மலாக்கியா ஆகமம் - அதிகாரம் - 02

குருக்களுக்கு புத்திபோதகம் 

1. குருப்பிரசாதிகாள்! இதோ இக் கட்டளையானது உங்களை நோக்கிய தாகும்; (ஆதலின் செவிகொடுங்கள்.)

2. நீங்கள் செவிகொடாவிடின், நமது நாமத்தை மகிமைப்படுத்துவான் வேண்டி, (நமது ஆக்ஞாபனைக்கு) இருதயகதமாய்க் கவனஞ் செலுத்தா விடில், நாம் உங்கள்பேரில் வறுமையை அனுப்புவோம்; நீங்கள் ஆசீர்வதித்ததை நாம் சபிப்போம்; (ஆம், எம் வார்த்தை தனை) உங்கள் இருதயத்தில் பதிய வையாததால் நாம் அவைகளைச் சபிப் போம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

* 2-ம் வசனம்: லேவி 26:14; உபா.28:15.

3. (பலியின்) தோள்பட்டையை உங்கள்பேரில் வீசி எறிவோம்; உங்கள் சிறந்த பலிகளின் கசுமாலத்தை உங்கள் முகத்திலேயே எறிந்துவிடுவோம்; அவைகள் உங்களுக்கு கவசமென இருக்கும்.

4. இங்ஙனம் லேவி வகுப்போடு (செய்திலங்கிய) உடன்படிக்கை நிலை நிற்கவே உங்களிடம் இக்கட்டளையைப் (பிரகடனஞ் செய்யத் தீர்க்கத்தரிசியை) நாம் அனுப்பினோமென நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

5. நமது உடன்படிக்கையானது சீவியத்துக்குஞ் சமாதானத்திற்குமாய் அதனோடு செய்யப்பட்டதாகும்; அதற்கு நாம் (தெய்வ) பயத்தையருள, அதுவும் நமக்கு அஞ்சியதாய் நமது சமுகத்தில் நடுநடுங்கியிருந்தது.

6. அதின் நாவில் சத்தியத்தின் சட்டமேயிருந்தது; அதின் உதடுகளில் தீமை என்பதையே கண்டதில்லை; எம்மோடு அது சமாதானத்திலும் நேர் மையிலும் நடந்து, அநீதத்தினின்று அநந்தம் பேரைத் திருப்பினது.

7. ஏனெனில், தேசிகனது உதடுகள் நூலைக் காத்து வருவன; அவன் நாவி னின்று வேத சட்ட (அறிவைத்) தேடிக் கொள்வார்கள்; அவன் சேனைகளின் ஆண்டவரது தூதனேயாம்.

8. (பிரமாணிக்கங் கெட்ட) நீங்களோ (நேர்) வழியகன்று, வேதானுஷ்டானத் தில் அநந்தம் பேர்கட்குத் துர்மாதிரிகைக் காட்டினீர்கள்; (இங்ஙனம்) லேவி வகுப்போடு செய்யப்பட்ட உடன்படிக் கைதனைத் திரணமாக்கினீர்கள் என் கிறார் சேனைகளின் ஆண்டவர்.

9. நீங்கள் நமது வழிப்பாடுகளை அநுஷ்டிக்காததினாலும், சட்டப் (பிர மாணத்துடன் தீர்மானியாது) முகதாட் சண்ணியங் கொண்டதாலும் உங்களை யம் சகல பிரசை கண்முன் ஈனராகவும், இழிவுக்குரியராகவும் ஆக்கினோம்.

10. நம் யாவருக்கும் ஒரே பிதா வன்றோ? நம்மைச் சிருஷ்டித்தவர் ஒரே தேவனன்றோ? (நிற்க) நம்மில் ஒவ் வொருவனும் நமது பிதாக்கள் உடன் படிக்கையை மீறி, தன் சகோதரனைத் திரஸ்கரிப்பதென்னோ?

* 10-ம் வசனம். மத்.23:9; எபே.4:6.

11. யூதா (வேத வரம்பைக்) கடந்தது; இஸ்றாயேலிலும், எருசலேமிலும் அடாத கர்மம் ஏற்படலானது; ஏனெனில் யூதாவானது பரதேவர் (வழிப்பட்ட) மங்கைதனைக் கையேற்று, ஆண்டவ ருக்கு வசீகரமான அவர் நேசமுள்ள (பிரசைதனை) அசூசியப்படுத்தினது.

12. இவ்வகிர்த்தியத்தைப் புரிந்த மானிடனை, அவன் யாக்கோபு வானி களைச் சேர்ந்த அதிபனானாலும், சீட னானாலும் சேனைகளின் தேவனா ருக்குக் காணிக்கைச் சமர்ப்பிப்பனானா லுஞ் (சரியே, அவனை) ஆண்டவர் நாசமாக்கிவிடுவர்.

13. நீங்கள் மீண்டுஞ் (செய்ததே தெனில்: சொந்த மனைவிகளை விடுத்து, பரஸ்திரீகளை மணமுடித்து, உங்கள்) பலிதனை யாம் இனி ஏறெடுத்துப் பாரா வண்ணம், ஆண்டவரது பீடத்தை அவர் களது துயரப் பிரலாபக் கண்ணீரால் நிரப்பினீர்கள்; நீங்கள் (எம்மை) அமர்த் தக் கூடிய (எந்தக் காணிக்கையையும்) உங்கள் கரத்தினின்று ஏற்றுக்கொள் ளோம்.

14. (அதற்குக்) காரணம் என்னேயென நீங்கள் கேட்கின்றீர்கள்; என்னவெனில்: உன் பால்யத்தில் உனக்கும் உன் மனைவிக்கும் (ஏற்பட்ட விவாகத்துக்கு) ஆண்டவர் சாட்சியாயிருக்க, நீ அவளைத் திரஸ்கரித்தாய். அவன் நின் துணைவி (செய்த சத்திய) உடன்படிக்கையால் அவன் நினது களத்திரமே.

15. ஏகனானவர் (உன்னைப்போல் அவளையும்) படைத்தனரன்றோ? (ஆண்டவருடைய) ஆவியால் உயிர்ப் பெற்றவளன்றோ? கடவுளருக்கு (யோக்கிய) சந்ததியே அல்லாமல், ஏகனானவர் (உன்னிடம் வேறெதைக் கேட்கின்றார்; உன் உயிர்த் துணைவியைக் கை விடாதே; உன் பால்யப் பருவத்துப் பாரியாளைப் புறக்கணியாதே.

16. (அவள்மீது) அரோசிகமுண்டாகு மேல், (அவளை) விலக்கிவிடு என இஸ்றாயேல் தேவனான ஆண்டவர் செப்புகின்றார் (என நீங்கள் வாதுகூறினும்) அவனுடைய அக்கிரமம் அவன் உடையைக் கவரும் என்கிறார் சேனை களின் ஆண்டவர்; (ஆதலின்) உங்கள் உயிர்த் துணையைக் காருங்கள்; அவர்களைப் புறக்கணியாதீர்கள்.

17. உங்கள் வாய்மொழிகளால் ஆண்டவருக்கு ஆயாசத்தை உண்டு பண்ணினீர்கள்; எதிலே நாங்கள் கஸ்தி வருவித்தோம் என்பீர்களோ; தின்மை செய்வானெல்லாம் ஆண்டவர் சமுகம் நல்லவனாகத் தோன்றுகின்றனன் என்றும், இத்தன்மையோரும் அவருக்குப் பிரியப்படுகின்றனரென்றும், நீதியங் கடவுளரெங்கேயென்றும் நீங்கள் கூறுவ தினாலேயே.