நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 02

தேவதூதன் இஸ்ராயேலரைக் கடிந்து கொண்டதும்,--கர்த்தர் அவர்கள அவிசு வாசத்திற்காகத் தண்டித்ததும்.

1. கல்கலாவினின்று தேவதூதன் அழுகிறவர்களடைய ஸ்தலத்துக்குச் சென்று: எஜிப்த்து தேசத்தினின்று உங்களை மீட்டு உங்கள் பிதாக்களுக்கு நான் வாக்குத்தத்தஞ் செய்திருந்த தேசத்தில் சேர்த்தேன்; மேலும் உங்களோடு பண்ணின உடன்படிக்கையை ஒருபோதும் விருதுவாக்குவதில்லையென்றும் வாக்குத்தத்தஞ் செய்தேன்.

2. ஆனால் அதற்காக நீங்களும் இத்தேசத் தாரோடு யாதொரு உடன்படிக்கையுஞ் செய்யக்கூடாதென்றும், அவர்கள் பலிபீடங் களைத் தகர்த்துடைக்க வேண்டியதென்றும் நான் கற்பித்திருந்தேன். இப்படி நான் கற்பித்திருந்தபோதிலும் நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டீர்களில்லை; ஏனிவ்விதஞ் செய்தீர்கள்?

3. ஆனதுபற்றி உங்களுக்கு முன்பாக நான் அவர்களை நிர்மூலம் பண்ணுவதில்லை. அவர்களே உங்கள் சத்துராதிகளும், அவர்கள் தெய்வங்கள் உங்கள் கேடாயுமிருப்பார்கள் என்றார்.

4. தேவதூதன் இஸ்ராயேலியர் சகலருங் கேட்க இவ்வார்த்தைகளைச் சொன்னபோது அவர்கள் கூக்குரலிட்டழுதார்கள்.

5. அத்தலத்திற்கு அழுகிறவர் ஸ்தலம் அல்லது கண்ணீர் ஸ்தானமென்னும் பேருண் டாயிற்று. அவ்விடத்திலேயே கர்த்தருக்குப் பலி ஒப்புக்கொடுத்தார்கள்.

6. ஜோசுவா ஜனங்களை அனுப்பிவிட் டான். இஸ்ராயேல் புத்திரருந் தங்கள் தங்கள் வீதத்தைச் சுதந்திரப்படுத்திக்கொள்ளப் போனார்கள்.

7. ஜோசுவா ஜீவிய காலத்திலும், அவருக் குப்பின் வெகுகாலம் உயிரோடிருந்து கர்த்தர் இஸராயேலிருக்குச் செய்தருளின சகல அறிந் திருந்த மூப்பர்களுடைய ஜீவியகாலத்திலுஞ் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

8. கர்த்தரின் ஊழியனும் நூனின் குமார னுமாகிய ஜோசுவா நூற்றுப்பத்தாம் பிரா யத்தில் மரித்தான்.

9. காவாஸ் மலைக்கு வடக்கு எப்பிராயீம் மலைமேல் அவன் சுதந்தரப் பங்கு வீதம் வந்த தாம்னாட்சாரேயின் எல்லையில் அவனை அடக்கம் பண்ணிணார்கள்.

10. அந்தத் தலைமுறையார் எல்லோருந் தங்கள் பிதாக்கள் பதஞ் சேரவே, அவர்களுக் குப் பதிலாக கர்த்தரையும், அவர் இஸரா யேலுக்குச் செய்தருளின நன்மைகளையும் அறியாதிருந்த வேறு மனிதர் எழுந்தார்கள்.

11. அப்போது இஸ்ராயேல் சந்ததியார் கர்த்தர் சமூகந் தின்மை செய்து பாவாலீமைத் தொழுதார்கள்.

12. எஜிப்த்து தேசத்தினின்று தங்கள் பிதாக்களை மீட்ட தங்கள் பிதாக்களுடைய கர்த்தராகிய தேவனை விட்டுவிட்டு, அன்னிய தேவர்களையும், தங்களைச் சுற்றிலுமிருந்த ஜனங்களுடைய தேவர்களையும் பின் சென்று அவர்களை ஆராதித்தார்கள். இதனால் கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.

13. அவரை இகழ்ந்து பாவாலையும் அஷ் டாரோட்டையுஞ் சேவித்தார்கள்.

14. ஆனபடியால் கர்த்தர் இஸராயேலியர் மேல் கோபங்கொண்டு சதிகாரர் கையில் அவர்களை அளித்துவிடவே, இவர்களும் அவர்களைப் பிடித்துத் தங்களைச் சுற்றிலுமி ருந்த சத்துராதிகளுக்கு விற்றுப்போட்டார் கள். சத்துராதிகளை எதிர்க்க அவர்களால் கூடுமாயில்லை.

15. ஆனால் அவர்கள் எங்கேதான் போன போதிலுங் கர்த்தர் திருவுலம்பற்றி வாக்களித் திருந்த வண்ணம் அவர் கரங்கள் அவர்கள் மேல் நின்றனவாதலால் அவர்கள் கொடிதாய் வாதிக்கப்பட்டார்கள்.

16. அவர்களை வருத்தினவர்கள் கைகளி னின்று அவர்களை மீட்கக் கர்த்தர் நியாயாதி பதிகளை எழுப்பினார். ஆனால் இவர்களுக் குச் செவிகொடுக்க முதலாய் அவர்களுக்கு மனமிருந்ததில்லை.

17. அன்னிய தெய்வங்களோடு விபசாரம் பண்ணி அவைகளை ஆராதித்தார்கள். வெகு சீக்கிரத்தில் அவர்கள் தங்கள் பிதாக்கள் அனுசரித்து வந்த வழிகளை விட்டுவிட்டுக் கர்த்தருடைய கற்பனைகளைக் கேட்டிருந்தும் அவைகளுக்கு முற்றிலும் விரோதமாய் நடந்தார்கள்.

18. கர்த்தர் நியாயாதிபதிகளை எழுப்பின போது அவர்கள் காலத்திலே இரக்கத்தால் இளகிக் கஸ்திப்படுகிறவர்களுடைய பெரு மூச்சுகளைக் கேட்டு அவர்களை உபத்திரவப் படுத்திக் கொலைசெய்தவர்களினின்று இரட் சித்து வந்தார்.

19. நியாயாதிபதி மரித்தபோதோ, (இஸ் ராயேலியர்) திரும்பவுந் துரோகிகளாகித் தங்கள் பிதாக்கள் செய்த அக்கிரமங்களை விட அதி கெட்ட அக்கிரமங்களைப் பண்ணி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிச் சேவித்து ஆராதித்து வந்தார்கள். அவர்கள் தங்கள் நூதன அக்கிரமங்களையும், அனுசரித்து நடந்துவந்த கொடிதான வழியையும் விட்டவர்களல்ல.

20. இஸ்ராயேல் ஜனத்தின்மேல் கர்த்தர் கோபமூண்டு சொன்னதாவது: இந்த ஜனத் தின் பிதாக்களோடு நாம் செய்திருந்த உடன் படிக்கையை இவர்களே மீறினபடியாலும், என் வார்த்தைகளை இவர்கள் நிந்தித்து அனுசரியாதபடியாழும்,

21. ஜோசுவா சாகும்போது நிர்மூலம் பண்ணாமல் விட்டுவிட்ட ஜனங்களை அழிக்கமாட்டோம்.

22. அப்படிச் செய்தால் இஸ்ராயேலியர் தங்கள் பிதாக்கள் அனுசரித்ததுபோலவே கர்த்தருடைய வழியைத் தாங்களும் அனு சரித்து அவ்வழியே நடக்கிறார்களோ இல்லை யோவென்று பரிக்ஷித்துப் பார்ப்போம் என்றார்.

23. ஆனதால் அந்த ஜாதிகளைக் கர்த்தர் உடனே நிர்மூலம்பண்ண மனமில்லாதவராய் அவர்களை ஜோசுவா கையில் ஒப்புக்கொடுக் காமலே விட்டுவிட்டார்.