ்கூறி மகிழ்வர் (என்பார்கள்).

18. வேதத்தை நிராகரித்த வீரர்கள் உன்னிடத்தியவர்களேயாதலின், அவர் கள் நிமித்தஞ் சங்கோசப்படாவண்ணம் அவர்களையும் ஒன்றுசேர்ப்போம்.

19. அக்காலையில் உன்னை மன மடியச் செய்தபேர்யாவரையுஞ் சங்கரிப் போம்; கால்தாங்கி நடப்பானை இரட்சிப்போம்; புறம்பாக்கப்பட்டாளைத் தருவிப்போம்; அவர்கள் அவக்கியாதியடைந்த தேசமெங்ஙணும் அவர்கள் பேருங் கீர்த்தியுமாயிருக்கச் செய்வோம்.

20. (ஆம் நம்மிடத்து) உங்களை யாம் வருவிக்கும் நாளில், உங்களை நாம் ஒன்றுகூட்டுங் காலத்தில், உங்கள் அடிமைத்தனத்தை உங்கள் கண் முன்னரே யாம் நிஷ்கரிக்கும் அப்போது உங்களை யாம் பிரபஞ்ச சமஸ்த பிரசைகள் முன்பாக பிரக்கியாதியிலும் புகழ்ச்சியிலும் ஸ்தாபகஞ் செய்வோம் என்கிறார் ஆண்டவர்.சொப்போனியாஸ் ஆகமம் முற்றிற்று.