இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானாகமம் - அதிகாரம் 05

நீதிமான்களுடைய மகிமையும் -பாவிகளுடைய கலக்கமும்.

1.  அப்பொழுது நீதிமான்கள் தங்களை வருத்தித் துன்பப்படுத்தித் தங்கள் வேலைகளின் பலனை அபகரித்தவர்களுக்கு  விரோதமாய் மகா தைரியத்தோடு எழுந்து நிற்பார்கள்.

2. அதைப் பாவிகள் கண்டு கலங்கி மிகவும் பயந்து தங்கள் எண்ணத்துக்கு விருத்துவாய் அவர்ள் இரட்சிக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்து.

3. மனஸ்தாபப்ப்டடு மனநொந்து  பெருமூச்சுவிட்டு தங்களுக்குள்ளே: இவர்களையல்லோ நாம் பலமுறை நிந்தித்தோம்,சகல நித்தைகளுக்கும் பாத்திரவான்களென்று எண்ணினோம்.

4. புத்தியீனராகிய நாம் அவர்கள் சீவியம் பைத்திமென்றும், அவர்கள் மரணம் இழிவான தென்றும் நினைத்தோமே.

5. இதோ சர்வேசுரனுடைய மக்களாகப் பாவிக்கப்பட்டுப் பரிசுத்தத்தோடு கூட்டப்பட்டிருக்கிறார்கள்.

6. நாமல்லோ சத்தியத்தின் மார்க்கத்தை விட்டகன்று திரிந்தோம். நீதியின் ஒளி நமக்கல்லோ பிரகாசிக்கவில்லை. அறிவின் சூரியன் நமக்கல்லோ உதிக்கவில்லை.

7. அக்கிரமப் பாவவழியில் நடந்து தவித்தோம். கஷ்டமான வழிகளைக் கடந்தோம். ஆனால் கர்த்தருடைய வழியை நாமறிந்ததில்லை.

8. ஆங்காரத்தினால் நமக்கு வந்த பலனென்ன ? ஆஸ்திகளின் மகத்துவத்தால் நமக்குண்டான இலாபமென்ன?

9. சகலமும் நிழலைப்போலவும்,ஒட்டமாயோடுந் தூதனைப்போலவும்,

10. அலைந்தாடுஞ் சமுத்திரத்தைக் கடக்கும் கப்பலைப்போலவுங் கடந்துபோயின. கப்பல் போனமாத்திரத்தில் அது போனவழியின் அடையாளம் ஒருவருங் காண்கிறதில்லை. அலைகளில் அதன் மார்க்கம் பதிகிறதில்லை.

11. வானத்தில் பறக்கும் பறவை செல்லும் வழிகளுக்கு புலப்படுவதில்லை.ஆனால் அதின் இறக்கைகள் காற்றை மோதி ஆகாயத்தை அடிக்கும் சத்தமாத்திரங் கேட்கின்றது. இறக்கையை அசைத்துப் பறந்துபோனது. பிறகு வழியின் அடையாளம் ஒன்றையும் காணோம்.

12. அல்லது குறித்து விடத்துக்கு எய்யப்பட்ட அம்புபோலாகும் பிரித்த ஆகாயம் உடனே ஒன்று சேர்வதால், அம்பு கடந்த வழி தெரியாது.

13. இதுபோலவே பிறந்த நாம், தட்சணமே முடிவடைந்த பலத்தின் அடையாளம் ஒன்றுங் காண்பிக்க நம்மால் கூடுமாயில்லை. நமது கெட்ட தன்மையினாலேயே நாம் நிர்மூலமானோம்.

14. என்று பாவிகள் நரகத்திலே சொல்லிக்கொள்ளுவார்கள்.

15. பாவிகளுடைய நம்பிக்கை எத்தகைப்பட்டதா யிருக்கின்றதென்று கேட்டால்: காற்றினால் கொண்டுகோகப்படும் சிறு தூசியைப்போலவும், புயலினால் துரத்தப்படும்  கடல் அலைகளைப்போலவும், காற்றினால் விசிறியடிக்கப்படும் புகையைப்போலவும், ஒரேயொரு நாள் விருந்தாடியாகவந்து போனவனுடைய நினைப்பைப்போலவும் இருக்கின்றது.

16. நீதிமான்கள் என்றென்னைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு ; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார்.

17. ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது.

18. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழிவாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார்.

19. இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக்கொள்ளுவார்.

20. ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.

21. ஆற்றக்கூடாத தமது கோபத்தைத் தீட்டி வேலாக்குவார்.பூலோக முழுவதும் அவைகள் அவருடன் நின்று பாவிகளை எதிர்த்துப் போராடும்.

22. இடிகள் அவர்களுக்கு நேரே செல்லும். திட்டமாய் வளைக்கப்பட்ட வில்லுகளினின்று அம்புகள் புறப்படுவதுபோல மேகங்களினின்று எறியப்பட்டு குறித்தவிடத்தில் விழுவார்கள்.

23. கற்கள் எறியும் யந்திரத்தைப்போல தேவ கோபம் அவர்கள்மேல் கன்மாரி பொழியும் . சமுத்திரத்தின் அலைகள் அவர்களைக் கோபமாய்த் தாக்கும். அவர்களை எதிர்க்க நதிகள் உக்கிமத்தோடு கரை பிரண்டோடும்.

24. அகோரக் காற்று அவர்கள்பேரில் எழும்பிச் சுழலைப்போல் அவர்களைச் சிதறடிக்கும். அவர்கள் அக்கிரமமானது பூமியைக் காடாக்கும். அவர்களுடைய கெட்ட எண்ணத்தினால் அரசர்களின் சிம்மாசனங்கள் கவிழ்ந்துவிடும்.