பலிபீடத்தில் வைத்தேன் என்னை ***

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும்

1. நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே
நின் சித்தம் போல் உம் கரத்தால்
நித்தம் வழிநடத்தும்

2 வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம்
வாருமய்யா வந்து என்னை
வல்லமையால் நிரப்பும்

3. பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க
பரிசுத்தமான உம் இரத்தத்தால்
பரிசுத்தமாக்கி விடும்