அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 02

தாவீது யூதாவின் அரசனாக அபிஷேகம் பெற்றது.

1. இவற்றின் பின்னரோ தாவீது மீண்டுங் கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டு: நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிற்குப் போயிருக்கலாமோ என விசாரிக்க: கர்த்தர்: போவென்றார்.  எவ்விடத்திற்குப் போகலாமென்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்பிரோ னுக்கு என்றருளிச் செய்தார்.

2. அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய ழெஸ்றாயேல் ஊரா ளான அக்கினோவாமோடும், கர்மேலிய நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயி லோடும் கூடப் புறப்பட்டுப் போனான்.

3. அல்லாமலுந் தாவீது தன்னுட னிருந்த புருஷரையும், அவரவர் குடும்பத் தையுங் கூட்டிக் கொண்டு போனான்.  அவர்கள் எப்பிரோனின் பட்டணங் களிலே குடியேறினார்கள்.

4. அப்போது யூதாவின் புருஷர் வந்து அங்கு தாவீதை யூதா வமிசத்தாரின் மேல் இராசாவாக அபிஷேகம் பண்ணி னார்கள்.  அப்பால் கலாத் தேசத்து ழாபேஸ் மனிதர் சவுலை அடக்கம் பண்ணினாரென்று தாவீதுக்கு அறிவிக்கப் பட்டது.

5. தாவீது கலாத் தேசத்து ழாபேஸ் புருஷரிடந் தூதாட்களை அனுப்பி: உங்கள் ஆண்டவனான சவுலின்மீது நீங்கள் இந்தத் தயவைச் செய்து அவரை  அடக்கம் பண்ணினபடியால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

6. இக்ஷணமே கர்த்தர் உங்களுககுக் கிருபையையும், உண்மையையும் பிர கிருதியாய்த் தந்தருளுவாரென்பது திண் ணம்.  அன்றியும் நீங்கள் இந்தக் காரியத் தைச் செய்தீர்களாகையால் நானும் இந்த நன்மையைப் பற்றி நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துகின்றேன்.

7. உங்கள் கரங்கள் திடப்படவும் நீங்கள் சத்துவகப் புத்திரராயிருக்கவுங் கடவீர்களாக.  எனெனில் உங்களாண் டவனான சவுல் மரணித்திருந்தாலும், யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் மேல் இராசாவாக அபிஷேகம் பண்ணி னார்கள் என்பதைச் சொல்லச் சொன் னான்.

8. சவுலின் தளக்கர்த்தனாகிய நேரின் குமாரனான அப்நேரோவெனில் சவுலின் புத்திரனான இஸ்போசேத் என்பவனைப் பாளையஞ் சுற்றிலும் அழைத்துக் கொண்டுபோய்,

9. அவனைக் கலாத்தின் மேலும், ஜெசுரியின் மேலும், ழெஸ்றாயேல் மேலும், எப்பிராயீமின் மேலும், பெஞ்சமீனின்மேலும், சமஸ்த இஸ்றா யேலின் மேலும் இராசாவாக ஏற்படுத் தினான்.

10. சவுலின் புத்திரனான இஸ்போ சேத் இஸ்றாயேலின்மேல் அரசாளத் துவக்கினபோது நாற்பது வயதாயிருந் தான்; அவன் இரண்டு வருஷம் இராச்சிய பாரம் பண்ணினான்.  யூதா கோத்திரத் தார்மட்டும் தாவீதைப் பின்சென்றார் கள்.

11. தாவீது யூதா கோத்திரத்தின்மேல் இராசாவாயிருந்து எப்பிரோனில் வாசம் பண்ணின நாட்களின் இலக்கம் ஏழு வருஷம் ஆறு மாதமாம்.

12. நேரின் குமாரனான அப்நேரும், சவுலின் புதல்வனாகிய இஸ்போசேத் துடைய சேவகர்களும் பாளையத் தினின்று காபாவோனுக்குப் புறப்பட் டிருக்கச் செய்தே,

13. சார்லியாளின் மகன் யோவாபும், தாவீதினுடைய சேவகர்களும் புறப்பட் டுப் போய், காபாவோனின் தடாகத் தண்டையில் அவர்களுக்கு எதிர்ப்பட் டார்கள்.  இரு திறத்தாரும் கூடின போது தடாகத்துக்கு அந்தப் புறத்தில் அவர் களும், தடாகத்துக்கு இந்தப் புறத்தில் இவர்களும் இறங்கி உட்கார்ந்தார்கள்.

14 அப்பொழுது அப்நேர் யோ வாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாக (சிலம்பம்) பண்ணினால் நலமா யிருக்குமன்றோ வென்றான். அதற்கு யோவாப்: சரிதானென்று சம்மதிக்க,

15. சவுலின் குமாரனாகிய இஸ்போ சேத்துடைய பக்கத்தில் நின்று பெஞ்ச மீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும் தாவீதுடைய வாலிபரிலே பன்னிரண்டு பேரும் எழுந்து ஒரு பக்கமாய்ப் போய்,

16. ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினால் குத்த அவர்க ளெல்லாரும் விழுந்து செத்தார்கள்.  ஆனபடியால் அந்த ஸ்தலம் பலசாலிக ளுடைய ஸ்தலமென்று அழைக்கப் பட்டது.

17. அன்றையத்தினம் மிகவுங் கடின மான யுத்தமாகி, அப்நேரும் இஸ்றாயேல் புருஷரும் தாவீதுடைய சேவகர்களால் முறியடிக்கப்பட்டார்கள்.

18. அங்கேயோவெனில் யோவாப், அபிஸாயி, அசாயேல் என்னும் சார்வியா ளின் மக்கள் மூவருமிருந்தார்கள்.  அசா யேலோ வெளிக்காடுகளிலிருக்கிற கலைமான்களிலொன்றைப் போல் மிக வேகமாய் ஓடுகிறவனாயிருப்பான்.

19. அவன் அப்நேரை பின் தொடர்ந்து வலது புறத்திலாகிலும் இடது புறத்திலென்கிலும் விலகாமலே துடர்ந்துகொண்டு போனான்.

20. அப்நேர் திரும்பிப் பார்த்து: நீ அசாயேல்தானோ? என, அவன் நான் தானென்றான்.

21. அப்நேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காவது இடது பக்கத்திற் காவது விலகி வாலிபரிலொருவனைப் பிடித்து அவனைக் கொள்ளையிடு, என்றான்; அசாயேலோவெனில் அவனை விட்டுவிட மனமொப்பாமல் அவனை விடாதே தொடர்ந்தனன்.

22. அப்நேர் மீண்டும் அசாயேலைப் பார்த்து: என்னைப் பின்செல்லாதே.  விலகு; இல்லாவிடில் நான் உன்னைத் தரையோடு குத்திப்போடுவேன்; அப் புறம் நான் உன் சகோதரனாகிய யோவா பின் முகத்தில் விழிப்பதெப்படி? என் றான்.

23. அவன் அந்த வார்த்தையை அசட்டை பண்ணி விலகாதிருந்ததைக் கண்டு, அப்நேர் தன்னீட்டியைத் திருப்பி அவனை அடிவயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது. அவன் அங்கேதானே விழுந்து செத்தான்.  அசாயேல் விழுந்து செத்த ஸ்தலத்தில் வழியாய் எவர்கள் வருவாரோ அவர்கள் எல்லோரும் தரித்து நிற்கிறது வழக்கம்.

24. பின்னும் யோவாபும், அபிசாயும் ஓடிபோகிற அப்நேரைத் துரத்திக் கொண்டிருக்çயில் சூரியன் அஸ்தமித் தமையால் அவர்ள் காபாவோன் என்னும் வனாந்தர வழிக்கு எதிரேயுள்ள ஜலதாரைக் குன்று மட்டும் வந்தார்கள்.

25. அப்போது பெஞ்சமீன் புத்திரர் அப்நேரிடத்தில் வந்து ஒரே அணியாகக் கூட்டிக் கொண்டு ஒரு திடரின் உச்சி யிலே நின்று கொண்டார்கள்.

26. அப்போது அப்நேர் யோவாபைக் கூப்பிட்டு: உம்முடைய கூரிய வாளானது சங்காரம் பண்ணி ஓய்ந்திருக்க மாட் டாதோ என்ன?  சாகத் துணிந்தவரோடு யுத்தம் பண்ணினால் கசப்புண்டாகு மென்று நீர் அறியீரோ?  சகோதரர்களை விட்டு விட்டுப் பின்வாங்கவேண்டு மென்று நீர் சனங்களுக்கு எந்தமட்டுஞ் சொல்லாதிருப்பீர் என்றான். 

27. அதற்கு யோவாப்: கர்த்தரின் ஜீவனாணை நீர் இவ்விதமாய்ப் பேசி யிருந்தீரானால் இன்று காலமே ஜனங்கள் தங்கள் சகேதரரைப் பின்தொடராது திரும்பி விட்டிருப்பார்கள் அல்லோ வென்று மறுமொழியாகச் சொல்லி,

28. யோவாப் எக்காளமூதினான்; உடனே சேனையனைத்தும் அப்பால் இஸ்றாயேலைப் பின்றொடராமலும் யுத்தம் பண்ணாமலும் நின்றுவிட்டது.

29. அப்நேரும் அவன் வீரருமோ வெனில் அவ்விரவு முழுதுங் காட்டு வழி யாய்ச் சென்று யோர்தானையுங் கடந்து பேத்தொரோனையும் முழுதுந் தாண்டிப் பாளையத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

30. யோவாபோ அப்நேரை விட்டுத் திரும்பினவனாய்ச் சனங்களை எல்லாம் வரச் செய்தான்.  அசாயேலைத் தவிர தாவீதின் சேவகரிலே பத்தொன்பதுபேர் இல்லாதிருந்தார்கள்.

31. தாவீதுடைய சேவகரோவெனில் பெஞ்சமீனிலும், அப்நேரோடிருந்த மனுஷரிலும் முந்நூற்றருபது வேரைச் சங்கரித்திருந்தார்கள்.

32. பின்பு அசாயேலின் உடலை எடுத்து வந்து பெத்லேமிலுள்ள அவனு டைய கல்லறையிலே அவனை அடக்கஞ் செய்தார்கள்; அப்பால் யோவாபும் அவனுடனிருந்த மனிதரும் இரா முழுவதும் நடந்து காலை விடியும்போது எப்ரோனிலே போய்ச் சேர்ந்தார்கள்.