அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 01

சலோமோன் அரச அபிஷேகம் பெறுதல்.

1.  தாவீது இராசா வயது சென்று விருத்தாப்பியனானபோது அநேகம் போர்வைகளைப் போட்டாலும் உஷ்ண முண்டாகவில்லை.

2. அப்போது அவருடைய ஊழியக் காரர்கள் அவரை நோக்கி: எமது இராச சமுகத்தில் நினறு அவருக்குப் பணிவிடை செய்யவும், இராசாவாகிய எமது ஆண்ட வருக்கு உஷ்ணமுண்டாகும்படி அவரு டைய மார்பின்மீது படுத்துறங்கவும், இளம்பருவமான ஒரு கன்னியை எமது இராசாவாகிய ஆண்டவருக்குத் தேடு வோமென்று சொன்னார்கள்.

3. அப்படியே இஸ்றாயேல் எல்லைகளிலெல்லாம் அழகான ஒரு பெண் ணைத் தேடி, சூனாமித் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு அவளை இராசா விடங் கூட்டி வந்தார்கள்.  

4. அந்தப் பெண் வெகு அழகாயிருந் தாள். அவள் இராசாவுக்குப் பணிவிடை செய்து அவரோடுகூட படுத்துறங்கியும் இராசா அவளைத் தொடவேயில்லை.

5. ஆகீத்துக்குப் பிறந்த அதோனி யாஸ் என்பவன் நான் இராசா ஆவே னென்று சொல்லிக் கெம்பீரங்கொண்டு தனக்கு இரதங்களையுங் குதிரை வீரர் களையுந் தனக்கு முன் ஓடி ஐம்பது காலாட்களையுந் தயார்படுத்தினான்.

6. அவனுடைய தகப்பன், நீ அப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலுங் கடிந்துகொள்ளவில்லை; அவனும் அப்சலோனுக்குப் பிறகு பிறந்தவனும், மிகவும் அழகுள்ளவனுமா யிருந்தான்.

7. அவன் சார்லியாளின் குமார னாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியாத்தாரோடுங் கலந்திருந்தான்.  இவர்கள் அவனுடைய விகாதத்தில் அவ னைத் திடப்படுத்திக்கொண்டிருந்தார் கள்.

8. ஆனால் ஆசாரியராகிய சாதோக் கும் யோயியாதாவின் குமாரனாகிய பனாயாசும், தீர்க்கத்தரிசியாகிய நாத்தா னும், செமேயி, ரேயி, தாவீது இராசா வுடைய பராக்கிரம படைவீரர்களும் அதோனியாசுக்கு உடந்தையாயிருந்த தில்லை.

9. அதோனியாசோவென்றால் ரோகேல் கிணற்றிற்குச் சமீபத்திலுள்ள சோகெலெத்தென்னுங் கல்லின் அருகா மையில் ஆட்டுக்கடாக்களையும், காளை களையும், கொழுத்த சகல வித ஜீவஜெந் துக்களையும் பலியிட்டு இராசாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லோரை யும், இராசாவின் ஊழியத்திலிருந்த யூதா கோத்திரத்தார் அனைவரையும் அழைத் தான்.

10. ஆனால் தீர்க்கத்தரிசியான நாத் தானையும், பனாயாசையும், பராக்கிரம படை வீரர்களையும், தன் சகோதர னாகிய சலோமோனையும் அவன் அழைக்கவில்லை.

11. அப்போது நாத்தான் சலோமோ னின் தாயாகிய பெத்சாபேயை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக் குத் தெரியாமல் ஆகீத்தின் குமாரனாகிய அதோனியாஸ் இராசாவாகப் போகிற சேதியை நீர் அறியீரோ?

12. இப்பவும் உமது பிராணனையும், உமது குமாரனாகிய சலோமோனின் பிராணனையுந் தப்புவிக்கும்படிக்கு நீர் வாரும்; நான் உமக்குச் சொல்லும் ஆலோசனையின்படி நடவும்.

13. நீர் தாவீது இராசாவிடத்தில் போய்: இராசாவாகிய என் ஆணடவரே, எனக்குப் பின் என் குமாரனாகிய சலோ மோன் இராசாவாகி அவனே எனக்குப் பின் என் சிம்மாசனத்தின் மேல் வீற் றிருப்பானென்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா?  அப்படியிருக்க அதோனியாஸ் இராசாவாயிருக்கிறது எப்படி என்று அவரிடத்தில் நீர் கேளும்.

14. நீர் இராசாவோடு சம்பாஷித்துக் கொண்டிருக்கும்போது நானும் உமக்குப் பின்வந்து உமது வார்த்தைகளை உறுதிப் படுத்துவேனென்றான்.

15. அப்படியே பெத்சாபே இராசா வைக் காணப் பள்ளி அறைக்குள் சென்றாள்; இராசா மிகவும் வயதுசென் றவராயிருந்தார்; சூனாமித் ஊராளாகிய அபிஷாகை இராசாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

16. பெத்சாபே சாஷ்டாங்கமாய் விழுந்து இராசாவை வணங்கி நிற்க, இராசா: உனக்கு ஆகவேண்டியதென்ன வென்று வினவினார்.

17. அதற்கு அவள்: என் ஆண்டவரே, எனக்குப் பின் உமது குமாரனாகிய சலோமேனே இராச்சியபாரஞ் செய் வான்; அவனே என் சிம்மாசனத்தில் வீற் றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவ னாகிய ஆண்டவரைக் கொண்டு உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே;

18. அப்படியிருக்க என் ஆண்டவரா கிய இராசாவே, இதோ நீர் அறியாமல் அதோனியாஸ் இராசாவாகிறான்.

19. அவன் மாடுகளையும் நல்ல கொழுமையான நானாவித ஜீவஜெந்துக் களையும் அனேகமான ஆட்டுக்கடாக் களையும் பலியிட்டு இராசாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியாத் தாரையும் யோவாப் என்னும் படைத் தலைவனையும் அழைத்தான்.  உம் முடைய ஊழியனாகிய சலோமோனை மாத்திரம் அவன் அழைக்கவில்லை.

20. இராசாவாகிய என் ஆண்டவனே, இராசாவாகிய என் ஆண்டவனுக்குப் பிறகு தம்முடைய சிம்மாசனத்தின்மேல் வீற்றிருப்பவன் இன்னானென்று தாங் களே அறிவிக்கவேண்டுமென்று இஸ்றா யேலிய் அனைவரும் உம்மை எதிர் நோக்கி நிற்கிறார்கள்.

21. அப்படி அறிவிக்காமற் போனால் இராசாவாகிய என் ஆண்டவன் தம் முடைய பிதாக்களோடு சயனித்த பிற் பாடு நானும் என் குமாரனாகிய சலோ மோனுங் குற்றவாளிகளாய்ப் பாவிக்கப் படுவோம் என்றாள்.

22. இப்படியாய் இவள் இராசா வோடு பேசிக்கொண்டிருக்கும்போது தீர்க்கத்தரிசியாகிய நாத்தான் வந்தார்.

23. இதோ தீர்க்கத்தரிசியாகிய நாத் தான் வந்திருக்கிறாரென்ற இராசாவுக்கு அறிவித்தார்கள்.  அவரும் இராசாவின் சமுகஞ் சென்று சாஷ்டாங்கமாக அவரை வணங்கி:

24. இராசாவாகிய என் ஆண்டவளே, சலோமோன் எனக்குப் பிறகு இராச்சிய பாரஞ் செய்யவும், அவனே என் சிம்மா சனத்தின்மீது வீற்றிருக்கவும் வேண்டு மென்று நீர் சொன்னீர் அன்றோ?

25. ஆனால் அதோனியாஸ் இன்றை யத்தினம் வந்து மாடுகளையும், கொழுத்த மிருக ஜெந்துக்களையும், அநேகம் காளைகளையும் பலியிட்டு இராசாவின் குமாரர்கள் அனைவரையும் இராணுவத் தலைவரையும் ஆசாரிய ராகிய அபியாத்தாரையு முதலாய் அழைத்தான்.  அவர்கள் அவனோடு கூடிப் புசித்துக் குடித்து இராசாவாகிய அதோனியாஸ் வாழ்க! என்று சொன் னார்கள்!

26. ஆனால் உமது அடியானாகிய என்னை என்கிலும், ஆசாரியராகிய சாதோக்கை என்கிலும், உமது அடியானா கிய சலோமோனை என்கிலும் அவன் அழைக்கவில்லை.

27. இராசாவாகிய என் ஆண்டவ னால் இக்கட்டளை பிறந்ததுண்டோ?  இராசாவாகிய என் ஆண்டவனுக்குப் பிறகு தமது சிம்மாசனத்தில் வீறறிருப் பவன் இன்னானென்று உமதடியானாகிய எனக்கு நீர் தெரிவிக்கவில்லையோ? என,

28. தாவீது இராசா பிரத்தியுத்தார மாக: பெத்சாபேயை என் சமுகம் வர வழையுங்களென்றான்; அவள் இராசா சமுகஞ் சென்று, இராசாவின் முன்னிற்க, 

29. இராசாவானவர் அவளுக்கு ஆணையிட்டுச் சொன்னதாவது: சகலவித ஆபத்துக்களிலும் நின்று என் ஆத்து மாவை இரட்சித்த கடவுள் வாழ்க!

30. இஸ்றாயேல் தேவனாகிய கடவு ளின் பேரில் நான் ஆணையிட்டு உனது குமாரனாகிய சலோமோனே எனக்குப் பிறகு அரசாள்வான்; அவனே எனக்குப் பதிலாக எனது சிம்மாசனத்தில் வீற்றிருப் பான் என்று முன் உனக்குச் சொன்னேன்; அப்படியே இன்றே அதைச் செய்து முடிப் பேனென்றார்.  

31. அப்போது பெத்சாபே முகங் குப் புற விழுந்து இராசாவுக்கு சாஷ்டாங்கத்  தெண்டனிட்டு: எனது ஆண்டவனாகிய தாவீது இராசா நீடூழி வாழ்க! என்றாள்.

32. பின்பு தாவீது இராசா: ஆசாரிய ராகிய சாதோக்கையும், தீர்க்கத்தரிசி யாகிய நாத்தானையும், யோயியாதா வின் குமான் பனாயாசையும் என் சமுகம் வரவழையுங்கள் என்றார்.  அப்படியே அவர்கள் இராசாவின் சமுகம் வந்து சேரவே,

33. இராசா அவர்களை நோக்கி: நீங்கள் ஆண்டவருடைய ஊழியர்களைக் கூட்டிக் கொண்டு என் குமாரனாகிய சலோமோனை என் கோவேறு கழுதையின் மேல் ஏற்றி அவனைச் சிகோனுக்கு அழைத்துக்கொண்டு போங் கள்.

34. அங்கே ஆசாரியராகிய சாதோக் கும், தீர்க்கத்தரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்றாயேலியருடைய இராசா வாக அபிஷேகம் பண்ணக்கடவார்கள்; பின்பு எக்காளம் ஊதி இராசாவாகிய சலொமோன் வாழ்க! என்று வாழ்த்துங் கள்.

35. அதன் பின்பு நீங்களும் அவ னோடுகூட வரக்கடவீர்கள்; அவனோ வந்து என் சிம்மாசனத்தில் வீற்றிருந்து எனக்குப் பதிலாய் அரசாள்வான்; இஸ்றா யேலுக்கும் யூதாவுக்குந் தலைவனா யிருக்க நான் அவனுக்குக் கற்பிப்பே னென்றான்.

36.  அப்போது யோயியாதாவின் குமாரனாகிய பனாயாஸ் இராசாவுக்குப் பிரத்தியுத்தாரமாக: அப்படியே ஆகக் கடவது; இராசாவாகிய என் ஆண்டவ னின் தேவனாகிய கடவுளுடைய சித்த மும் அப்படியே நிறைவேறக்கடவது.

37. கடவுள் இராசாவாகிய என் ஆண் டவனோடு எப்படியிருந்தாரோ, அப்ப டியே சலொமோனோடுமிருந்து தாவீது இராசாவாகிய என் ஆண்டவனுடைய சிம்மாசனத்தை மேன்மைப்படுத்தின தைப் பார்க்கிலும், அவருடைய சிம்மா சனத்தைப் பிரபலியப்படுத்துவாராக என்றான்.

38. அப்படியே ஆசாரியராகிய சாதோக்கும், தீர்க்கத்தரிசியாகிய நாத்தா னும், யோயியாதாவின் குமாரன் பனா யாசும், கெரேத்தியரும் பெலேத்தியருஞ் சேர்ந்து சலொமோனைத் தாவீது இராசா வின் கோவேறு கழுதையின் மேலேற்றி, அவனைச் சிகோனுக்கு நடத்திக் கொண்டுபோனார்கள்.

39. ஆசாரியராகிய சாதோக்கு தைலக் கொம்பைப் பரிசுத்தக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுவந்து சலொமோனை அபிஷேகம் பண்ணினான். அப்போது எக்காளம் ஊதி சனங்களெல்லோரும் இராசாவாகிய சலொமோன் வாழ்க! என் றார்கள்.

40. பிற்பாடு ஜனங்கள் அவரைப் பின்தொடர அநேகர் நாகசுரம் ஊதி எல்லோரும் மகா பூரிப்பாகச் சந்தோஷங் கொண்டாடி ஆர்ப்பரிக்க, இச்சம்பவம் நாலாபக்கமுந் தெரியப்பட்டது.

41. அதோனியாசும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம் பண்ணி முடிந்தபோது அச்சப்தத்தைக் கேட்டார்கள்;  யோவாப் எக்காளமூது வதைக் கேட்டு, நகரத்தில் இவ்வளவான கூக்குரலும் ஆர்ப்பரிப்பும் என்னவென்று விசாரித்தான்.

42. அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆசாரியராகிய அபியாத்தாரின் குமாரன் யோனத்தாஸ் வந்தான்; அப் போது அதோனியாஸ் அவனை நோக்கி:  உள் பிரவேசி, நீ கெட்டிக்காரன், நீ நல்ல செய்தி கொண்டு வருபவன் என்றான்.

43. யோனத்தாஸ் அதோனியாசுக்குப் பிரத்தியுத்தாரமாக:  ஏது?  அதுக்கிட மில்லை; தாவீது இராசாவாகிய நமது ஆண்டவன் சலொமோனை இராசாவாக நியமித்துவிட்டார்.

44. இராசா ஆசாரியராகிய சாதோக் கையும், தீர்க்கத்தரிசியாகிய நாத்தானை யும், யோயியாதாவின் குமாரன் பனாயா சையும், கெரேத்தரையும், பெலேத் தரையும் அவனோடு அனுப்பினார்; அவர்கள் அவனை இராசாவினுடைய கோவேறு கழுதையின்மேல் ஏற்றினார் கள்.

45. அப்பொழுது ஆசாரியராகிய சாதோக்குந் தீர்க்கத்தரிசியாகிய நாத் தானும் அவனைச் சிகோனிலே இராசா வாக அபிஷேகம்பண்ணினார்கள். பிறகு  நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து வெகு சந்தோஷக் கூக் குரலுடன் புறப்பட்டுப் போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் சப்தம் அதுதான்.

46. சலொமோனும் இராசாங்கத்துக் குரிய சிம்மாசனத்தில் இந்நேரம் வீற்றிருக் கிறார்.

47. இராசாவின் ஊழியக்காரரும் தாவீது இராசாவாகிய நமது ஆண்டவ னுக்கு வாழ்த்துதல் சொல்ல வந்து: கடவுள் சலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப் பார்க்கிலும் அதிகமாய்ப் பிரபலியப்படுத்தி, அவ ருடைய சிம்மாசனத்தை உம்முடைய சிம்மாசனத்தைப் பார்க்கிலும் விஸ்தாரப் படுத்துவாராக என்றார்கள்;. இராசாவுந் தமது மஞ்சத்திலிருந்தே கடவுளை ஆரா தித்து: 

48. என் கண்கள் களிகூர இன்றையத் தினம் என் சிம்மாசனத்தின்மேல் என் மகனை வீற்றிருக்கச் செய்த இஸ்றாயே லின் தேவனாகிய கர்த்தருக்குத் தோத்திர முண்டாவதாக என்றார் என்றான் (யோனத்தாஸ்.)

49. அப்போது அதோனியாசின் விருந்தாளிகளெல்லாங் கிடுகிடென எழுந்து அவரவர் தங்கள் தங்கள் வழியே போய்விட்டார்கள்.

50. அதோனியாசும் சலொமோனுக் குப் பயந்து எழுந்து தீவிரமாய் ஓடி பலிப் பீடத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டான்.

51. அப்போது: இதோ அதோனியாஸ் இராசாவாகிய சலொமோனுக்குப் பயப் படுகிறானென்றும், இதோ, அவன் பலி பீடத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டு: இராசாவாகிய சலொமோன் தமது ஊழியனைப் பட்டயத்தால்  கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றுஞ் சலொமோனுக்கு அறிவித்தார் கள்.

52. அப்போது சலொமோன்: அவன் சன்மார்க்கமாய் நடந்தானேயாகில் அவன் தலைமயிரில் ஒன்றாகிலுந் தரை யில் விழப்போகிறதில்லை; துன்மார்க்க னாய் நடந்தானேயாகில் அவன் சாகத் தான் வேண்டுமென்றான்.

53. அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டு வர, இராசாவாகிய சலொ மோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து இராசாவாகிய சலொமோனை வணங்கினான்; சலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.