இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானாகமம் - அதிகாரம் 06

அரசரும் நீதிமான்களும் ஞானத்தையடைய வேண்டும்; நீதியில்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

1. பலத்தைவிட ஞானம் பெரிது. பலவானை விட ஞானி மேன்மையுள்ளவன்.

2. ஆனதால் அரசர்களே!கேட்டுக் கண்டுணர்ந்து கொள்ளுங்கள். உலகத்தில் நியாயந் தீர்க்கிறவர்களே! கற்றறியுங்கள்.

3. பிரசைகளே ஆளுகிறவர்களே! செவிகொடுங்கள். சனங்களை நடத்துகிறதில் பிரியங்கொள்ளுகிறவர்களே ! கேளுங்கள்;

4. கர்த்தரால்தானே உங்களுக்கு அதிகாரமும் வல்லமையும் கொடுக்கப்பட்டது. உங்கள் கிருத்தியங்களை கடவுள் தம் வல்லமையைக் கொண்டு உங்கள் நினைவுகளையும் விசாரித்து உங்கள் கிருத்தியங்களை பரிசோதிப்பார்.

5. நீங்கள் அவருடைய இராசாங்கத்தின் மந்திரிகளாயிருக்கையில் நியாயப்பிரகாரம் நீங்கள் தீர்மானித்ததுமில்லை ; நீதியின் முறைமையை நீங்கள் காப்பாற்றின துமில்லை. சர்வேசுரன் சித்தப்பிரகாரமும் நீங்கள் நடந்ததில்லை.

6. அவர் பயங்கரமான உக்கிரத்தோடும், சடுதியாயும் உங்கள் முகங்களுக்குத் தம்மைத்தானே காண்பிப்பரர். ஏனெனில் பிறர்மட்டில் அதிகாரம்பண்ணுகிறவர்களே கடினமாய் நடுத்தீர்க்கப்படுவார்கள்.

7. சாமானியர்களுக்கு இரக்கம் காண்பிக்கப்படும். பாவான்களோ பலமாய்த் தண்டிக்கப்படுவார்கள்.

8. சர்வேசுரன் சகலரையும் பாரபட்சமின்றி நடத்துவார். எவருடைய பெருமையையுங் கவனியார். ஏனெனில் சிறியோரையும் பெரியோரையும் அவரே உண்டுபண்ணினவர். சகலரையும் சரிசமானமாகவே பரிபாலனம் பண்ணுகிறார்.

9. அதிக பலவான்களுக்கோ அதிகமான தண்டனை விதிக்கப்படும்.

10. அரசர்களே நீங்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்ளவும், அதை விட்டகலாதபடிக்கும் இதுகளெல்லாம் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11. நியாயமான காரியங்களை நீதியாய்க் காப்பாற்றுகிறவர்கள் நீதிமான்கள் ஆவார்கள். அதுகளைக் கற்றவர்கள் எவர்களோ அவர்கள் தங்கள் கிருத்தியங்களுக்கு நியாயஞ் சொல்லக்கூடுமாயிருக்கும்.

12. என் வார்த்தைகளை ஆவலோடு ஆசியுங்கள், அதுகளை நேசியுங்கள், ஆதனால் உங்களுக்கு அறிவுண்டாகும்.

13. ஞானம் பிரகாசிக்கும் (நட்சத்திரம் போல ) இருக்கிறது. அது ஒருபோதும் மங்கிப்போகிறதில்லை. அதை நேசிப்பவர்கள் எளிதில் அதைக் காண்பார்கள். அதைத் தேடுகிறவர்கள் அதைக் கண்டடைவார்கள்.

14. அதை ஆசிக்கிறவர்கள் ஆசியாமுன்னமே அவர்களுக்குத் தன்னைத்தானே காண்பிக்கின்றது.

15. அதிகாலமே அதை யடையத்தேடுகிறவன் எவனோ அவன் வெகு பிரயாவைப்படவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தன் கதவோரத்திலே அது உட்கார்ந்திருப்பதைக் காண்பான்.

16. ஞானத்தைப்பற்றி நினைக்கிறவன் எவனோ அவன் மகா புத்திசாலி. அதை அடைய விழித்திருக்கறவன் சீக்கிரத்தில் இளைப்பாற்றியை அடைவான்.

17. தன்னை அடையப் பாத்திரவான்கள் யாரென்றறிய ஞானமானது சுற்றிவந்து பார்க்கிறது. சந்தோஷமாய் தன்னை அவர்களுக்கு வழியில் காண்பிக்கின்றது. சர்வ சாக்கிரதையோடும் அவர்களுக்கெதிரே போகின்றது.

18. ஞானத்தின் துவக்கம் அறிவின் மெய்யான ஆசை.

19. அறிவின் ஆசை ஞானத்தின் நேசம். ஞானத்தின் நேசமோ அதின் சட்டத்திட்டங்களைக் காத்தல். சட்டதிட்டங்களைக் காத்தலோ ஆத்தும உன்னத பரிசுத்தத்தை உறுதிப்படுத்தலாம்.

20. உன்னத பரிசுத்தத்தனம் சர்வேசுரனையண்டி நெருங்கும்படி செய்கின்றது.

21. ஞானத்தை அடையவேண்டுமென்னும் ஆசை நித்தி இராச்சியத்திற்கு அழைத்துப்போகின்றது.

22. சிம்மாசனம் மட்டிலும் செங்கோல் மட்டிலும் நீங்கள் பிரியங்கொண்டிருந்தால், ஒ சனங்களுடைய அரசர்களே! நித்தியத்திற்கும் ஆளும்படியாக ஞானத்தை நேசியுங்கள்.

23. சனங்களின்மேல் அதிகாரஞ் செலுத்தும் சகலருமே நீங்கள் ஞானத்தின் ஒளியை நேசியுங்கள்.

24. ஞானம் என்னவென்றும், எவ்விதமுண்டானதென்றும் இப்போது சொல்வேன். சர்வேசுரனுடைய இரகசியங்களை நான் உங்களிடத்தினின்று ஒளிக்கப்போகிறதில்லை. அதுண்டானதுமுதல் சகலமும் ஆராய்ந்துவெனியாக்கி உண்மை யாதொன்றையும் விடாமல் தெரிவிப்பேன்.

25. காய்மகாரத்தால் வருந்தினவனைப் போல நான் நடக்கப்போகிறதில்லை. ஏனென்றால் அப்பேர்ப்பட்டவன் ஞானத்தை அடையான்.

26. ஞானிள் கூட்டம் பூமியின் சுகம், ஞானமுள்ள அரசன் சனங்களின் தேற்றரவு.

27. ஆனதால் என் வார்த்தைகளால் அறிவடையுங்கள். ஆதனால் உங்களுக்குப் பிரயோசனமுண்டாகும்.