அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 02

ஏலியின் மக்கள்.

1. என் இருதயம் ஆண்டவரிடத்தில் சந்தோஷப்படுகின்றது; என் மகிமை என் தேவனால் உயர்த்தப்பட்டது. என் எதிரிகளை மறுக்க என் வாய் திறக்கப் பட்டது; ஏனெனில், உமது இரட்சிப் பினால் அகமகிழ்ந்தேன்.

2. ஆண்டவரைப்போலப் பரிசுத்தர் இல்லை; உம்மையன்றி வேறொருவரு மில்லை; நமது கடவுளுக்கொத்த வல்ல மையுள்ளவருமில்லை.

3. மகிமைப்படுத்திக் கொண்டு மேன்மையான வார்த்தைகளைப் பேச வேண்டாம். பழைய வார்த்தைகளை உங்கள் வாயினின்று அகலட்டும். ஏனெனில், தேவன் சகலத்தையும் அறிந்த ஆண்டவராயிருக்கிறார். நினைவு களெல்லாம் அவருக்குத் தெரிந்திருக் கின்றன. 

4. பலவான்களுடைய வில்லு முறிந்து போயிற்று. பலமற்றவர்களோ பலத்தை அடைந்தார்கள்.

5. முந்த திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காகக் கூலிக்கு அமர்ந்தார்கள்; பசியுள்ளோர்களோ பசி தீர்ந்தார்கள்; மலடியாயிருந்தவள் வெகு பிள்ளை களைப் பெற்றாள்; வெகு பிள்ளை களைப் பெற்றவளோ பலவீனப்பட் டாள்.

6. ஆண்டவர் உயிரைப் பறிக்கிறார்; உயிரைக் கொடுக்கிறார்; பாதாளங்களில் கொண்டு போகிறார்; அதினின்று திரும் பக் கொண்டு வருகிறார்.

7. ஆண்டவர் தரித்திரனாயாக்கு கிறார்; மகராசனாயுமாக்குகிறார்; தாழ்த்துகிறார்; மறுபடி உயர்த்துகிறார்.

8. பிரபுக்களுடன் உட்கார்ந்து மகிமை சிம்மாசனமடைய தூசியினின்று ஏழையையும், குப்பையினின்று தரித் திரனையும் எடுத்துக் கொள்ளுகிறார்; பூமியின் அஸ்திவாரங்கள் சுவாமிக்குச் சொந்தம். அவைகள் மேல் பூலோகத்தை நிறுத்தினார்.

9. அவர் தமது பரிசுத்தவான் களுடைய பாதங்களைக் காப்பாற்று வார்; பாதகர் இருளில் மவுனமாயிருப் பார்கள்; ஏனெனில், மனிதன் தன் பலத்தைக் கொண்டு தன்னை ஆதரிக்க மாட்டான்.

10. ஆண்டவருடைய எதிரிகள் அவருக்குப் பயந்து நடுங்குவார்கள்; வான மண்டலத்திலிருந்து அவர்கள் பேரில் இடியிடிக்கச் செய்வார்; ஆண்டவர் பூமியின் எல்லைகளைத் தீர்வையிடுவார்; அதின் இராச்சியத்தைத் தமது அரசனுக்குக் கொடுப்பார். தமது கிறீஸ்துவினுடைய வல்லமையை உயர்த்துவாரென்று பாடினாள்.

11. பின்பு ஏல்கானா ராமாத்தாவில் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்; பிள்ளையோ ஆண்டவருடைய சந்நிதி யில் குருவாகிய ஏலி என்பவர் முன்பாக ஊழியஞ் செய்துகொண்டு வந்தான்.

12. ஆனால் ஏலியின் குமாரர்கள் ஆண்டவரைப் பணியாமல் பெலியாலின் குமாரர்களாயிருந்தார்கள்;

13-14. பிரசைகள் மட்டில் குருக்கள் (செலுத்த வேண்டிய) கடமைகளை நிறைவேற்றினவர்களல்ல. ஆனால் யராகிலும் பலியிடுங் காலையில் இறைச்சிகள் வேகும்போது குருவின் ஊழியன் வந்து மூன்று பல்லுள்ள ஒரு சூலத்தைக் கையில் கொண்டு கொப் பரையிலாவது, அண்டாவிலாவது கடாரத்திலாவது, சட்டியிலாவது விடுவான். சூலம் எடுப்பதையெல்லாங் குரு தனக்கு எடுத்துக் கொள்வான்; சீலோவில் வருகிற இஸ்றாயேலித் தாருக்கெல்லாம் இப்படியே செய் வார்கள்.

15. பலியின் கொழுப்பைத் தகிக்கிற தற்கு முன்னுங் குருவின் ஊழியன் வந்து பலியிடுபவனை நோக்கி: குருவுக்கு சமைக்க இறைச்சியை எனக்குக் கொடு. வெந்த இறைச்சியை உன்னிடத்தில் நான் வாங்க மாட்டேன்; வேகாததை வாங்குவேன் என்பான்.

16. பலியிடுபவன் அவனுக்கு மறு மொழியாக: இன்று வழக்கப்பிரகாரம் முந்தக் கொழுப்பு தகிந்து போகட்டும்; அப்புறம் உன் ஆத்துமம் எவ்வளவுக்கு விரும்புகின்றதோ அவ்வளவு உனக்கு எடுத்துக் கொள் என்பான். ஊழியன் அவனுக்கு எதிருரையாக: அப்படிக்கல்ல இப்போதே கொடுப்பாய்; இல்லாவிட் டால் நான் பலவந்தமாய் எடுப்பேனென் பான்.

17. ஆகையால் ஏலியின் குமாரர்கள் மனிதர்களை ஆண்டவருடைய பலியி னின்று நீக்குவதினால் அவர்களுடைய குற்றம் ஆண்டவர் முன் மகா பெரியதா யிருந்தது.

18. சமுவேல் என்னும் பிள்ளை மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட எப்போத்தை உடுத்திக் கொண்டு ஆண்டவர் சந்நிதியில் பணிவிடை செய் வான்;

19. அவனுடைய தாய் அவனுக்கு ஒரு சிறு சட்டை யய்து வழக்கப் பலியைச் செலுத்தும் பொருட்டுத் தன் புருஷனுடன் அவள் போகையில் குறித்த நாட்களிலே அதைக் கொண்டு வந்து கொடுப்பாள்.

20. மேலும் ஏலி ஏல்கானாவையும், அவன் பெண்சாதியையும் ஆசீர்வதித்து அவனை நோக்கி: நீ ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த பிள்ளையைப் பற்றி ஆண்டவர் இந்தப் பெண்பிள்ளையால் உனக்குச் சந்தானங் கொடுப்பாராக! என்றார். அவர்களோ தங்களிடத்துக்குத் திரும்பிப் போனார்கள்.

21. ஆகையால் ஆண்டவர் அன்னா ளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந் தரித்து மூன்று குமாரரையும், மூன்று குமாரத்திகளையும் பெற்றாள்; சமுவேல் என்னும் பிள்ளை ஆண்டவர் சந்நிதியில் மகிமை பெற்றான்.

22. ஆனால் ஏலி மிகுந்த விருத்தாப் பியனாயிருந்தபோது, தன் குமாரர்கள் இஸ்றாயேலருக்கெல்லாஞ் செய்துவந்த யாவையும், கூடார வாசலைக் காத்து வந்த ஸ்திரிகளுடன் எவ்விதமாய் அவர்கள் சயனித்தார்களென்றுங் கேள் விப்பட்டு,

23.  அவர்களுக்குச் சொன்னது: சகல பிரசையாலும் நான் கேள்விப்படும் அக் கிரமச் செய்கையாகிய இப்பேர்ப்பட்ட கிரிகைகளை ஏன் செய்கிறீர்கள்,

24. என் குமாரர்களே! அப்படிச் செய்ய வேண்டாம்; ஆண்டவருடைய பிரசை அவருடைய கட்டளையை மீறி நமக்க நீங்கள் செய்வதாக நான் கேள்விப் படுஞ் சப்தம் நல்லதல்ல;

25. ஒரு மனிதன் மற்றொரு மனித னுக்குத் துரோகஞ் செயதால் சுவாமியை அவனுக்குச் சனுவாக்கலாம். ஆனால் மனிதன் சுவாமிக்குத் துரோகஞ் செய்தால் அவனுக்காக வேண்டிக் கொள் பவனார்? அவர்களோ தங்கள் தகப்பன் வாக்கைக் கேட்கவில்லை; அதற்காக ஆண்டவர் அவர்களைக் கொல்ல மன தானார்.

26. சமுவேல் என்னும் பிள்ளையோ கதித்து வளர்ந்து சுவாமிக்கும் மனிதர் களுக்கும் பிரியப்பட்டுக் கொண்டிருந் தான்.

27. அப்போது தேவனுடைய மனி தன் ஒருவன் ஏலியின் கிட்ட வந்து அவனை நோக்கி: ஆண்டவர் சொல்லு கிறது என்னவெனில்: எஜிப்த்து தேசத்தில் பரவோன் வீட்டிலிருந்தபோது நாம் உன் தகப்பன் வீட்டிலிருந்தபோது நாம் உன் தகப்பன் வீட்டாருக்குப் பிரத்தியட்ச மாய் நம்மைக் காண்பித்ததில்லையா?

28. அவன் நமது பீடத்தில் ஏறவும், நமக்குத் தூபங்காட்டவும், நம்முடைய சமுகத்தில் எப்போத்தைத் தரிக்கவும், நமக்குத் தூபங் காட்டவும், நம்முடைய சமுகத்தில் எப்போத்தைத் தரிக்கவும், இஸ்றாயேலின் சகல கோத்திரங்களுக் குள்ளே அவனைக் குருவாக நாம் தெரிந்து கொண்டோம். உன் தகப்பன் வீட்டுக்கு இஸ்றாயேல் குமாரர்களின் சகல பலிகளிலும் பங்கு கொடுத்தோம்.

29. ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கும் படி நாம் கட்டளையிட்டிருந்த என் பலி யையும், தானங்களையும் ஏன் காலால் மிதித்தீர்கள்? நமது பிரசையாகிய இஸ்றாயேலின் சகல பலியிலும் முந்தின வைகளை நீங்கள் சாப்பிடும் பொருட்டோ நம்மைப் பார்க்கிலும் உன் பிள்ளைகளை அதிகமாய் மதித்தாய்;

30. ஆனதைப் பற்றி இஸ்றாயேலின் தேவனாகிய ஆண்டவர் சொல்லுகிற தாவது: உன் வீடும், உன் தகப்பனின் வீடும் என்றென்றைக்கும் நமது சமுகத் தில் ஊழியஞ் செய்யும்பொருட்டு உறுதி யாகச் சொல்லியிருந்தோமே; இப் போதோ அவ்வாக்கு நம்மை விட்டு அகலக்கடவது. ஆனால் நம்மை மகிமைப்படுத்துபவன் எவனோ அவனை மகிமைப்படுத்துவோம். நம்மை நிந்திக் கிறவர்கள் நிந்தைக்கு உள்ளாவார்கள்.

31. இதோ நாட்கள் வரும். உன் வீட் டில் விருத்தாப்பியர் இராதபடி உன் புயத்தையும், உன் பிதா வீட்டின் புயத் தையும் வெட்டுவோம்.

32. இஸ்றாயேலர் சுகத்திலிருக்கை யிலே ஆலயத்தில் உன் எதிரியை நீ பார்ப் பாய்; என்றென்றைக்கும் உன் வீட்டில் விருத்தாப்பியர் இரார்கள்.

33. ஆயினும் உன் கோத்திரத்தில் எல்லோரையும் நமது பீடத்தினின்று நீக்க மாட்டோம்; ஆனால் உன் கண்கள் குருடாகவும் உன் ஆத்துமம் சோர்வுபட வுஞ் செய்வோம். உன் வீட்டின் பெரும்பான்மையாரும் பக்குவப் பிராயத் தில் வருகையிலேதானே சாவார்கள்.

34. உன் இரு குமாரர்களாகிய ஒப்னி பினேஸ் என்பவர்களுக்குச் சம்பவிப்பதே உனக்கு அடையாளமாம்; இருவரும் ஒரே நாளிலே சாவார்கள்;

35. பிறகு நமதுள்ளப்படி நமது மனதுக்கேற்ற விதமாய் நடக்கும் பிரமாணிக்கமுள்ள குரு ஒருவனை ஏற்படுத்துவோம். அவனுக்குப் பிரமா ணிக்க வீட்டைக் கட்டுவோம்; அவன் நம்முடைய கிறீஸ்துவுக்கு முன் எந்நாளும் நடப்பான்.

36. அப்பொழுதே சம்பவிக்கப் போகி றது என்னவென்றல்: உன் வீட்டில் மீதியாயிருப்பவன எவனும் வந்து தனக்காக வேண்டிக் கொள்ளச் சொல்லு வான்; ஒரு வெள்ளி நாணயமும், ஒரு உரொட்டியும் ஒப்புக்கொடுப்பான்; அப்போது அவன்: நான் ஒரு வாய் உரொட்டிச் சாப்பிடும்படி நீங்கள் தயவு செய்து குருவைச் சேர்ந்த ஒரு பாகம் எனக்குக் கொடுங்கள் என்று கெஞ்சி மன்றாடுவான்.