சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 02

புறசாதியார் தேவ மக்களாதல்.

1. யான் என் கண்களை ஏறெடுத்து நோக்க, அதோ! அளவு நூல்கரத்தனாய ஸ்ரீமான் ஒருவன் நிற்கக் கண்டேன்.

2. (அன்னோனை) யான் பார்த்து: நீ எங்கு செல்லுகின்றனை? எனக் கேட் டேன்; அவன் என்னை நோக்கி: எருச லேமை அளக்கவும், அதின் விசாலம் இவ்வளவு நீளம் இவ்வளவு எனப் பார்க்கவுமே (போகின்றேன்) என உரைத் தனன்.

3. என்னிடமாய்ச் சம்பாஷித் திலங்கிய வானவன் க்ஷணமே புறப்பட் டுப் போக, வேறொரு பரத்துவாசி அவனுக்கு எதிரிட்டு,

* 3-ம் வசனம். இசா. 21:12; 31:6; 45:22; எரே. ஆக. 3:12; எசே. 18:30; 20:7; 33:11; ஓசே.14:2; யோவேல். 2:12; மலாக். 3:7.

4. அவனைப் பார்த்து: எருசலேம் நகரானது, அதின் நடுவுறும் மானிடருடையவும், ஆடு மாடுகளுடையவும் பெருந்திரளைப் பற்றி, மதிளின்றியே வசிக்கப்படுமென அந்த வாலனுக்குத் தீவிரித்துப் போய்ச் சொல்வையாக வென்றனன்.

* 4-ம் வசனம். சத்திய திருச்சபையைக் குறிக்கிறது.

5. அப்போது ஆண்டவர்: அதைச் சுற்றிலும் யாம் நெருப்பு மயமான அரணாயிருந்து அதன் நடுவில் மகிமை யோடு இலங்குவோமென்றார்.

6. ஓகோ வட தேசத்தினின்று ஓட்ட மெடுங்கள் என்கிறார் ஆண்டவர்; ஏனெனில், வானகச் சதுர் காற்றுகளிலும் உங்களை யாம் சிதறடித்தோம் என்கி றர் ஆண்டவர்.

7. பபிலோன் குமாரியினிடம் வாசஞ் செய்யாநின்ற சீயோனே! ஓட்டம் பிடி.

8. ஏனென்றால், சேனைகளின் ஆண்டவர் அருள்வதேதெனில்: உன்னை மகிமைப்படுத்திய பின் உன்னைக் கொள்ளையடித்த சனங்களிடம் என்னை அனுப்புவாராம்; உங்களைத் தொட்ட வர்கள் என் கண்மணிதனைத் தொட்ட வர்களேயாம் (என்பதே.)மீ

9. ஆதலின் இதோ அவர்கள்மீது எனது கரங்களை நீட்டப் போகின்றேன்; அவர்கள் தங்களுக்குத் தொண்டு புரிந் தார்கட்கே கொள்ளைப் பறியாவார்கள்; என்னை அனுப்பியது சேனைகளின் தேவனேயாமென (இங்ஙனம்) அறிந்து கொள்வீர்கள்.

10. சீயோன் மாதே! துத்தியம் பாடு, பூரிப்புக் கொள்; ஏனெனில், நாம் க்ஷணமே கிளம்பி உன் நடுவில் வாசஞ் செய்வோம் என்கிறார் ஆண்டவர்.

11. அந்நாளில் அநந்த பிரசைகள் ஆண்டவரைச் சரணடைய, அவர்கள் என் சனமாவார்கள்; யானும் உன் நடுவில் வசிப்பேன்; இங்ஙனம் சேனைகளின் ஆண்டவர் என்னை அனுப்பியதாய் அறிந்து கொள்வை.

12. அப்போது ஆண்டவர் தம் காணி யாட்சியாக யூதாவைப் பரிசுத்த நாட்டின் ஸ்வாதீனங் கொள்வர்; மீண்டும் எருசலேமைத் தெரிந்து கொள்வர்.

13. தேசமெடுத்தான் எல்லாம் ஆண்டவர் சமுகத்தில் மோனஞ் சாதிக்கக் கடவன்; எனெனில், அவர் தம் திரு ஸ்தானத்தினின்று விழித்து எழுந்தருளின ராமே.