யோவேல் ஆகமம் - அதிகாரம் - 01

வெட்டுக்கிளிகள் வந்து யூதேயா தேசத்தைச் சேதப்படுத்தும்.

1. பத்துவேல் குமாரனான யோவேல் என்போருக்கு அருளப்பட்ட ஆண்டவருடைய திரு வாக்கியமாவது:

2. வயோதிபரே, அதைக் கேளுங் கள்; உலக வாசிகளே, நீங்களெல்லோருஞ் செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாகிலும், உங்கள் பிதாக்கள் காலத்திலாகிலும் இஃதைப் போன்றேதாகிலும் நடந்ததுண்டோ (சொல்லுங்கள்.)

3. இதனை உங்கள் புத்திரருக்குச் சொல்லி வையுங்கள்; உங்கள் மக்கள் தம் குமாரருக்கும், அவர்கள் பிள்ளைகள் தம் பின் சந்ததிக்கும் அறிவிக்கக்கடவார்கள்.

4. கம்பளிப்பூச்சிக்கு மிகுந்ததை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளிக்கு மிகுந்ததைப் பச்சைப் புழு தின்றது; பச்சைப் புழுவுக்கு மிகுந்ததைப் பயிர்ப் பூச்சி அழித்தது.

* 4-ம் வசனம். நாலாம் வசனத்தில்: தீர்க்கத்தரிசியானவர் யூதாவை அழிக்க வேண்டிய பஞ்சம், கொள்ளை நோய், வானவறட்சி, கல்தேயர் படை எனும் இந்நால்வகைப் பட்ட எத்தனங்களைக் குறித்தும் பேசுகின்றனர்.

5. குடிவெறியர்காள்! விழித்திருங் கள்; பகு இன்பமாய் மதுபானஞ் செய் கிற நீங்கள் யாவரும் பிரலாபியுங்கள், கழறுங்கள்; ஏனெனில், (இனி புது மது பானம்) உங்கள் வாய்க்கெட்டாது.

6. மகா வலுவுடையதும் எண்ணில் அடங்காததுமான பிரசையொன்று நமது நாட்டின்மீது ஏறி வருகின்றது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள் போலாம்; அவைகள் பெண் சிங்கத்தின் கடை வாய்ப் பற்கள் போலாம்.

* 6-ம் வசனம். கல்தேயர் படையைக் குறிப்பிடுகிறது.

7. அது நம் திராட்சைச் செடியைக் காடாக்கி, நமது அத்தித் தருக்களைப் பட்டையுரித்து, (கனிகளின்றி) வெறுமை யாக்கிக் கீழே சாய்த்துவிட்டது; அதின் கிளைகள் வெளிறாக்கப்பட்டன.

* 7-ம் வசனம். கிளைகள் பூச்சிகளால் பட்டை உரிக்கப்பட்டால், வெளிறாயிருப்பது சகஜந்தானே.

8. கன்னிப் பருவத்தில் மணமுடித்து மரித்த ஆடவனை துக்கம் கொண்டாட சாக்குத் துண்டைப் போர்த்துக்கொண்ட அறுதலியைப்போல் கலுழுங்கள்.

9. ஏனெனில், கோதும்பையுடைய வும், திராட்ச இரசத்துடையவும், நிவேத னங்கள் ஆண்டவர் ஆலயத்தில் ஒழிந் தன; ஆண்டவருடைய ஊழியரான குருக் கள் (அதினிமித்தம்) பிரலாபிக்கின் றனர்கள்.

10. தேசம் நாசமடைய, பூமி கஸ்தி சாக ரத்துள்ளாழ்ந்தது; ஏனெனில் கோதும்பை சீரணித்தது; முந்திரிகை வாடல் கொண் டது; ஒலீவ் மரஞ் சோர்வுற்றது.

11. உழவர் மயங்குகின்றனர்; திராட் சத் தோட்டக்காரரோ, வயல்பயிர் மடிந்துபோகக் கோதும்பை, வாற் கோதும்பைக்கு (அநர்த்தம் வந்ததைப் பற்றியும்,)

12. முந்திரிகை சீரணித்துப் போனதை முன்னிட்டும், மாதளை, பேரீந்து, பேரி லந்தை முதலியன தோட்டத்துத் தருக்க ளெல்லாம் உலர்ந்தது காரணமாக வும், (கடைசியாக) மனுமக்களது சந்தோஷமே புகைந்து போனதைச் சிந்தித்தும் பெருங் குரல் பாச்சி அழுகின்றனர்.

* 12-ம் வசனம். சந்தோஷமும் புகைந்துபோயிற்று; மனுமக்களுக்குச் சந்தோஷங் கொடுக்கக் கூடியதும், ஆறுதல் தரத் தக்கதும் ஒன்றேனும் இல்லாமல் அழிக்கப்பட்டதாலே.

13. ஆசாரியரே, ஒட்டியாணம் அணிந்து பிரலாபியுங்கள்; பீடத்தில் ஊழியஞ் செய்யுங் குருக்களே ஓலமிடுங் கள்; எம்பிரானின் ஊழியரே, (ஆண்டவர் ஆலயம்) புகுந்து சாக்குத் துணடை (உடுத்து) சாஷ்டாங்கமாகக் கிடங்கள்; ஏனெனில், உங்கள் தேவனின் ஆலயத் தில் கோதும்பையுடையவும், இரசத் துடையவும் நிவேதனங்கள் அற்றுப் போயின.

* 13-ம் வசனம். தீர்க்கத்தரிசியர் புத்தி கூறுகின்றனர்.

14. சுத்த மனதுடன் ஒருசந்தி அநுஷ்டியுங்கள்; சங்கத்தை அழைத்து மூப்பர்களையும், தேசத்துச் சகல குடி களையும் உங்கள் தேவனின் ஆலயத்தில் கூட்டிவைத்து, ஆண்டவரைப் பார்த்து ஓலமிடுங்கள்.

15. சர்வேசுரனுடைய நாள் சமீபித் திருக்கிறது. இந்நாளுக்கு ஐயோ கேடாம்; அதுவே சர்வ வல்லபரிட மிருந்து புயல்போல் வரும்.

16. உங்கள் கண்முன் புசிகரணங் களெல்லாம் நாசமாயினவன்றோ? நம் தேவனின் ஆலயத்தில் சந்தோஷமும், கொண்டாட்டமும் (ஒழிந்ததன்றோ?)

* 16-ம் வசனம். தீர்க்கவசனர் இச்சம்பவங்களெல்லாம் அவர் கண்முன் நடப்பதுபோல் காட்சி காணுவதால் அங்ஙனம் பேசும்படியாயிற்று.

17. மிருக சாதிகள் (மரித்து) தன் அசுத்தத்திலேயே அழிகின்றன; கோதும்பை பாழாய்ப் போக, களஞ் சியங்கள் தானியமில்லாமல் வெறுமை யாய்ப் போயின; பண்டகச் சாலைகள் இடிக்கப்பட்டன.

18. மிருக சாதிகள் முறையமிடுவ தென்னே; மாடுகள் கதறுவதென்னே; அவைகளுக்கு மேய்ச்சல் இன்று; ஆட்டு மந்தைகளுஞ் சாகின்றன, இஃதே காரணம்.

19. ஆண்டவரே உம்மை நோக்கி அபயமிடுவேனாகவும்; ஏனெனில், நெருப்பானது காட்டில் சிறந்தவைகளை (எல்லாம்) பட்சித்தது; தீயானது வெளித் தோட்ட விருட்சாதிகளை எரித்து விட்டது.

* 19-ம் வசனம். தீர்க்கதரிசியரே, இங்கு ஆண்டவரை யூதேயா தேசத்துக்காக மன்றாடுகிறார்.

20. பயிர் நிலமானது எங்ஙனம் மழை மீது தாகித்திருக்குமோ, அதுபோல உம்மை நோக்கி: வெளித் தோட்ட மிருகங்களெல்லாந் தலை நிமிர்த்திய வண்ணமாயிருக்கின்றன; எனெனில், ஜல ஊற்றுகளெல்லாம் வறண்டுபோயின; நெருப்பும் காட்டிலுள்ள பிரியமானவைகளை (எல்லாம்) பட்சணஞ் செய்தது.