இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 02

இதுவுமது--இஸ்றாயேலியர் சுவாமியுடைய கட்டளையின்படியே ஏதோமியரோடும் மோவாபியரோடும் அம்மோனியரோடும் போர் செய்யாமல், அமோறைய இராசாவாகிய செகோனோடு யுத்தம் பண்ணி அவனைச் செயித்தார்கள்.

1. பின்னுங் கர்த்தர் எனக்குச் சொல்லிய பிரகாரம் நாம் அங்கேயிருந்து புறப்பட்டுச் செங்கடலுக்குப் போகும் வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம் பண்ணி நெடுநாள் செயீர்மலை நாட்டைச் சுற்றித் திரிந்தோம்.

2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:

3. நீங்கள் இம்மலை நாட்டைச் சுற்றி நடந்தது போதும். இப்போது வடக்கே திரும்புங்கள்;

4. சனங்களைப் பார்த்து நீ கட்டளையிட வேண்டியது என்னவெனில், செயீரிலே குடியிருக்கிற எசாயூவின் புத்திரராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லைகளின் வழியாய்ச் செல்லப் போகிறீர்களே, அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்.

5. ஆகையால் நீங்கள் அவர்களோடு போராடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். நாம் எசாயூவுக்குச் செயீர் மலையைக் காணியாட்சியாகக் கொடுத்ததினால் அவர்கள் தேசத்தில் ஒற்றைக்காலால் எவ்வளவு மூடக்கூடுமோ அவ்வளவு கூட நாம் உங்களுக்குக் கொடோம்.

6.  தின்கிற பதார்த்தங்களைக் கிரயத்துக்கு வாங்கிப் புசிப்பீர்கள். தண்ணீரையும் அவர்கள் கையில் பணங் கொடுத்து மொண்டு குடிப்பீர்கள்.

6. உன் தேவனாகி கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வந்தார். நீ செல்லும் வழியையும் அவர் அறிந்திருக்கிறார். இந்தப் பெரிய வனாந்தரத்தை நீ கடந்த விதத்தையும் அறிந்திருக்கிறார். உன் தேவனாகிய கர்த்தர் நாற்பது வருஷம் உன்னோடு வாசம் பண்ணினதால் உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்றருளினார்.

8. அப்படியே நாம் செயீரில் குடியிருக்கிற நம்முடைய சகோதரர்களாகிய எசாயூ புத்திரர் நாட்டைக் கடந்தான பின்பு வெட்டவெளி வழியாய் ஏலாத் மேலும் அசியோங்கபர் மேலும் போய் மோவாப் வனாந்தரத்திற்கு வந்து சேர்ந்த போது,

9.  கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபியரை வருத்தப் படுத்தவும் வேண்டாம். அவர்களோடு போராடவும் வேண்டாம். ஏனெனில் நாம் லோத்துடைய புத்திரருக்கு ஆர் என்னும் பட்டணத்தின் நாட்டைச் சுதந்தரமாகக் கொடுத்தோம். அதில் உனக்கு ஒன்றுங் கொடோம் என்றார்.

10. எம்மியர் அதில் முதல் வாசிகளாயினர்; இவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால் பலத்த பெரிய சாதி; அவர்கள் நெடிய ஆட்களானதினாலே,

11. அவர்களும் இராட்சதர்களும் ஏனாக்கிமுடைய சாதியயன்று எண்ணப் பட்டவர்கள். விசேஷம்: அவர்கள் ஏனாக்கியர்ளை ஒத்தவர்கள். மோவாபியரோ அவர்களை எமிம் என்று சொல்லுவார்கள்.

12. செயீரிலே ஓறையர் முதல்முதல் குடியிருந்தார்கள். ஆனால் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தப் பூமியில் இஸ்றாயேலியர் எப்படிக் குடியேறினார்களோ அப்படியே எசாயூவின் புத்திரர் மேற்சொல்லிய ஓறையர்களைத் துரத்தியும் வெட்டியும் அவர்கள் தேசத்தில் குடியேறினார்கள்.

13. அது நிற்க, நாம் ஜாரேதென்கிற ஓடையைக் கடக்கவெழுந்து அதன் சமீபத்திற்கு வந்தோம்.

14. நாம் காதேஸ் பர்னேயை விட்டுப் புறப்பட்ட நாள் துவக்கி ஜாரேத் என்னும் ஆற்றைக் கடந்த நாள் வரைக்கும் சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷம்! அதற்குள்ளே அந்தச் சந்ததியைச் சேர்ந்த போர்வீரர் எல்லோரும் கர்த்தரின் ஆணையின்படிப் பாளையத்தின் நடுவிலிருந்து சங்கரிக்கப் பட்டார்கள்.

15. உள்ளபடி அவர்கள் பாளையம் நடுவினின்று மாண்டு அழியும்படியாகக் கர்த்தருடைய கை அவர்களுக்கு விரோதமாயிருந்தது.

16. அந்தப் போர்வீரர் எல்லாரும் மாண்டு போன பின்போ,

17. கர்த்தர் என்னைநோக்கி:

18. நீ இன்று மோவாப் எல்லைகளையும் ஆரென்கிற நகரத்தையும் தாண்டிப் போவாய்.

19. பின்பு அம்மோனின் புத்திரர் குடியிருக்கிற நாட்டுக்கடுத்த நாட்டில் சேர்ந்த போது நீ அவர்களை வருத்தப்படுத்தவும் யுத்தத்திற்கு அழைக்கவும் வேண்டாம்; எச்சரிக்கை! அவர்களின் தேசத்தை நாம் லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகத் தந்தோம். அதில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடோம்.

20. அது இராட்சதருடைய நாடென்று எண்ணப்பட்டது. ஏனென்றால் முற்காலத்தில் இராட்சதர் அங்கே குடியிருந்தார்கள். அம்மோனியர் அவர்களை யஸாம்யஸாம்மீம் என்றழைக்கிறார்கள்.

21. அந்த ஜனமோ பெரிய பலத்த சாதி. ஏனாக்கீமரைப் போல் நெடியர். கர்த்தரோ அம்மோனியருக்கு முன்பாக அவர்களை அழித்து அம்மோனியர்களை அவர்களுடைய ஸ்தானத்தில் குடியாயிருக்கச் செய்தார்.

22. அதற்கு முன் அவர் செயீரில் குடியிருக்கிற எசாயூ புத்திரருக்கு அவ்விதமாகவே உதவியாயிருந்து ஓறையரை அழித்து அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குக் கொடுத்தார். இந்நாள் வரைக்கும் (எசாயூவின் புத்திரர்) அதிலே குடியருக்கிறார்கள்.

23. அவ்வாறே ஆசேரீம் துடங்கி காஜா வரையிலும் குடியிருந்த ஏவையர் கப்பதோசியராலே துரத்தப்பட்டார்கள். இவர்கள் தங்கள் ஜன்ம தேசத்தை விட்டு அவர்களை அழித்து அவர்களுடைய ஸ்தானத்திலே குடியேறினார்கள்.

24. நீங்கள் எழுந்து அர்னோனென்கிற ஓடையைக் கடந்து போங்கள். இதோ நாம்ங அமோறையனான ஏயஸபோனின் இராசாவாகிய செகொனை உன் கையில் ஒப்பித்துக் கொடுத்தோம். அவன் தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்வதற்கு அவனோடு போராடு.

25.  வானத்தின் எங்குமுள்ள சனங்கள் உன் பெயரைச் சொல்லக் கேட்டு அச்சமுற்றுப் பிரசவிக்கும் ஸ்திரீகளைப் போல் வேதனைப் பட்டு ஏங்கிக் கலங்கத்தக்கதாக அதோ நாம் அவர்களுக்குத் திகிலும் பயமும் உண்டாகும்படி இன்று துடங்குவோம் என்று திருவுளம்பற்றினார்.

26. அப்பொழுது நான் கதேமோத் வனாந்தரத்திலிருந்து ஏயஸபோனின் அரசனான செகோனிடத்தில் சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி,

27. நாங்கள் உம்முடைய தேசத்தைக் கடந்து போக வேண்டும் வலது புறமும் இடது புறமும் சாயாமல் இராசபாதை வழியாய் நடப்போம்.

28. எங்களுக்குப் புசிக்க ஆகார வர்க்கத்தையும் குடிக்கத் தண்ணீரையும் நீர் கிரயத்திற்குத் தர வேண்டும். நாங்கள் கடந்து போக உத்தரவு கொடும்.

29. நாங்கள் யோர்தானைப் போய்ச் சேர்ந்து, எங்கள் ஆண்டவராகிய தேவன் எங்களுக்குக் கொடுக்க இருக்கும் பூமியில் நாங்கள் பிரவேசிக்கும் மட்டும் செயீரில் வாசஞ் செய்கிற எசாயூ புத்திரரும் ஆரிலே குடியிருக்கிற மோவாபியரும் உத்தரவு கொடுத்தது போல நீரும் உத்தரவு பொடுமென்று சொல்லி அனுப்பினேன்.

30. ஆனால் தன் தேசத்தைக் கடந்து போகும்படி ஏயஸபோனின் அரசனாகிய செகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை. ஏனெனில் இப்போது நீயே காண்கிறாப் போல உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக் காடுக்கும் பொருட்டு, அவன் மனதையுங் கடினப்படுத்தி அவன் இருதயத்தையும் அடைத்து விட்டிருந்தார்.

31. அப்பொழுது கர்த்தர் என்னைநோக்கி: இதோ செகோனையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுக்க ஆரம்பித்தோம். நீ அவன் தேசத்தை வசப்படுத்தத் துவக்கலாமென்றார்.

32. செகோனே தன் எல்லாச் சனங்களோடுகூட நம்முடன் யுத்தம் பண்ணப் புறப்பட்டு யாசாவுக்கு வந்தான்.

33. நமது தேவனாகிய கர்த்தர் அவனை நமது கையில் ஒப்புக்கொடுத்தார். ஆதலால் நாம் அவனையும் அவனுடைய குமாரர்களையும், அவனுடைய சகல ஜனங்களையும் முறியடித்தோம்.

34. அத்தருணத்தில் நாம் அவன் பட்டணங்களையயல்லாம் பிடித்து அதுகளில் வசித்திருந்த ஸ்திரீ பூமான்களையும், பிள்ளைகளையம் சங்காரம் பண்ணி, மீதியாக எதையும் வைக்காமல் எல்லாத்தையும் அழித்து விட்டோம்.

35. மிருக சீவன்களும் நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருட்களும் மாத்திரம் ஆரார் கையிலே அகப்பட்டதோ அவரவர் அவற்றை வைத்துக் கொண்டார்கள்.

36.  பள்ளத்தாக்கிலுள்ள அர்னோன் ஆற்ற்கரையிலிருக்கிற அரோயேர் பட்டணந் துடக்கிக் கலாத் வரையிலும் நாம் பிடிக்காத அரணிப்பான பட்டணமும் ஊரும் ஒன்றாவது இல்லை. நமது தேவனாகிய கர்த்தர் அவைகளையயல்லாம் நம்முடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்.

37. அம்மோன் புத்திரருடைய தேசத்தையும் ஜெபோக் என்கிற ஓடைக்கடுத்த ஊர்களையும், மலைகளிலுள்ள நகர் முதலிய ஸ்தலங்களையும் மாத்திரஞ் சேராமல் விலகிப் போனோம். ஏனென்றால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவற்றையயல்லாம் பிடிக்க விலக்கம் பண்ணியிருந்தார்.