யோவேல் ஆகமம் - அதிகாரம் - 02

வரப்போகிற பொல்லாப்புகள் மீண்டும் விவரிக்கப்படுகின்றன, - மனந்திரும்புதலே அவசியம், - கடவுளை நம்பி வருகிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

1. சியோன்மீது எக்காளம் ஊதுங்கள்; நமது பரிசுத்த பர்வதத்தினின்று கூக்குரலிடுங்கள்; தேச வாசிகளெல்லோரும் மெய்கலங்கி நிற்கக்கடவர்; ஏனெனில், ஆண்டவருடைய (சங்கார) நாள் வரப்போகிறது, நெருங்கியும் விட்டது.

2. அது இருளும், அந்தகாரமும் அடர்ந்த நாள்; கார்முகிலும், சண்டமாருதமுஞ் சூழ்ந்த நாள்; அருணோதய வெளிச்சம் ஒரு கணப்பொழுதில் பர்வதங்களெங்கணும் வியாபிப்பதுபோல், ஞக்துவமுடைய திரண்டதோர் சனம் (யூதாவெங்கும் பரவிவிடும்.) ஆதி தொட்டு இத்தன்மையது நடைபெற்றதுமில்லை, பின் தலைமுறை காலங்களில் நிகழப் போகிறதுமில்லை.

3. (கல்தேயர் எனப்பட்ட விட்டில் கூட்டமான) அது தனக்கு எதிர்ப்பட்ட வைகளுக்கு விழுங்கும் நெருப்பு போலும், தனக்குப் பின்னாகியவை களுக்குச் சுத்தமாய்த் துடைத்துவிடும் அக்கினி போலவுமிருக்கும்; அதின் வரு கைக்கு முன் சிங்கார வனம் போன் றிருந்த வெளித் தோட்டம் (சென்ற) பின் வனாந்தரப் பாழ்நிலம் போலிருக்கும்; அதுக்கு ஒன்றேனுந் தப்பித்துக்கொள்ள வறியாது.

4. பார்வைக்கு அவைகள் (இராணுவ) அசுவங்கள்போலாம்; குதிரைப் படை எங்ஙனமோ, அவைகள் அங்ஙனம் ஓடவன.

5. (யுத்த முகத்திய) இரதங்களின் சப்தத்துக்கொப்பாகவும், காய்ந்த சருகு களை விழுங்கும் அக்கினியின் இரைச்சல் போலவும் (பெருங்கோஷத்தோடு) பர்வத சிகரங்கள்மீது அவைகள் தாவிக் குதிப்பன; சமருக்கு அணிவகுக்கப்பட்ட வலுவுடைய சேனைபோல் முன் ஏறுவன.

6. அவைகள் முன் பிரசைகள் விடவிடத்துப் போவார்கள். அவர்கள் முகம் (பயப்பிராந்தியால்) கருமை தட்டிப்போம்.

7. அவைகள் பலாஷ்டிகரைப்போல் ஓடக்கடவன; படைவீரரைப் போல் சுவற்றின்மீது ஏறுவன; தம் பாதை வில காது வரிசை தீர்ந்து நடப்பன.

8. தன் கூட்டாளிக்கு இடஞ்சலின்றி, ஒவ்வொன்றுந் தன் இடம் பிசகாது நடக் கும்; ஓர் பலகணி வழியாய் வீழ்ந்தாலுங் காயப்படாமலே போகும்.

9. அவைகள் பட்டணம் புகுந்து மதிள்களூடே ஓடுவன; வீடுகளின் மீதேறி, கள்வனைப் போல் சாளரத்து வாயிலாய் நுழைவன.

10. அவைகள்முன் பூமி விடவிடத் துப் போம்; வானமண்டலங்கள் அதிர்ச்சி கொள்வன; சந்திர சூரியனும் புகை படர்ந்திருப்பன; சந்திர சூரியனும் புகை படர்ந்திருப்பன; நட்சத்திரங்கள் பிர காசம் மழுங்கி நிற்பன.

* 1-10-ம் வசனம். தீர்க்கத்தரிசியர் ஆண்டவர் அண்டைக்கு ஏற்படுத்திய மகா பயங்கரமுள்ள நாள் சமீபித்திருக்கிறதாகவும், திரண்டதோர் சேனை பயிரை அழிக்கும் விட்டில்கள், பச்சைப் புழுக்கள், கம்பளிப் பூச்சிகளைப்போல் யூதா நாட்டில் பரவி அதை நாசப்படுத்துமெனவுங் கூறி, இந்த ஜெந்துக்களைக் குறித்துப் பேசுவதுபோல கல்தேயரைக் குறித்து உவமை அலங்காரமாய்ப் பேசி வருகின்றனர்.

11. ஆண்டவர் தம் படை புறப்படு வதுக்கு முன்தானே, அது அனந்த பாளை யம் இறங்கிய சேனை கொண்டது என வும், வல்லபம் பொருந்தியது எனவும், தம் கட்டளையை நிறைவேற்ற கடைப் பாடுடையதென அறிக்கை செய்கின் றனர்; ஏனெனில், ஆண்டவருடைய நாள் மகா பெரிதும் மிகவும் பயங்கரத்துக்குரி யதுமாய் இருக்கின்றது; அதின் கொடூரத் தைத் தாங்கி நிற்பவன் யார்?

12. ஆதலால் இப்போது அழுகையாலும், பிரலாபத்தாலும் உங்கள் முழு இருதயத்தோடு நம்மிடந் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்.

13. உங்கள் வஸ்திரங்களை (மாத்திரம்) அல்ல; உங்கள் இருதயங்களையும் (மன ஸ்தாபத்தால்) கிழித்து, உங்கள் தேவனாகிய ஆண்டவரிடந் திரும்புங்கள்; ஏனெனில், அவர் நல்லவர், இரக்கமுள்ளவர், பொறுமையுள்ளவர், மிகுந்த தயையுடையவர், தீமை மீது பச்சாத்தாபங் கொள்பவர்.

* 13-ம் வசனம். தீமைமீது பச்சாத்தாபங் கொள்பவர்: தம் பிரசைக்கு விதித்த தண்டனை மீது பரிதாபங் கொள்பவர் எனப் பொருட்படும்.

14. அவர் சிலது விசை தம் சித்தத்தை மாற்றி, (உங்கள் பாபங்களை) மன்னித்து, உங்கள் தேவனாகிய ஆண்டவருக்கு (முன்போல்) அப்ப இரச நிவேதனங்கள் செய்யும்படியான விதமாய்ப் பின்பு தம் ஆசியைத் தரக்கூடும்; (அவர் மனோ அபீஷ்டத்தை) அறிந்தவன் யார்?

15. (ஆதலின்) சீயோன்மீது எக்காளம் ஊதுங்கள்; பரிசுத்த உபவாசத்தை ஏற்படுத்துங்கள், சபை கூட்டுங்கள்.

16. பிரசையைத் தருவித்து, தன்னைச் சுத்திகரிக்க ஆக்கியாபியுங்கள்; வயோதிபரைச் சேருங்கள்; பிள்ளைகளையும், கொங்கைதனில் பாலருந்துங் குழவிகளையுங் கூட்டுங்கள்; (புது) மணவாளன் தன் சயன அறையினின்றும், மணாளியானவள் தன் கல்யாண மஞ்சத்தை விட்டும் புறப்படக்கடவார்கள்.

17. ஆண்டவருடைய அர்ச்சகராகிய குருப்பிரசாதிகள் (தேவாலய) முன் மண்டபத்திற்கும், பீடத்திற்கும் நடுவில் நின்று கண்ணீருதிர்த்து: ஆண்டவரே! பொறுத்தருளும், உமது பிரசைக்குப் பொறுதி தாரும்; உமது சுதந்தரப் பிரசை யைப் பிறசாதி சனத்தின் வசைகட்கு உள்ளாயிருக்க விடாதேயும்; “அவர்கள் தேவன் எங்கே” என, அந்நிய சனம் அதைப் பரிகசிக்க விடாதேயும் என வேண்டுவார்களாக.

* 11-17-ம் வசனம். யூதர்கள் மனந்திரும்பி தபசு செய்யும்படிக்கு, ஆண்டவர் இப்பயங் கரமுள்ள சம்பவங்களை அவர்களுக்கு அறிவிக்கச் செய்கின்றனர்; தீர்க்கவசனர் யூதர்கள் ஒருசந்தி உபவாசம் புகுந்து கண்ணீர் விட்டு ஆண்டவரிடம் பொறுதி கேட்கும்படியாக அவர்களைத் தூண்டுகின்றனர்.

18. ஆண்டவர் தம் நாட்டின்மீது பற்றுதல் வேகமுடையவராய்த் தன் சனத் திற்குத் தயை பாராட்டுவர்.

19. ஆண்டவர் தம் பிரசையை நோக்கி (என் மூலமாய்ச்) சொல்வதே தெனில்: நாம் உங்களுக்குக் கோதும்மை, இரசம், எண்ணெய் அனுப்புவோம்; நீங்களும் அவைகளால் திருப்தியடை வீர்கள்; இனி உங்களைப் பிறசாதி சனங்கள் பகடிக்குக் கையளிப்போ மில்லை.

20. வடமுகத்திய (சத்துரு படையை) உங்களை விட்டு எட்டத் தள்ளுவோம்; நிர்மானுஷியமான காட்டிற்கு அதைத் துரத்துவோம்; அதின் முன்பகுதி கீழ்ச் சமுத்திர முகத்தில் (மடியும்படிக்கும்,) பின் பகுதி துலையிட்ட மேல் சுமுத்திர முகத்தில் (சாகும்படிக்கும்) செய்வோம்; அவர்கள் அழிந்துபோகத் துர்க்கந்தம் (ஆகாயத்தில்) கிளம்பும்; ஏனெனில், அவர்கள் அகங்காரம் பாராட்டினர்கள்.

* 20-ம் வசனம். இங்கு அசீரியரைக் குறித்துப் பேசப்படுகிறது; அவர்கள் ஆண்டவருடைய சித்தம் நிறைவேறினவர்களேயல்லாமல், சுய பலாக்கிரகத்தால் வெற்றி பெற்றவர்களல்ல; இநத மர்மத்தை அறியாது அவர்கள் ஆணுவம் படைத்து தங்களை மெச்சிக் கொண்டதாலே, ஆண்டவர் அவர்களையுங் கடைசியில் தண்டித்துவிடுகிறார்.

21. (இஸ்றாயேல்) நாடே அஞ்சாதே; அக்களிப்புக் கொள், சந்தோஷங் கொண்டாடு; ஏனெனில், ஆண்டவர் (உன் நிமித்தம்) மகத்தாய காரியங்களைச் செய்யப் போகின்றனர்.

22. நாட்டு மிருக சாதிகளைக் குறித் தும் கிலேசித்தல் வேண்டாம்; ஏனெனில், வனாந்தரமானவைகள் பசுமையாய்ப் போவன; விருட்சாதிகள் கனிகள் கொள்வன; அத்தியும், முந்திரிகையும் இரசனையான பழந் தருவன.

23. சீயோன் பூத்திரர்காள்! உங்கள் தேவனான ஆண்டவரில் அக்களிப்பு கொள்ளுங்கள், அகமகிழுங்கள்; ஏனெனில் அவர் உங்களுக்கு நீதிபோதக வித்தகரைத் தருவர்; அவரும் உங்கள் பேரில் (முன்போல) காலை மாலை மழை வருஷஞ் செய்வர்.

24. களஞ்சியங்கள் தானியம் நிரப்பப் படுவன; ஆலைகளில் இரசமும் எண்ணெ யும் ஏராளமாய் வழிவன.

25. வெட்டுக்கிளிகள், பச்சைப் புழுக் கள், பயிர்ப்பூச்சிகள், கம்பளிப்பூச்சிகள் (என்னப்பட்ட) உங்களுக்கு விரோமாய் யாம் அனுப்பிய பெருஞ் சேனையானது அழித்து விட்ட வருஷப் (பலன்களை) உங்களுக்கு மறுபடி கொடுப்போம்.

26. அவைகளைச் சாப்பிட்டு, நீங்கள் திருப்தியடைந்து, உங்களுக்காக அற்புத மானவைகளைச் செய்த உங்கள் தேவ னாகிய ஆண்டவரின் நாமகரணத்தை ஸ்துதிப்பீர்கள்; (இங்ஙனம்) நமது பிரசை எக்காலத்தும் வெட்கத்துக்கு உள்ளாக்கப் பட மாட்டாது.

27. இஸ்றாயேலின் நடுவில் பிரகாசிப் பது நாம்தான் எனவும், உங்கள் தேவ னாகிய ஆண்டவர் நாமே, வேறு கிடை யாதெனவும் நீங்கள் அறிந்து கொள்வீர் கள்; (மெய்யாகவே) நமது பிரசை எக் காலத்தும் வெட்கத்துக்கு உள்ளாக்கப் பட மாட்டாது.

28. பின்பு மானிட தேகம் (எடுத்த யாவர்) பேரிலும் நமது இஸ்பிரீத்து சாந்துவை வியாபகஞ் செய்வோம்; உங்கள் புத்திரர், புத்திரிகள் தீர்க்கவசனஞ் செப்புவர்கள்; உங்கள் விருத்தாப் பியரும், பாலியரும் நித்திரை போய் காட்சி காணுவர்.

29. அன்றியும் நமது ஊழியர் பேரிலும் பணிவிடைக்காரிகள்மீதும் அந் நாளில் நமது பரிசுத்தமான ஆவியை வியாபகஞ் செய்வோம்.

30. பின்பு வான்றலத்திலும், பூதலத் திலும் இரத்த மயமாயும், நெருப்பு மய மாயும், புகைப் படலமாயும் நவமான காரியங்கள் தோன்றச் செய்வோம்.

31. ஆண்டவருடைய பெரிதாகிய பயங்கர நாள் வருமுன், சூரியன் இருளாகும், சந்திரன் இரத்த மயமாகும்.

32. அப்போது ஆண்டவருடைய நாமகரணத்தை மன்றாடுவான் எவனும் இரட்சிக்கப்படுவன்; ஏனெனில், இரட்சண்ணியமானது ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளியதுபோல் சீயோன் மலை மீதும், எருசலேமிலும் ஆண்டவரால் அழைக்கப்பட்ட (இஸ்றாயேலில்) மீதியான சனத்திடத்தும் இருக்கும்.

* 18-32-ம் வசனம். ஆண்டவர் மனந்திரும்பிய யூதருக்குப் பொறுத்தலும், பூஸ்திதி சம்பத்துஞ் செழுமையுந் தருவதல்லாமல், நீதி போதகராகிய வார்த்தையானவரையும், தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்து சாந்துவானவரையும் அனுப்புவதாக வாக்களிக்கின்றனர்; அவருடைய நாமகரணத்தை ஸ்மரிப்பார் யாவருக்கும் இரட்சண்ணியம் அருளப்படுமென வும் வாக்களிக்கின்றனர்.