இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானாகமம் - அதிகாரம் 01

நியாயாதிபதிகள் நீதியைத் தேட வேண்டுமென்பதும், -நேர்மையும் கபடற்ற தனமுள்ள இருதயத்தோடு சர்வேசுரனைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவர்கள்; அசுத்த இருதயமுள்ளவர்களை விட்டு அவர் அகலுவார் என்பதும்.

1. பூமியில் நீதிசெலுத்துகிறவர்களே நீதியை நேசியுங்கள் ; கர்த்தர் நம்மை நிறைந்தவரென்று கண்டு அதற்கேற்ற விதமாய் அவரை உணர்ந்தறியுங்கள்; கபடற்ற இருதயத்தோடு அவரைத் தேடுங்கள்.

2. ஏனென்றால், அவரை நம்பி ஆராய்ந்திருக்கிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள்; அவர்மட்டில் எவர்கள் நம்பிக்கை வைத்தார்களோ அவர்களுக்கு அவர் தம்மை வெளியாக்குகின்றார்.

3. துன்மார்க்க எண்ணங்கள் சர்வேசுரனிடத்தினின்று பிரிக்கின்றன; அவருடைய வல்லமையைச் சோதிப்பவர்களோ புத்தியீனராக எண்ணப்படுவார்கள்.

4. ஏனெனில், கெட்ட எண்ணமுள்ள ஆத்துமத்தில் ஞானமானது பிரவேசியாது; பாவத்துக்கு அடிமைப்பட்ட சரீரத்தில் வாசஞ் செய்யாது.

5. ஏனென்றால் அறிவின் ஆதிமூலமாகிய இஸ்பிரீத்துசாந்துவானவர் அபத்தத்தை விட்டகலுகிறார் ; அறிவற்ற எண்ணங்களை (எண்ணுகிறவர்களிடத்தினின்று) விலகுகின்றார்; அக்கிரமம் ஆத்துமத்தில் பிரவேசிக்கவே அவர் அதை விட்டு அகன்றுபோகிறார்.

6. ஞானமானது தன் இயற்கையின் உரிமையினால், தயாளதுள்ளது; ஆனால் (சர்வேசுரன்) அபத்தஞ் சொல்லுகிறவனைத் தண்டியாமல் விடமாட்டார் ; ஏனெனில் அது உள்ளாந்தரங்க எண்ணங்களைப் பூரணமாயறிகிறது ;அது இருதயத்தை மெய்யாகவே பரிட்சிக்கிறது ; அது சொற்களைளயெல்லாங் கேட்கிறது.

7. ஏனென்றால் கர்த்தருடைய இஸ்பிரீத்தானவர் பூலோகத்தை நிரப்பினார் ;அவரிடத்தில் சகலமுமடங்கியதால் அவர் சொல்லப்படும் யாவையும் அறிவார்.

8. ஆகையினால்தான் அக்கிரம வாக்கியங்களைச் சொல்லுபவன் தன்னை மறைப்பது கூடாது. அவன் தண்டனைத் தீர்ப்புக்குந் தப்பித்துக்ககொள்ளமாட்டான்.

9. ஏனென்றால் அக்கிரமியினுடைய நினைவுகள் பரிசோதிக்கப்படும் ; அவன் அக்கிரமங்கள் தண்டிக்கப்படுவதற்கே அவன் சொல்லும் வார்த்தைகள் சர்வேசுரன் மட்டுஞ் சொல்லும்.

10. சர்வேசுரனுடைய நீதியுள்ள செவிகள் சகலத்தையுங் கேட்கின்றன ; முறைப்பாடுகளின் சத்தம் அவரிடத்தினின்று மறைக்கப்படுவதில்லை.

11. ஆனதால் பிரயோசனமற்ற முறைப்பாடுகளைத் தவிர்த்துவிடுங்கள் ; புறணி வார்த்தைகளினின்று உங்கள் நாவைக் காப்பாற்றுங்கள் ;ஏனென்றால் இரகசிய வார்த்தைகள் தண்டிக்கப்படாதிருக்கமாட்டாது; பொய் சொல்லும் வாக்கு ஆத்துமத்தைக் கொலை செய்கின்றது.

12. உங்கள் சீவிய அலங்ககோலையினால் மரணத்தை ஆவலாய்த் தேடாதேயுங்கள் ; உங்கள் கைகளின் கிருத்திங்களினால் மோசமடையாதேயுங்கள்.

13. ஏனெனில் சர்வேசுரன் மரணத்தை உண்டுபண்ணினவரல்ல. தேடாதேயுங்கள்; உங்கள் கைகளின் கிருத்திங்களினால் மோசமடையாதேயுங்கள்.

13. ஏனெனில் சர்வேசுரன் மரணத்தை உண்டுபண்ணினவரல்ல, சீவியர்களுடைய நிர்மூலத்தில் சந்தோஷிக்கிறவருமல்ல.

14. சகலமும் நிலைத்திருக்கும்கçயாகச் சிருஷ்டித்தார் ; பூமிமீது சகல சனங்களையும் சீர்திருத்தலுக் கேதுவானவைகளாய் உண்டாக்கினார். அவர்கள் கெட்டு நாசமடைவதற்கு அவர்களிடத்தில் கெடுதியானது ஒன்றுமில்லை ; நரக இராசாங்கமும் பூமியிலிருக்கிறதில்லை.

15. நீதியானது நிலைமையுள்ளதாயும் நித்தியமானதாயும் இருக்கின்றது.

16. அக்கிரமிகளோ தங்கள் கிரியைகளினாலும் வார்த்தைகளினாலும் மரணத்தை அழைத்தார்கள். அது தங்கள் நேசனென்று எண்ணி அதற்குட்பட்டு அதனுடன் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். ஏனென்றால் சாவுக்குரியவர்கள் சாவுக்கே பாத்திரமானார்கள்.