சொப்போனியாஸ் ஆகமம் - அதிகாரம் - 02

தபம் செய்யத் தூண்டுதல்.

1. நண்பு கெட்ட பிரசைகாள்.

2. (தேவ) கட்டளையானது (உங்களைத்) தூசெனக் கொண்டுபோக வேண்டிய ஞான்றைப் பிறப்பிக்கும் முன்னரே, ஆண்டவருடைய கோபாக்கிரத்தின் நாளும், அவருடைய எரிச்சலின் நாறும் உங்கள்மீது (வீழ்வதற்)குள்ளாகவே (அவரை இதஞ் செய்து கொள்ள) ஒருங்கே வாருங்கள், ஒன்று கூடுங்கள்.

3. அவருடைய நீதியில் ஒழுகா நின்ற பூதல சமஸ்த சாதுக்களே, (நீங்களும்) ஆண்டவரைத் தேடுங்கள்; ஆண்டவருடைய சீற்றத்து ஞான்றிலே ஒளிவிடங் கொள்ளல் பொருட்டு (பரம) நீதிதனைத் தேடுங்கள், சாந்தனை நாடுங்கள்.

4. ஏனெனில், காஜா நாஸ்தியாகும்; அஸ்காலோன் வனாந்தரமாகும்; அசோத் உச்சி உருமத்தில் சேதிக்கப்படும்; அக்காரோனும் நிலைகுலைய வீழ்த்தப் படும்.

5. (பலஸ்தீன்) சமுத்திர தீரத்தின் கண் வசிக்குஞ் சங்காரத்துக்குரிய சனங்காள் உங்களுக்கு ஐயோ கேடாம்; பிலிஸ்தியரின் தேசமதாகிய கனானேய (னைச் சேர்ந்த) உங்கள் பேரில் ஆண்டவர் வாக்கியம் (விழப் போகிறது;) வசிப்பான் (ஒருவனேனும்) இரா வண்ணம் உன்னை அதோகதியாக்கு வோம் (என்கிறார் ஆண்டவர்.)

6. இங்ஙனம் அச்சமுத்திர கரையானது ஆயர்கள் களையாறுமிடமாகவும், ஆடுகளது மேய்ச்சலிடமாக வுமிருக்கும்.

7. அன்றியும் அக்கரையானது யூதா வீட்டவரில் மீதியான பேர்கட்குத் தங்குமிடமாகவும், (ஆடு மாடுகள்) அங்கு மேயவும், மாலைப் பொழுதில் அஸ்காலோன் வீடுகளில் அவர்கள் இளைப்பாறவும் (வசதி ஸ்தான)மாகவு மிருக்கும்; ஏனெனில், அவர்கள் தேவனான ஆண்டவர் (தயையால் அவர்களைச்) சந்தித்து, அவர்களது சிறைத்துவத்தை அகற்றி விடுவர்.

8. நமது பிரசையைப் பழித்து, அதின் (தேச) எல்லைகளைக் குறித்து வீறு பேசிய மோவாபின் வசையையும், அம்மோன் மக்களின் தூஷணங்களையுஞ் செவியுற்றோம்.

9. ஆகலான் மோவாபு சொதோமைப் போலாகும்; அம்மோன் மக்கள் கொமோரைப் போலாவர்; அவர்கள் உலர்ந்த முட் (குவையாகவும்) உப்புத் திடராகவும், நித்தியத்துக்கும் வனாந் தரமாகவும் (ஆக்கப்படுவன;) நம் சனத்தில் மீதியான பேர் அவர்கள் சொத்தைக் கொள்ளையிட்டு அவர் களைச் சுவாதீனங் கொள்வர் என இஸ்றாயேலின் தேவனாகிய சேனை களின் ஆண்டவர் தமது மீது சத்தியங் கூறுகின்றனர்.

10. இஃது அவர்களின் அகம்பிரமத் தின் பொருட்டே அவர்கட்குச் சம்பவிக் கும்; ஏனெனில், சேனைகளது ஆண்டவ ரின் பிரசை விஷயமாய் அவர்கள் வசை கூறினார்கள், வீறு பேசினார்கள்.

11. ஆண்டவர் அவர்கள் மட்டில் பயங்கரத்துக்குரியவராயிருப்பர்; சர்வ புவன தேவர்களையும் அவர் அழித்து விடச் சாதி சனங்கள் வசிக்கும் நாடுக ளெங்கணும், அவரை ஒவ்வொருவனுந் தன் தன் தேசத்தில் ஆராதிப்பான்.

12. எத்தியோப்பியர்காள், நீங்களோ நமது வாளால் மடிவீர்கள்.

13. (ஆண்டவர்) தம் கரத்தை வட திசைபால் நீட்டி, அசீரியாவை அழித்து விடுவர்; அலங்கிருதம் (பொருந்திய நினிவை) வனாந்தரமென வெறுமனே நிர்மானுஷியமாய் விட்டுவிடுவர்.

14. அதின் நடுவில் சகல ஜன கால் நடைகளுங் கிடைகொள்வன் அதின் ஆசார வாயில்களில் நாரையும், முட் பன்றியும் வசிப்பன; அதின் சத்துவத்தை நிர்மூலமாக்குவோமாதலின், அதின் சாளரங்களில் (குருவிகள்) இரைச்சலும், கதவுகள் பேரில் காக்கைகளின் (கத்தலு மாயிருக்கும்.)

15. “யானே (இன்றியமையா பட்டணம்) எனக்கு மேல் வேறிலது” எனத் தன் இருதயத்தில் (மகத்துவமாய்ச்) செப்பிக் கொண்டு, நிர்ப்பயமாய் வாழ்ந்து வந்த மகத்தாய நகர் இஃது தானோ? (இஃது) வனாந்தரமாகவும், கால் நடைகட்கு ஒதுக்கிடமாகவுமான தென்னோ (என்பார்கள்;) அதின் வழிச் செல்வானெல்லாந் (துவேஷமாய்ச்) சீக்கலிடுவன், தன் கரமசைப்பானாமே.