இறைமக்கள் யாவரும் கூடிடுவோம் ***

இறைமக்கள் யாவரும் கூடிடுவோம்
இறைவனைப் புகழ்ந்து பாடிடுவோம்
இறைபணி தனைச் செய்ய அவர் அழைத்தார்
அவர் புகழ் பாடிடுவோம்

1. அன்பாலே இறைவன் தன்னைக் கொடுத்தார்
அருளாலே நம்மை அரவணைத்தார்
நாம் அவர் மந்தையின் ஆடுகளாம்
பலியாக நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவர் அழைத்தார் அன்பில் பணித்தார்
இறையரசு பெருகிடவே

2. குருவோடு சேர்ந்து நாம் ஆலயத்தில்
குடும்பமாய் பலிதனை செலுத்திடுவோம்
இறைமகன் உடலை நாம் உண்டிடுவோம்
இறைமக்கள் என நாம் வாழ்ந்திடுவோம்
அவர் அன்பின் குரல் நாம் கேட்டிடுவோம்
இறையசை பரப்பிடுவோம்