ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 02

மோவாபின் மேலும், யூதாவின்மேலும், இஸ்றாயேலின்மேலும் வருந் தண்டனைகள், - தேவன் அவர்களுடைய நன்றிகெட்ட தனத்தைக் குறித்து முறையிடுவது.

1. இதோ ஆண்டவர் சொல்வது: மோவாபின் மூன்று நான்கு அக்கிரமங்களை முன்னிட்டு அதின் (அபராதத்தை) மன்னிக்கமாட்டோம்; அது இதுமேயா அரசனின் எலும்புகளைச் சாம்பலாகுந் தனையுஞ் சுட்டெரித்து (பழி தீர்த்துக் கொண்டமையால்,)

* 1-ம் வசனம். இந்த அதிகாரத்தில் யோவாபுக்கும், யூதாவுக்கும், இஸ்றாயேலுக்கும் விரோதமாய், அவர்கள் அநியாயம், நிஷ்டூரம், விக்கிரகத் தொழுகை முதலிய பாபாக்கிரமங்களுக்காக ஆண்டவர் பழிவாங்குவதைக் குறித்தும், யூதருக்கு அவர் செய்த நன்மைகளைக் குறித்தும், அவர்கள் நன்றிகெட்டதனத்துககும் அவிசுவாசத்துக்கும் அவர் விதிக்குந் தண்டனையைக் குறித்தும் பேசப்படுகிறது.

2. நாம் மோவாபில் நெருப்பு வைப்போம்; அது கரியோத் மாளிகைகளை நீறாக்கிவிடும்; மோவாப் (சத்துருக்களின் யுத்தாயுத) சப்தத்தின் நடுவிலும், எக்காள கோசனை நடுவிலும் மாண்டு போம்.

3. அதின் நடுவினின்று அதிபதியைச் சிதைத்துவிடுவோம்; அவனோடு அவன் இராச கூட்டத்தவரையும் மாய்த்துவிடுவோம், (அப்படியேயாகும்; ஏனெனில்,) ஆண்டவரே செப்பற்றனர்.

4. இதோ ஆண்டவர் சொல்வது: யூதாவின் மூன்று நான்கு பாதகங்களின் பொருட்டு, அதுக்குப் பொறுதி தரவறி யோம்; ஏனெனில், அவர்களின் பிதாக் கள் பின்பற்றிய விக்கிரகங்கள் அவர் களை மோசஞ் செய்ததால், அவர்கள் ஆண்டவருடைய வேதத்தைப் பிறக் கணித்தனர்கள்; அவர் கட்டளைகளை யும் அநுஷ்டித்தார்களில்லை.

5. ஆனதுபற்றி யாம் யூதாவில் தீ வைக்க, அது எருசலேம் கட்டடங்களைப் பஸ்மீகரித்துவிடும்.

6. பின்னும் ஆண்டவர் சொல்வதே தெனில்: இஸ்றாயேலின் மூன்று நான்கு தோஷங்களைப் பற்றி நாம் அதை மன் னிக்க மாட்டோம்; ஏனெனில், அதன் குடிகள் நீதிமானைப் பணத்துக்கு விற்றார்கள்; எளியனையும் ஒரு சதை பாதரட்சைக்கு மாறினார்கள்.

7. அகதிகளின் சிரத்தை அவர்கள் தரையோடு மோதுகின்றார்கள்; சத்துவ மற்றோருடைய மார்க்கமதனைக் கெடுத்து விடுகின்றனர்கள்; நமது பரி சுத்த நாமகரணத்துக்குப் பங்கமுண்டாகப் பிள்ளையும் பிதாவுமாய் ஒரு பெண்ணைக் கூடுகின்றனர்கள்.

8. (எளியர்) அடகுவைத்த வஸ்திரங் கள்மீது உளுக்கார்ந்து, சகலவித பீடங்கள் முன் விருந்தோம்பல் நடத்தி தங்கள் தேவனின் இல்லத்தில் (தாங்கள் அநியாயமாய்த்) தண்டித்த அவர்க ளுடைய இரசத்தைப் பானஞ் செய் கின்றனர்.

9. நாமோ அவர்கள்முன், உயரத்தில் கேதுரு விருட்சத்தின் உயரமுடைத் தவரும், கருவாலி மரத்தியதுபோல் பல முள்ளவருமான அமோறைய சனத்தை அதின் கிளைகளிலிருந்த கனிகளையும், அதின் கீழிருந்த வேர்களையும் அழித் தோம்.

10. எஜிப்த்து நாட்டினின்று உங்க ளைப் புறப்படச் செய்து, அமோறையர் நாட்டை நீங்கள் ஸ்வயவரஞ் செய்து கொள்ள, உங்களை நாற்பது வருடங் களாக வனாந்தரத்தில் கூட்டி வந்து,

11. உங்கள் புத்திரரில் நமக்குத் தீர்க்க வசனரையும், உங்கள் வாலிபரில் நசாரே யரையந் தெரிந்துகொண்டது நாமே; இஸ்றாயேல் மக்கள்காள்! நாம் செப்பு வது வாஸ்தவமன்றோ எனக் கேட்கிறார் ஆண்டவர்.

12. நீங்களோ நசாரேயருக்கு இரச பானம் அளித்தீர்கள்; தீர்க்கத்தரிசி யரைப் பார்த்து: காட்சி கூறல் வேண் டாம் என ஆக்ஞாபித்தீர்கள்.

* 12-ம் வசனம். நசாரேயர்: தேவ வசீகிருதஞ் செய்யப்பட்டவர்களாவர்.

13. ஆதலால் நாம் (சினவாளனாய்) பெரும் வைக்கோல் பொதி சுமத்திய வண்டியின் உருளை பாரத்தால் கிறீச் சிடுவதுபோல் உங்கள் மீது பெருஞ் சப்த மிடுவோம்.

14. (அப்போது) தீவிரமுள்ளவனும் ஓடவறியான்; வீரன் ஐயமடையான்; பலாஷ்டிகன் தன் உயிரைக் காக்க வறியான்.

15. கோதண்டம் பிடிப்பான் (எதிர் த்து) நிற்கவுமாட்டான்; ஓட்டத்தில் தீவிரமுள்ளோன் தப்பித்துக் கொள்ளவு மாட்டான்; குதிரை வீரன் தன் பிராண னைக் காக்கவுமாட்டான்.

16. வீர பராக்கிரமசாலிகளில் திடகாத் திரமுள்ளவனும் அந்நாளில் நிருவாணியாய் ஓடுவன் என்கிறார் ஆண்டவர்.