நீதிமான்களுக்குண்டாகுஞ் சந்தோஷமும் மகிமையும்.
1. நீதிமான்களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய கரங்களிலிருக்கின்றன . சாவின் பயங்கரம் அவர்கள் அண்டாது.
2. புத்தியீனருடைய கண்களுக்கு முன்பாக மரித்தவர்களாகத் தோன்றினார்கள். அவர்கள் பூலோகத்தை விட்டுப் பிரிந்தது ஒர் பெருந் துயரம்போல் எண்ணப்பட்டது.
3. நம்மிடமிருந்து அவர்கள் பிரிந்தபோனதோ.நிர்முலமென்று நினைக்கப்டுகிறது. ஆனால் அவர்களோ சமாதானதத்தில் இளைப்பாறுகிறார்கள்.
4. மனிதருக்கு முன்பாக வேதனையடைந்திருந்தபோதிலும் , அவர்கள் நம்பிக்கையோ நித்தியத்தால் நிரம்பியிருக்கிறது.
5. அற்பக் கஸ்தியடைந்த பின் அவர்கள் அடையும் சம்பாவனையோ பெரிதானதாயிருக்கும் ; ஏனென்றால் சர்வேசுரன் அவர்களைப் பரிசட்சித்துப் பாத்திரவான்களாககட கண்டார்.
6. பொன் உலையிற் பரிசோதிக்கப்படுமாப்போல பரிசோதித்து அவர்களைச் சர்வாங்க பலியின் பொருளாக ஏற்றுக்கொண்டு தகுந்த தருணத்தில் அவர்களைத் தயவோடு நோக்குவார்.
7. நாணற்செடிகளுக்குள் நெருப்புப்பொறிகள் எரிந்து பிரகாசித்தது போல நீதிமான்கள் பிரகாசிப்பார்கள்.
8. மனுஷசாதிகளுக்கு மனுஷர்களை நடுத்தீர்ப்பார்கள். சனங்களுக்குள் அதிகாரஞ்செலுத்துவார்கள். கர்த்தர் அவர்களை என்றென்றைக்கும் அரசாளுவார்.
9. அவரை நம்பினதினால் உண்மையைக் கண்டுபிடிப்பார்கள். அவருடைய நேசத்தில் பிரமாணிக்க முள்ளவர்களானதால் அவரிடத்தில் நிலை கொள்ளுவார்கள். ஏனென்றால் தேவ வரமும் சமாதானமும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக் குரித்தானது.
10. அக்கிரமிகளோ . அவர்கள் எண்ணத்துக்குத் தக்கவண்ணந் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் நீதிமானைப் புறக்கணித்தே கர்த்தரிடத்தினின்று அகன்றார்கள்.
11. ஞானத்தையும், ஒழுக்கத்தையும் புறக்கணிக்கிறவன் நிர்ப்பாக்கியனாவான். அவனுடைய நம்பிக்கை வியர்த்தம் ; பிரயாசையோ பலனற்றது . செய்கைகளோ பிரயோசனமற்றதுகள்.
12. அவர்கள் மணைவிகள் புத்தியீனர்; பிள்ளைகளும் மகா துன்மார்க்கர்.
13. அவர்கள் சந்ததி சபிக்கப்பட்டது. ஏனென்றால் தன் படுக்கையை அசுத்தப்படுத்தாத கற்புள்ள ஸ்திரீ மலடியாயிருந்தாலும் பாக்கியவதியே ; பரிசுத்த ஆத்துமாக்களைச் சர்வேசுரன் தயாளமாய் விசாரிக்கும் போது அப்போதே அவள் சம்பாவனை பெறுவார்கள்.
14. தன் கைகளால் அக்கிரமத்தைக் கட்டிக்கொள்ளாதவனும் , சர்வேசுரனுக்கு விரோதமாகப் பாவ நினைவுகளை நினையாதவனுமான அண்ணன் (பாக்கியவான்) ; ஏனெனில் : அவன் பிரமாணிக்கத்திற்கு விலையுயர்ந்த வரமும்,சர்வேசுரனுடைய ஆலயத்தில் மகத்தான சம்பாவனையுங் கொடுக்கப்படும்.
15. நற்கிரிகைகளின் பலன் மகிமை நிறைந்ததாயிருக்கின்றது.ஞானத்தின் வேர் ஒருபோதும் காய்ந்துபோகாது.
16. விபசாரிகளின் பிள்ளைகள் முதிர்ந்த வயதையடையார்கள் .விபசார சந்ததி நிர்மூலமாகும்.
17. அவர்கள் நெடுங்காலஞ் சீவித்தாலும் மதிப்பற்றவர்களா யிருப்பார்கள் ; அவர்கள் விருத்தாப்பிய அந்தியத்திலும் மரியாதையற்றவர்களா யிருப்பார்கள்.
18. கொஞ்சத்துக்குள் மரித்தாலோ நம்பிக்கை யாதொன்றுமில்லாமலும், சகலமும் வெளிப்படும் . (தீர்வை) நாளில் ஆறுதல் வார்த்தை யாதென்றுமில்லாமலும் இருப்பார்கள்.
19. உள்ளபடியே அக்கிரமிகளின் முடிவு பயங்கரத்திற் குரியதாயிருக்கின்றது.