காணிக்கை தர வந்தோம் ***

காணிக்கை தர வந்தோம் - உன்
மலரடி பாதங்கள் வணங்க வந்தோம்
வரங்களைப் பொழியும் நாயகனே - எம்
கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்
உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்

1. இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்
சந்தன மலர்களை எடுத்து வந்தோம்
தீபங்கள் ஏந்தி திருமுன் ஏற்ற கூடி வருகின்றோம்
உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி
எம்மையே தருகின்றோம் ஆ

2. கோதுமை கதிர்மணி போல் இணைந்து எம்
வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்
நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம்
வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற
எம்மையே தருகின்றோம் ஆ