நாகும் ஆகமம் - அதிகாரம் - 02

நினிவே நகரின் தண்டனை.

1. (நினிவே! இதோ) உன் முன்பாக (அரண்களை) நாசஞ் செய்பவனும், உன்னை முற்றுகைச் செய்வானுமாகிய (கல்தேயன்) ஏறி வருகின்றனன்; தடங் களில் சாமக் காலவரை ஸ்தாபி; இடையை வரிந்துகொள், கூடிய வரை யில் உன் படையைப் பலப்படுத்து.

2. ஏனெனில், யாக்கோபுக்குப் (பாராட்டிய) அகங்காரத்தையும், இஸ் றாயேலுக்குக் (காட்டிய) இறுமாப்பை யும், ஆண்டவர் தண்டிக்கப்போகின் றனர்; இச்சத்துருக்கள் அவர்களைச் சிதறடித்து அவர்கள் பிதுர் சந்தானத் தைக் கெடுத்தனர்; ஆனதுபற்றித் (தேவன் அவர்களைத் தண்டிக்க வேண்டும்.)

* 2-ம் வசனம். இஸ்றாயேலைக் கொடுமையாக நடத்திய அசீரியரைத் தண்டிக்கும்பொருட்டு இவர்களது நினிவேயை அழிக்கிறார்.

3. (கல்தேயின்) வல்லுனர்களது கேடகம் நெருப்புமயமானது; இராணுவ வீரர் தூமிர உடை தரித்தவர்; அதின் சண்டை ஞான்றிலே இரதங்கள் நெருப்பு கக்கும் ஆயுதமயமாயிருப்பன; சாரதி களோ பிரமிப்பால் மயங்கிய நிலையி லிருப்பர்.

4. அவர்கள் வருந் தடங்களின் சந்தடி நெருக்கமாயிருக்கும், வெளி தாவுகளில் இரதங்கள் ஒன்றோ டொன்று மோதிக் கொள்வன; அவர்கள் கண்கள் தீபங்கள்போலாம்; அவர்கள் முகங்கள் இடி மின்னலைக் கக்குவது போலாம்.

5. (தளபதி) தன் வீர பராக்கிரமசாலி களை அணிவகுத்து விடுவன்; அவர் களுந் தடம் பிசகாது ஓடுவார்கள்; அவர்கள் தீவிரமாய் அலங்கங்கண் மீதேறி, தங்களைக் காக்குஞ் சாகை இருத்திக் கொள்வார்கள்.

6. (மடைதிறந்த) வெள்ளம்போன்ற (படையால் பட்டணக்) கதவுகள் திறக்கப்பட்டன; ஆலயம் அஸ்திவார பரியந்தம் அழிக்கப்பட்டது.

7. அதின் படைவீரர் (பிடிபட்டு) கைது செய்யப்பட்டனர்; அதின் பெண்பாலோர் புறாக்களைப்போல் விம்மியழ, இருதயங் குமுறிக் கொண்டிருக்கச் (சிறைகளாகக்) கூட்டிப் போகப்பட்டனர்.

8. நினிவே நகரின் (வாசிகள்) சல ஸ்தாபனம் போல் இருந்தும், அவர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்; நில்லு, நில்லு (என்றாலும்) திரும்புவான் ஒருவனுமில்லை.

9. வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்; பொன்னையுங் கவருங்கள்; அதின் ஆஸ்தியும் விலையுயர்ந்த தட்டு முட்டு சாமான்களும் எடுக்க, எடுக்க முடிவு கொள்ளாது.

10. நினிவே நாசஞ் செய்யப்பட்டது; அது விழத்தாட்டப்பட்டது, அது கிழிபட்டது, திகிலால் வாடிய இருதயம் படைத்தோரையும், முழங்கால் விட விடத்தவர்களையும், இடை தளர்ந்தவர்களையுந் (தான் அங்கு காணலாம்;) அவர்கள் முகமும் கரிசட்டி போன்றிருக்கிறது.

* 10-ம் வசனம். கரிசட்டி--துக்கத்தினால் முகம் கருமையடைவது இயல்பு.

11. சிம்மங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகளது ஆகாராதிகள் ஸ்தலமெங்கே? ஒருவனுடைய தொந் தரையுமின்றி, சிம்மம் தம் குட்டிகள் சமேதமாய்ச் செல்லுமே அக்கெபி எங்கே? 

* 11-ம் வசனம். சிம்மங்களின் குகை--நினிவே நகர்.

12. சிம்மம் தன் குட்டிகளுக்கும், பெண் சிங்கங்களுக்கும் நிரம்ப இரை களைக் கொணர்ந்து, வேட்டை மிருகங் களால் குகையை நிரப்பி விட்டதே; அந்த நினிவே எனுங் குகைதனைக் காணோமே.)

13. (குகையே!) உன்னிடம் யாம் வருகின்றோம். உன் இரதங்களைச் சாம்பலாக்குவோம்; வாளானது உன் சிங்கக் குட்டிகளைப் பட்சிக்கச் செய் வோம்; நீ அபகரித்தவைகளை உன் தேசத்தினின்று அப்புறப்படுத்துவோம். இனி உன் ஸ்தானாதிபதிகளின் (ஆணவம் படைத்த) குரல் சப்தங் கேட்கப்பட மாட்டாது என்கிறார் சேனைகளின் தேவனான ஆண்டவர்.